அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிருணாள் தாகூர்
பிரீமியம் ஸ்டோரி
News
மிருணாள் தாகூர்

முன்னணி ஹீரோக்களை அணுகிப் பார்த்து நொந்துபோன இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லியிருக்கிறார்

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்பதை, தீராத கனவாக வைத்திருப்பவர் இயக்குநர் ஷங்கர். ஒருகாலத்தில் எப்படியாவது ஷங்கர் இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் எனக் கனவு கண்டவர் அஜித். இருவரின் எண்ணங்களையும் இணைக்கும் பாலமாக யாரும் இல்லாமல் போனதால், இந்தத் திட்டம் நிறைவேறாமலேயே போய்விட்டது. ‘துணிவு’ படம் பார்த்துவிட்டு அஜித்துக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறார் ஷங்கர். அஜித்தின் மேனரிஸங்கள் குறித்துச் சிலாகித்துத் தள்ளிவிட்டாராம். இந்த அன்பும் பாராட்டும் இருவரும் இணைவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

மிருணாள் தாகூர்
மிருணாள் தாகூர்

தெலுங்கிலிருந்து வந்து தமிழில் குறிப்பிட்ட காலத்துக்குள்ளேயே கொடிகட்டிப் பறந்தவர் ஸ்ரீதிவ்யா. ஒருசில படங்கள் ஓடாமல் போக, ‘ஸ்ரீதிவ்யா அவ்வளவுதான்’ எனத் தீர்ப்பு எழுதிவிட்டார்கள் கோடம்பாக்க ஜாதகர்கள். தமிழில் ரீ-என்ட்ரி ஆகியே தீருவேன் என அடம்பிடித்த ஸ்ரீதிவ்யா ஆரம்பத்தில் தான் ஜோடி போட்ட அத்தனை ஹீரோக்களையும் நேரில் சந்தித்தார்; பேசிப் பார்த்தார். யாரும் அம்மணிக்கு வாய்ப்பு கொடுக்க முன்வரவில்லை. விக்ரம் பிரபு மட்டுமே ஸ்ரீதிவ்யாவுக்குக் கைகொடுத்தாராம். இயக்குநர் முத்தையா தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் ‘ரெய்டு’ படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு செம கேரக்டராம்.

முன்னணி ஹீரோக்களை அணுகிப் பார்த்து நொந்துபோன இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லியிருக்கிறார். ஒன்லைன் கேட்டே ஓகே சொன்ன சிவகார்த்திகேயன் முழுக் கதையையும் கேட்டு, இன்னும் சில மாதங்களிலேயே தேதி தருகிறேன் எனச் சொல்லிவிட்டாராம். அநேகமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கக்கூடும் என்கிறார்கள். தனக்குத் தேதி கொடுக்காத முன்னணி ஹீரோக்களுக்குப் பாடம் புகட்டுகிற முடிவில் இருக்கும் முருகதாஸ், அதற்காக வலுவான கதையை உருவாக்கியிருக்கிறாராம்.

‘விக்ரம்’ படத்தின் மெஹா ஹிட் வெற்றிக்கு முன்னால், மிகச் சிறிய பட்ஜெட்டில் செய்யக்கூடிய இரண்டு கதைகளை ஓகே பண்ணி வைத்திருந்தாராம் கமல். இப்போது அவற்றை மீண்டும் கையிலெடுக்க நினைக்கிறாராம். ஆனால், கமலுக்கு புரொமோஷன் வேலைகளைப் பார்க்கும் ஆலோசனைப் புள்ளிகள் இருவர், ‘இனி 150 கோடிக்குக் குறைந்து உங்கள் பட பட்ஜெட் இருக்கக் கூடாது’ எனச் சொல்லியிருக்கிறார்களாம். அதனால், மனதுக்கு நெருக்கமான அந்த இரு கதைகளையும் இப்போதைக்கு ஓரமாக வைத்துவிட்டாராம் கமல்.

மிஸ்டர் மியாவ்

உஷ்...

ஒருகாலத்தில் ‘வெற்றிக்கொடி கட்டிய’ இயக்குநர், இப்போது தீவிரமாகப் படங்களில் நடித்துவருகிறார். கதைக்குத் தக்கபடி யார் மனதையும் வருத்தாமல் சம்பளம் பேசி வந்தவர், திடீரென ஒரு விரலைக் காட்டுகிறாராம். ‘என் படங்களுக்கு டிஜிட்டல் ரைட்ஸ் நல்லா போகுது…’ என அதற்குக் காரணமும் சொல்கிறாராம்!