அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

பிரக்யா நக்ரா
பிரீமியம் ஸ்டோரி
News
பிரக்யா நக்ரா

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் விக்னேஷ் சிவன், கமர்ஷியல் விஷயங்களைக் கூடுதலாக்கி, பக்கா ஆக்‌ஷன் கதையாக உருவாக்கியிருக்கிறாராம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன், பிரித்விராஜ் - நயன்தாராவை வைத்து இயக்கிய ‘கோல்டு’ படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. ஆனாலும், திடீரென கமலிடமிருந்து அல்போன்ஸ் புத்திரனுக்கு அழைப்பு. வரிசையாக மூன்று கதைகளின் ஒன்லைன்களைச் சொல்லியிருக்கிறார் கமல். “இவற்றில் உங்களுக்குப் பிடித்த ஒன்லைனை முழுக் கதையாக்கிக் கொண்டுவாருங்கள். உங்கள் இயக்கத்தில் நடிக்க நான் ரெடி” என்றாராம் கமல். ஆச்சர்யத்தில் திக்குமுக்காடித் திரும்பியிருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன்.

பிரக்யா நக்ரா
பிரக்யா நக்ரா

விஜய்யின் 67-வது படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிவிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கிடைத்த இடைவெளியில் லாரன்ஸ் மாஸ்டருக்காக ஒரு பக்கா கதையைப் பண்ணியிருக்கிறார் லோகேஷ். லாரன்ஸுக்குக் கதை ரொம்பவே பிடித்துப்போய்விட்டதாம். விஜய் படத்தை முடித்துவிட்டு லாரன்ஸ் படத்தைத் தொடங்க நினைத்தார் லோகேஷ். ஆனால், அடுத்து ‘கைதி -2’ தொடங்கி பிரபாஷ் படம் வரையிலான புராஜெக்ட்டுகள் நிரம்பி வழிவதால், தன்னிடம் பணியாற்றும் இயக்குநர் ரத்னகுமாரை லாரன்ஸ் படத்தை இயக்கப் பணித்திருக்கிறாராம் லோகேஷ். தயாரிப்பு, விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ்.

பிரக்யா நக்ரா
பிரக்யா நக்ரா

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் விக்னேஷ் சிவன், கமர்ஷியல் விஷயங்களைக் கூடுதலாக்கி, பக்கா ஆக்‌ஷன் கதையாக உருவாக்கியிருக்கிறாராம். அஜித்துக்கு இணையாக இன்னொரு பாத்திரத்தையும் படத்தில் கொண்டுவரவிருக்கிறாராம். அதற்காக தெலுங்கு, மலையாளம் பக்கமுள்ள முன்னணி ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறாராம்.

‘சர்தார்’ படம் ஹிட் அடித்தபோதும் நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இருவருக்குமிடையே அவ்வளவு இணக்கமான சூழல் இல்லையாம். இந்த நிலையில் ‘சர்தார்-2’ எப்படிச் சாத்தியப்படும் எனப் பலரும் பேசி வந்தார்கள். ஆனாலும், மனமாச்சர்யங்களைக் கடந்து ‘சர்தார்-2’ பணிகளைச் சீக்கிரமே தொடங்க விருக்கிறார்களாம். ‘சர்தார்’ படத்தின் முதல் பாகத்துக்காக எடுக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்ட இரண்டு மணி நேரத்துக்கான காட்சிகளில் 45 நிமிடங்களுக்கான காட்சியை இரண்டாம் பாகத்துக்கான கதையாக மாற்றிவிட்டார்களாம். இன்னும் ஒன்றரை மணி நேரத்துக்கான படத்தை எடுத்தால் ‘பாகம்-2’ ரெடியாகிவிடுமாம். தயாரிப்பாளர் ‘ப்ரின்ஸ்’ லக்‌ஷ்மண் இதைச் சொல்ல, கார்த்தி உடனே ஓகே சொல்லிவிட்டாராம்!

பிரக்யா நக்ரா
பிரக்யா நக்ரா

உஷ்...

பொங்கல் ரிலீஸில் யாருக்கு வெற்றியோ இல்லையோ… ட்விட்டர் தளங்களை ஆட்டுவிக்கும் ஆட்களின் காட்டில் ‘பண’மழையாம். ‘எங்க படத்தை நம்பர் 1 என அறிவியுங்கள்’ எனச் சொல்லி இரு தரப்பும் போட்டி போட்டு கவனிக்க, ட்விட்டர் ஆட்கள் திக்குமுக்காடிப் போனார்களாம். பெரிதாக கவனித்த தரப்புக்குப் பிரசாரமும் பெரிதாக நடத்தப்பட்டதாம்!