அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

அனிகா
பிரீமியம் ஸ்டோரி
News
அனிகா

சமந்தா, தான் லீட் ரோல் செய்திருக்கும் ‘சாகுந்தலம்’ படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார். சற்றே உடல்நிலை சரியாகிவரும் சமந்தா, அடுத்தடுத்து கதை கேட்கும் வேலைகளிலும் தீவிரமாகிவிட்டாராம்.

சத்யராஜ் மலையாளம், தெலுங்கு எனப் படப்பிடிப்பில் பரபரப்பாக இருக்கிறார். தமிழைக் காட்டிலும் பிற மொழிப் படங்களிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தவண்ணம் இருக்கிறதாம். அதனால், தமிழில் ஹாட் ஸ்டார் தயாரிப்பில், சசிகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘குற்றப் பரம்பரை’ வெப் சீரீஸுக்கு சத்யராஜால் தேதி ஒதுக்க முடியாத நிலையாம். மனதுக்கு நெருக்கமான கதையில், மிக முக்கிய பாத்திரத்தைத் தவறவிடுவது அவரை ரொம்பவே வருத்தத்தில் ஆழ்த்திவிட்டதாம். சத்யராஜுக்கு பதிலாக சரத்குமாரைப் பயன்படுத்தும் திட்டத்தில் இருக்கிறாராம் சசிகுமார்.

ஆர்யாவின் ‘கேப்டன்’ படத்தைத் தயாரித்த திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம், அடுத்த படைப்பாக யோகி பாபுவை வைத்து ‘லக்கி மேன்’ படத்தை முடித்திருக்கிறது. படத்தில் யோகி பாபுவுக்கு ரியல் எஸ்டேட் புரோக்கர் பாத்திரமாம். காப்பி முடித்துப் பார்த்த வகையில் படக்குழுவுக்குக் கட்டுக்கடங்காத சந்தோஷமாம். “இந்தப் படத்துக்குப் பிறகு என் சம்பளத்தையே தைரியமாக உயர்த்தலாம்” என்கிறாராம் யோகி பாபு. அந்தளவுக்கு ‘லக்கி மேன்’ படம் அவருக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறதாம். “அடுத்து யார் படம் சார்?” எனக் கேட்டால், “அ.வினோத்கூட கதை சொல்லியிருக்கார். பார்க்கலாம்…” என்கிறாராம் யோகி.

மிஸ்டர் மியாவ்

சமந்தா, தான் லீட் ரோல் செய்திருக்கும் ‘சாகுந்தலம்’ படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார். சற்றே உடல்நிலை சரியாகிவரும் சமந்தா, அடுத்தடுத்து கதை கேட்கும் வேலைகளிலும் தீவிரமாகிவிட்டாராம். ‘சாகுந்தலம்’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு அடுத்த படங்களுக்கான சம்பளத்தைப் பேசலாம் எனத் தன் மேனேஜரிடம் சொல்லிவிட்டாராம் சமந்தா. உடல்நிலை சரியில்லாதபோது அக்கறையாக விசாரித்த அத்தனை பேருக்கும், தான் குணமாகிவரும் தகவலையும் சொல்லிவருகிறார் சமந்தா. சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் அம்மணியை ஜோடியாக்க இப்போதே பேசிவருகிறார்களாம்.

‘அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பதுதான் கோடம்பாக்கத்தின் ஹாட் கேள்வி.

சமூக ஊடகங்களில் தினம் தினம் ஓர் இயக்குநரின் பெயர் இதில் அடிபடுகிறது. அந்த லிஸ்ட்டில் இந்தமுறை இயக்குநர் பி.எஸ்.மித்ரன். கார்த்தியை வைத்து அவர் இயக்கிய ‘சர்தார்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூலாகச் சாதித்தது. ‘சர்தார் - 2’ எடுக்க தயாரிப்புத் தரப்பும் ரெடியான நிலையில், அடுத்தக்கட்ட ஹீரோக்களை அணுக நினைக்கிறாராம் பி.எஸ்.மித்ரன். எனவே, யாரோ கிளப்பிவிட்ட அந்தத் தகவலை எப்படியாவது உண்மையாக்க வேண்டும் என முயன்றுவருகிறாராம்!

உஷ்...

சென்னை மாநகரத்தின் முக்கிய டைரக்டர், கடுமையான மனக்குழப்பத்தில் இருக்கிறாராம். ஹெவி பட்ஜெட், குறைவான நாள்களில் முடிக்கவேண்டிய கட்டாயம், கடும் குளிரான லொக்கேஷன் எனப் பலவிதமான சிரமங்களால் படப்பிடிப்புத் தளத்திலேயே நிறைய குளறுபடிகளாம். படத்தின் நாயகனுடன் முட்டல் வருகிற அளவுக்கு மோதல் பெரிதாவதுதான் பலரையும் பயமுறுத்துகிறதாம்!