அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
News
மிஸ்டர் மியாவ்

விரைவில் அர்ச்சனாவுக்கென்றே தனியாக ஒரு ஷோ தொடங்கப்படலாம்

* கொரட்டாலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி தற்போது நடித்துவரும் ‘ஆச்சார்யா’ படத்தை முடித்த பிறகு, மோகன் ராஜா இயக்கத்தில் மலையாளப் படமான ‘லூசிஃபர்’ ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். இதில், சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறாராம். ‘ஸ்டாலின்’ படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து சிரஞ்சீவிக்கு ஜோடி போடுகிறார் த்ரிஷா. இந்தப் படத்தில் நயன்தாராவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* ‘பிக் பாஸுக்குப் பிறகு ஷோ தரப்படும்’ என விஜய் டி.வி தரப்பு உறுதியாகக் கூறிய பிறகே, ஜீ தமிழ் சேனலைவிட்டு வெளியேறி பிக் பாஸில் கலந்துகொண்டார் அர்ச்சனா. இப்போது காதலர் தின ஸ்பெஷல் ஷோவைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. விரைவில் அர்ச்சனாவுக்கென்றே தனியாக ஒரு ஷோ தொடங்கப்படலாம் என்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

*ஜீ 5 தளத்தில் வெளியான ‘க/பெ. ரணசிங்கம்’, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ‘பாவக் கதைகள்’ எனத் தனது ஆக்டிங் கரியரைத் தொடங்கிய ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நாயகியாக நடிக்கிறார். சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் சூரியை ஹீரோவாகவும், விஜய் சேதுபதியை முக்கியக் கதாபாத்திரமாகவும் வைத்து வெற்றிமாறன் எடுத்துக்கொண்டிருக்கும் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிக்கிறார் பவானி ஸ்ரீ.

*‘பாம்புசட்டை’ படத்தின் இயக்குநர் ஆடம் தாசன், தற்போது இரண்டாவதாக இயக்கிவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படத்தில் வனிதா விஜயகுமார் ஹீரோயினாக நடித்துவருகிறார். கடந்த ஒரு மாதமாகப் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், இந்தப் படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக கருணாகரன் நடிக்கிறாராம்.

உஷ்...

உச்ச நடிகருக்கு தங்கையாக நடிக்கும் மகா நடிகைக்கு, தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மொழிப்படங்களிலிருந்தும் தொடர்ந்து தங்கை கதாபாத்திரங் களாகவே வாய்ப்புகள் வருகின்றனவாம். இதனால் டென்ஷனான நடிகை, ‘கதைக்கு முக்கியத்துவம் இருந்ததால் தான் அந்தத் தங்கை கேரக்டரில் நடித்தேன். ஓ.டி.டி-யில் வெளியான என்னுடைய சில படங்கள் சொதப்பியதால்தான் தொடர்ந்து இப்படியான கேரக்டர்களாகவே வருகின்றன; சீக்கிரமாகவே ஒரு வெற்றிப்படத்தைக் கொடுக்கிறேன்’ என, தன் நட்புவட்டத்தில் சவால் விட்டிருக்கிறாராம்.