
சூர்யா - விக்ரம் இருவருமே எப்போதுமே எதிரும் புதிருமாக இருக்கும் சூழலில், இருவரையும் ஒரே நேரத்தில் வைத்துப் படம் தயாரிக்கும் ஞானவேல் ராஜாவை பலே கில்லாடி என்கிறார்கள் இண்டஸ்ட்ரியில்.
நானிக்கு ஜோடியாக நடிக்கும் ‘தசரா’ படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறார் கீர்த்தி சுரேஷ். படத்தின் டீசர் மிகப்பெரிய கவனம் பெற்றிருக்கும் நிலையில், பான் இண்டியா படமாக தசரா நிச்சயம் பேசப்படும் என்கிறாராம் கீர்த்தி சுரேஷ். நானியின் எளிமையும் கலகலப்பும் கீர்த்திக்கு ரொம்பவே பிடித்துப்போக, குடும்ப நண்பராகவே மாறிவிட்டாராம். படத்தின் ரிசல்ட் அமோகமாக அமையும்பட்சத்தில், நானியுடன் மீண்டும் அம்மணி கைகோத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லையாம்!

சூர்யா - விக்ரம் இருவருமே எப்போதுமே எதிரும் புதிருமாக இருக்கும் சூழலில், இருவரையும் ஒரே நேரத்தில் வைத்துப் படம் தயாரிக்கும் ஞானவேல் ராஜாவை பலே கில்லாடி என்கிறார்கள் இண்டஸ்ட்ரியில். அதேநேரம் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘தங்கலான்’ படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித்துக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். ஷூட்டிங் உள்ளிட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஞானவேல் ராஜா கறார் காட்ட, அந்த விவகாரம் இரஞ்சித்தின் கவனம்வரை போயிருக்கிறதாம். “ `தங்கலான்’ படத்தின் வேலைகளைக் கண்டுகொள்ளாமல், சூர்யாவைவைத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்திலேயே ஞானவேல் ராஜா அதிக அக்கறை காட்டுவதும் இரஞ்சித்தைக் கடுப்பாக்கியிருக்கிறது” என்கிறது தங்கலான் தரப்பு.
‘லிப்ட்’ படத்தைத் தொடர்ந்து, ரிலீஸாகியிருக்கும் ‘டாடா’ படத்திலும் நல்ல பெயர் பெற்றிருக்கிறார் கவின். ‘டாடா’ படம் நல்ல கவனம் பெற்றிருப்பதால், படத்தின் தயாரிப்பாளரும், வந்தவாசி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வுமான அம்பேத் குமாருக்கு ஏக மகிழ்ச்சி. படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கி வெளியிட்ட வகையிலும் அம்பேத் குமாரைக் கையில் பிடிக்க முடியவில்லை. அடுத்து கௌதம்ராஜ் இயக்கத்தில், அருள்நிதி நடிக்கும் படத்தையும் அம்பேத் குமார்தான் தயாரிக்கிறார். அதையும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மூலமாகவே வெளியிடுகிற திட்டத்தில் இருக்கிறாராம் அம்பேத் குமார்.

இயக்குநர் கௌதம் மேனன் மூலமாக நடிக்க வந்த மேகா ஆகாஷ், தமிழில் பெரிய ரவுண்ட் வருவார் எனப் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், கதைத் தேர்வில் அம்மணி கவனம் காட்டாமல் போக, வரிசையாக அவர் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவின. இந்த நிலையில், ‘ஹீரோ யாராக இருந்தாலும் பரவாயில்லை’ என்கிற அளவுக்கு அம்மணி இறங்கி வர, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷை ஃபிக்ஸ் பண்ணிவிட்டார்கள். இந்த அளவுக்கு இறங்கிவந்துவிட்டதால், இப்போதைக்கு மேகா ஆகாஷ் கையில் ஐந்து படங்கள்!
உஷ்...
இரவாட்டங்களே கதியெனக் கிடந்த விரல் நடிகர், இப்போது தலைகீழாக மாறிவிட்டாராம். முழுக்க முழுக்க ஆன்மிகமாம். அதிலும் எக்ஸ்ட்ரீமாக மூழ்கிக்கிடப்பதால், அவரை அணுகுவது குதிரைக்கொம்பாக இருக்கிறதாம். ரிலீஸுக்கு ரெடியாகியிருக்கும் படத்தின் புரொமோஷன் குறித்துப் பேசக்கூட விரல் நடிகரை அணுக முடியவில்லையாம். #ரொம்ம்ம்ப நல்லா பண்றீங்க தம்பி!