சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

சாக்‌ஷி அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
News
சாக்‌ஷி அகர்வால்

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் ‘வாடிவாசல்’ படம் எப்போது தொடங்கும் என்பது தயாரிப்பாளர் தாணுவுக்கே புரியாத புதிராக இருக்கிறது.

விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் தெலுங்கில் 20 கோடி ஷேர் செய்தது. அதை டபுள் மடங்காக ‘வாரிசு’ படத்தில் வசூலிக்க நினைக்கிறார் தயாரிப்பாளர் தில் ராஜூ. பொங்கல் திருநாளில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’, சிரஞ்சீவி நடிக்கும் ‘வல்லேரு வீரய்யா’ இரு படங்களும் ரிலீஸ் ஆவதால், அவற்றைத் தாண்டி ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ‘வாரிசு’ படம். நாற்பதுக்கும் மேற்பட்ட தியேட்டர்களைச் சொந்தமாக வைத்திருக்கும் தில் ராஜூ, விநியோகஸ்தராகவும் செல்வாக்கு நிறைந்தவர். அதனால், பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்களைக் காட்டிலும் அதிக தியேட்டர்களை ‘வாரிசு’ படத்துக்காக ஒதுக்கவைத்திருக்கிறார்.

சாக்‌ஷி அகர்வால்
சாக்‌ஷி அகர்வால்

‘துணிவு’ படத்தை முடித்துவிட்டு கமலின் ராஜ்கமல் நிறுவனத்துக்குக் கையெழுத்து போட்டிருக்கிறார் ஹெச்.வினோத். ஏற்கெனவே விஜய் சேதுபதிக்கும், யோகி பாபுக்கும் தனித்தனியே கதை சொல்லியிருந்தார். விஜய் சேதுபதி இப்போதைக்குத் தேதி கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறார். யோகி பாபு ‘எப்போதும் ரெடி’ எனக் காத்திருக்கிறார். கமல் படம் தொடங்க தாமதமானால், யோகி பாபுவின் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார் ஹெச்.வினோத். ‘பெரிய ஹீரோக்களை நோக்கிப் போகாமல் ஏன் இந்தச் சிறுபிள்ளைத்தனம்?’ என நெருக்கமானவர்கள் கேட்க, ‘ஏன் யோகி பாபு பெரிய நடிகர் இல்லையா?’ எனக் கேட்டுச் சிரித்தாராம் வினோத்.

நயன்தாரா எப்போதுமே பட புரொமோஷனுக்கு வருகை தரும் வழக்கம் இல்லாதவர். ஆனால், அவருடைய சொந்தத் தயாரிப்பான ‘கனெக்ட்’ பட புரொமோஷனுக்காக மீடியாக்களிடம் இறங்கிவந்தார் நயன். ஆனாலும், படத்தின் ரிசல்ட் பெரிதாக அமையாததால், அம்மணிக்கு ரொம்பவே வருத்தமாம். இதற்கிடையில், ‘மற்றவர்கள் தயாரிப்பில் நடிக்கும் படத்துக்கும் இனி நயன்தாரா புரொமோஷனுக்கு வர வேண்டும்’ எனச் சிலர் போர்க்கொடி தூக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அம்மணிக்கு இது கூடுதல் தலைவலியைக் கொடுத்திருக்கிறதாம்.

சாக்‌ஷி அகர்வால்
சாக்‌ஷி அகர்வால்

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் ‘வாடிவாசல்’ படம் எப்போது தொடங்கும் என்பது தயாரிப்பாளர் தாணுவுக்கே புரியாத புதிராக இருக்கிறது. ஆடியோ ரைட்ஸ் உள்ளிட்ட சில விஷயங்களைப் பெரிய தொகைக்குப் பேசி முடித்திருக்கும் தாணு, படத்தின் ஷூட்டிங் இன்னமும் தொடங்கப்படாமல் இருப்பதால், அடுத்தகட்ட வேலைகளைச் செய்ய முடியாமல் இருக்கிறார். ‘வாடிவாசல்’ படத்தில் இயக்குநர் அமீரை முக்கிய பாத்திரத்தில் நடிக்கவைக்க வெற்றிமாறன் திட்டமிட, இது சூர்யாவுக்குக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சூர்யாவுக்கும் அமீருக்கும் ‘பருத்திவீரன்’ காலத்துப் பஞ்சாயத்து இன்னமும் முடியாமல் இருப்பதால், இதையெல்லாம் தாண்டி `வாடிவாசலை’த் திறக்கத் தகிடுதத்தம் போடுகிறார் தாணு!

சாக்‌ஷி அகர்வால்
சாக்‌ஷி அகர்வால்

உஷ்...

பொங்கல் ரிலீஸ் பரபரப்பு இப்போதே ஆட்டிப்படைக்க, சற்றே ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள வெளிநாடு பயணமானார் மாஸ் நடிகர். வயதே ஏறாத நடிகையும் அதே விமானத்தில் பயணமாக, யதார்த்தமாக நடந்த இந்தச் சம்பவத்தை ஊதிப் பெரிதாக்கிவிட்டார்களாம் நடிகரின் இல்லத்தில். ‘ரிலாக்ஸ் பண்ணப்போனதே பரபரப்பாகிடுச்சே’ என நொந்துபோய் ஊர் திரும்பியிருக்கிறார் நடிகர்!