சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ரம்யா பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரம்யா பாண்டியன்

கருணாஸ் நடித்துத் தயாரிக்கும் ‘சல்லியர்கள்’ படத்துக்கும் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியிருப்பதால், உற்சாகத்தில் இருக்கிறார் கருணாஸ்.

‘வாரிசு’ இசை வெளியீட்டை பிரமாண்டமாக நடத்தினாலும், விஜய்க்கு அதில் பெரிய திருப்தி இல்லையாம். அட்லி ரூட்டில் ஷாருக்கானையும், லோகேஷ் கனகராஜ் மூலமாக கமலையும், தயாரிப்பாளர் தில் ராஜூ மூலமாகத் தெலுங்கு பிரபலம் ஒருவரையும் இசை வெளியீட்டுவிழாவுக்கு அழைத்துவரத் திட்டமிட்டார்களாம். அவர்களில் ஒருவரைக்கூட அழைத்துவர முடியவில்லையாம். நிகழ்ச்சி நடத்தப்பட்டவிதத்திலும் விஜய்க்குக் கடுமையான வருத்தமாம். அதனால், விழா நடந்த அடுத்த நாளே வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டார் விஜய். ‘பட ரிலீஸ் பட்டையைக் கிளப்பும்’ என உத்தரவாதம் கொடுத்து விஜய்யைச் சமாதானப்படுத்தி வருகிறாராம் தயாரிப்பாளர் தில் ராஜூ.

கிட்டத்தட்ட எட்டு படங்களைக் கைவைசம் வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அந்த வகையில் சமீபத்தில் அதிக படங்களை முடித்திருக்கும் சாதனை நடிகர் அவர்தான். எட்டுப் படங்களை முடித்திருந்தாலும், பெரிய அளவுக்கான பிசினஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் தடுமாறி வருகிறார்களாம். ஆனால், விஜய் ஆண்டனி இயக்கித் தயாரிக்கும் ‘பிச்சைக்காரன் -2’ படத்துக்கு மட்டும் பிசினஸ்ரீதியான வரவேற்பும், பெரிய எதிர்பார்ப்பும் உருவாகியிருக்கிறதாம். படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் பெரிய விலைக்குக் கைமாறியிருக்கிறது. அதனால், அந்தப் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு மற்ற படங்களை வெளியிடத் திட்டமிடுகிறார்கள்.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

‘துணிவு’க்கு அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அஜித். அவருக்கு ஜோடியாக நயன்தாரா முன்மொழியப்பட்ட நிலையில், திடீர் மாற்றமாக த்ரிஷாவைக் களமிறக்கத் திட்டமிட்டார்கள். அஜித்துக்குப் பெரிய ஹிட்டாக அமைந்த ‘மங்காத்தா’ படத்தில் த்ரிஷாதான் ஜோடி. அதே காம்பினேஷன் மறுபடியும் அமைய அஜித் விரும்புவதாகக் காரணம் சொல்லப்பட்டது. இந்த நிலையில், விஜய்யின் அடுத்த படத்தில் த்ரிஷா ஜோடி போடுவதால், அவரை மாற்றிவிட்டு நயனைக் கொண்டுவர நினைக்கிறாராம் விக்னேஷ் சிவன்.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

‘கருணாஸ்’ நடிப்பில் வெளியான ‘ஆதார்’ பணரீதியான வசூலைப் பெறாவிட்டாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் உரிய அங்கீகாரங்களைப் பெற்றுவருகிறது. கருணாஸ் நடித்துத் தயாரிக்கும் ‘சல்லியர்கள்’ படத்துக்கும் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியிருப்பதால், உற்சாகத்தில் இருக்கிறார் கருணாஸ். அடுத்தடுத்து தரமான படங்களைத் தொடர்ந்து தயாரிக்கவும் திட்டமிட்டுவருகிறாராம்!

உஷ்...

பொங்கல் ரிலீஸில் யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி பலமாக இருக்கிறது. உச்ச நடிகர்கள் இருவரும் நேரடியாக மோதும் இந்தப் போட்டியை, அவர்களைக் கடந்து மிக உச்சமாக விளங்கும் நடிகர்தான் ஆவலாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாராம். விளம்பரம், வியூகம் என கவனமாகக் காய்நகர்த்தும் நடிகரின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து அவ்வளவு நுட்பமாக விசாரிக்கிறாராம் அந்த மிக உச்ச நடிகர்!