அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

வரலெட்சுமி சரத்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
வரலெட்சுமி சரத்குமார்

கணேஷ் பாபு இயக்கி நடிக்கும் ‘கட்டில்’ படத்தில் ஸ்ருஷ்டிக்குப் பிரமாதமான பாத்திரமாம்.

டீடெய்லிங்கில் வித்தைகள் புரிவதால், இயக்குநர் ஹெச்.வினோத்தை, `பத்திரிகையாளர்’ எனப் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர் எந்தப் பத்திரிகையிலும் பணியாற்றியவர் இல்லை. ஏ.சி மெக்கானிக்காக சென்னையில் பல இடங்களில் பணியாற்றியவர். சத்யம் திரையரங்கில் ஏ.சி மெக்கானிக்காகப் பணியாற்றியபோதுதான் திரைப்படங்களின் மீது அவர் கவனம் திரும்பியிருக்கிறது. இயக்குநர் பூபதி பாண்டியனிடம் உதவியாளராகச் சேருவதற்குப் பல மாதங்கள் முயன்று வாய்ப்பில்லாமல் போனதால், பிறகு பார்த்திபனிடம் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார், ஹெச்.வினோத். அப்போது பல பத்திரிகை நிறுவனங்களுக்கு வினோத்தை அனுப்பிவைப்பாராம் பார்த்திபன். அந்த வகையில்தான் பத்திரிகையாளர்கள் பலருடனும் அவரைப் பார்த்தவர்கள், அவரையும் பத்திரிகையாளராகவே நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

வரலெட்சுமி சரத்குமார்
வரலெட்சுமி சரத்குமார்

விஜய் தேவரகொண்டாவுடன் காதல், கல்யாணம் எனத் தொடர்ந்து சர்ச்சையில் அடிபட்டுக்கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா, அது குறித்து மீடியாக்களிடம் வாய் திறப்பதே இல்லை. விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் நடித்திருக்கும் ராஷ்மிகா, தமிழில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த பிறகே விஜய் தேவரகொண்டாவுடனான ‘அன்பு’ குறித்து வாய் திறக்கும் முடிவில் இருக்கிறாராம். ஒருவருடன் ‘பழக்கத்தில்’ இருக்கும் நடிகையைத் தமிழ்த் திரையுலகில் ‘கட்டம்’ கட்டிவிடுவார்கள் என்கிற விஷயத்தை நன்கு தெரிந்துவைத்துக்கொண்டுதான் அம்மணி இவ்வளவு அமைதி காக்கிறாராம்.

‘கத்துக்குட்டி’ படத்தில் தஞ்சாவூர் பெண்ணாக கவனம் ஈர்த்த ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு, அடுத்தடுத்த வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. ஆனாலும், ‘தமிழில் பெயரெடுத்தே தீருவேன்’ என்கிற உறுதியில் மும்பை பக்கமே போகாமல் தமிழ்நாட்டில் தவம் கிடந்தார். கணேஷ் பாபு இயக்கி நடிக்கும் ‘கட்டில்’ படத்தில் ஸ்ருஷ்டிக்குப் பிரமாதமான பாத்திரமாம். “பாரம்பர்யத்தின் மகிமையைச் சொல்லும் இந்தப் படம் நிச்சயம் என்னைப் பெரிதாகக் கொண்டுபோய்ச் சேர்க்கும்” என நெகிழ்கிறார் ஸ்ருஷ்டி.

மிஸ்டர் மியாவ்

‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலமாகப் பெரும் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார், அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ‘அயலான்’ படத்தைத் தொடங்கினார். பட்ஜெட் உள்ளிட்ட பிரச்னைகளால், படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டேபோகும் நிலையில், அவர் சூர்யாவை வைத்துப் படம் பண்ணப் போய்விட்டதாகப் பரபரப்பு கிளம்பியது. சூர்யாவிடம் ரவிக்குமார் கதை சொன்னது உண்மைதான். அவர் சொன்ன ஒன்லைன் பிடித்துப்போன நிலையில், ‘இன்னும் இரண்டு வருடங்கள் கழித்துத்தான் கால்ஷீட்’ என்றாராம் சூர்யா. இந்த நிலையில் ‘அயலான்’ படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் தீவிரமாகியிருக்கிறார் ரவிக்குமார்.

உஷ்...

கடன், நெருக்கடி என நெற்றியைச் சுருக்கினாலும், போயஸ் கார்டனில் வீடு வாங்கி வியக்கவைத்திருக்கிறார் மணக்கும் பெயர்கொண்ட காமெடி நடிகர். ‘அடுத்தடுத்த படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸை வைத்துத்தான் வீடு வாங்கியிருக்கிறார். மற்றபடி கடன் அப்படியேதான் நீடிக்கிறது…’ என்கிறார்கள் நெருக்கமானவர்கள்!