அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஸ்பந்தனா பள்ளி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்பந்தனா பள்ளி

மிகக் குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட ‘கூழாங்கல்’ படத்தை, பெரிய கவனம் பெறவைத்ததில் நயன்தாராவின் பங்கு முக்கியமானது.

அஜித்தின் ‘துணிவு’ ஆக்‌ஷனில் தூள் கிளப்பியிருக்கிறது. அஜித் ரசிகர்களை ரொம்பவே குஷிப்படுத்தியிருக்கும் இயக்குநர் அ.வினோத், வங்கிகள், நுகர்வோர்களிடமிருந்து பணம் பறிக்கும் நூதனங் களையும் அப்பட்டமாக்கி, படத்தைச் சமூக அக்கறையுள்ள சினிமாவாக மாற்றியிருக் கிறார். படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பதால், விக்னேஷ் சிவனின் படத்தை முடித்துவிட்டு, மீண்டும் அ.வினோத்துடன் அஜித் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

விஜய் ரசிகர்களுக்கு ‘வாரிசு’ கலர்ஃபுல் மீல்ஸ். வழக்கமான, யூகிக்கக்கூடிய கதைதான் என்றாலும், ஆக்‌ஷன், சென்ட்டிமென்ட், காமெடி என ரசிகர்களுக்கு நன்றாகவே தீனி போட்டிருக்கிறார் விஜய். சூட்டோடு சூடாக விரைவில், லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் விஜய்யின் அடுத்த படத்தைப் பற்றிய விவரங்களை அறிவிக்கவிருக்கிறார்களாம்.

ஸ்பந்தனா பள்ளி
ஸ்பந்தனா பள்ளி

`வாரிசு’ - `துணிவு’ என வரிந்துகட்டி நின்ற விஜய், அஜித் ரசிகர்கள் நல்ல மாற்றமாகத் திடீரென சமாதானமாகி நட்போடு கைகுலுக்கிக் கொண்டிருக்கின்றனர். சில இடங்களில் விஜய் ரசிகர்கள் ‘வாரிசு டிக்கெட்டை அஜித் ரசிகர்களுக்கு வழங்கி படம் பார்க்க அழைக்க, மதுரையிலோ இருவரின் ரசிகர்களும் ஒன்றாக இணைந்து ‘துணிவோடு வாரிசைக் கொண்டாடுவோம்’ என போஸ்டரே அடித்திருக்கிறார்கள்.

ஸ்பந்தனா பள்ளி
ஸ்பந்தனா பள்ளி

மிகக் குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட ‘கூழாங்கல்’ படத்தை, பெரிய கவனம் பெறவைத்ததில் நயன்தாராவின் பங்கு முக்கியமானது. படத்தின் இயக்குநர் வினோத்துக்கு அடுத்த படத்துக்கான அட்வான்ஸையும் கொடுத்து, தன்னுடைய ‘ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனத்துக்கு கமிட் பண்ணிவைத்திருந்தாராம் நயன். ஆனால், சிவகார்த்திகேயனின் நிறுவனத்தில் இப்போது கமிட்டாகியிருக்கிறாராம் வினோத். இது குறித்து சிவகார்த்திகேயனிடன் ஆதங்கப்பட்டாராம் நயன்தாரா. “தேடிவந்து கதை சொன்ன இயக்குநருக்கு ஓகே சொன்னது குற்றமா மேடம்?” எனத் திருப்பிக் கேட்டாராம் சிவகார்த்திகேயன். அந்த அளவுக்கு விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும் இந்தப் படத்தில் சூரி ஹீரோவாக நடிக்கிறார்.

ஸ்பந்தனா பள்ளி
ஸ்பந்தனா பள்ளி

உஷ்...

கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி நடிக்க கமிட்டாகியிருந்த படத்தை யார் இயக்கப்போகிறார்கள் எனச் சொல்லாமல் ரகசியம் காத்தது ராஜ்கமல் நிறுவனம். உதயநிதி நடிக்க வாய்ப்பில்லை என விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக விஜய் சேதுபதியைப் பேசி முடித்திருக்கிறார் கமல். ராஜ்கமல் நிறுவனத்துக்காக விஜய் சேதுபதியிடம் கதை சொல்லியிருப்பவர் ‘கிடாரி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பிரசாத் முருகேசன். இன்னும் இரண்டு மாதங்களில் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார்களாம்!