அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஸ்வாதிஷ்டா
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்வாதிஷ்டா

‘விலங்கு’ வெப் சீரீஸில் பெரிய கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்திடம் தமிழில் பல ஹீரோக்கள் கதை கேட்டார்கள். ஆனாலும், அந்த வாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டு, தெலுங்குப் பக்கம் போய்விட்டார் பிரசாந்த்.

சிவகார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’, விஜய்யின் ‘வாரிசு’, தனுஷின் ‘வாத்தி’ என தெலுங்கு இயக்குநர்களை வைத்து, தமிழ் ஹீரோக்கள் களமிறங்கிய படங்கள் வரிசையாக மண்ணைக் கவ்வுவதால், இனி நம்ம ஊர் இயக்குநர்களையே நம்புகிற முடிவுக்கு வந்துவிட்டார்களாம் முன்னணி ஹீரோக்கள். அதேபோல் தமிழ் ஹீரோக்களை நம்பிப் படம் பண்ணும் முடிவை, தெலுங்கு இயக்குநர்களும் கைவிட்டுவிட்டார்களாம். விஜய்யின் ‘வாரிசு’ தெலுங்கிலும் பெரிய தோல்வியைத் தழுவியதால், உள்ளூர் ஹீரோக்களைப் பகைத்துக்கொள்ள வேண்டாம் என அங்கிருக்கும் தயாரிப்பாளர்களும் முடிவெடுத்துவிட்டார்களாம்.

ஸ்வாதிஷ்டா
ஸ்வாதிஷ்டா

`க/பெ. ரணசிங்கம்’ பட இயக்குநர் விருமாண்டிக்கு, அடுத்த படம் கிடைப்பதில் பெரிய சிக்கல் நீடித்தது. திருச்சி பரதன் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் அட்வான்ஸ் வாங்கியிருந்த விருமாண்டி, வருடக்கணக்கில் காத்திருந்தும் படம் தொடங்குவதாக இல்லை. அதனால், சசிகுமார் நடிப்பில் ஒரு படத்தை இயக்க வேறு தயாரிப்பாளரைத் தேடிவந்தார். அதுவும் சரிவர அமையாமல் போக, இப்போது விருமாண்டிக்குக் கை கொடுத்திருக்கிறார் நடிகர் விமல். அக்கா, தம்பி உறவு பேசும் கதையை ஓகே செய்த விமல், மார்ச்சில் தேதி கொடுத்திருக்கிறாராம்.

ஸ்வாதிஷ்டா
ஸ்வாதிஷ்டா

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது இயக்குநர் மகிழ் திருமேனி என்கிற தகவல் உறுதியானாலும், சமூக வலைதளங்களில் அவர் தீவிரமாக இயங்குவது அஜித் தரப்பை யோசிக்க வைத்திருக்கிறதாம். ட்விட்டர் தளத்தில் அஜித் புகைப்படங்களையும், அவருடைய கருத்துகளையும் அடுத்தடுத்து மகிழ் திருமேனி பதிவிட, அஜித் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்களாம். ஆனால், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவோ, ‘இப்படிச் செய்ய வேண்டாம். அஜித் சார் இதை விரும்ப மாட்டார்’ என மகிழ் திருமேனியிடம் சொன்னாராம். ‘இப்படியான கட்டுப்பாடுகளை மகிழ் திருமேனி விரும்ப மாட்டார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஸ்வாதிஷ்டா
ஸ்வாதிஷ்டா

‘விலங்கு’ வெப் சீரீஸில் பெரிய கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்திடம் தமிழில் பல ஹீரோக்கள் கதை கேட்டார்கள். ஆனாலும், அந்த வாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டு, தெலுங்குப் பக்கம் போய்விட்டார் பிரசாந்த். அவர் சொன்ன கதை, அல்லு அர்ஜூனுக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டதாம். யாரும் யூகிக்கவே முடியாத பிரமாண்ட பட்ஜெட்டில் அல்லு அர்ஜூனின் நிறுவனமே படத்தைத் தயாரிக்கும் முடிவில் இருக்கிறதாம்.