அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஜான்வி கபூர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜான்வி கபூர்

சன் பிக்சர்ஸின் செல்லப்பிள்ளையாகிவிட்ட இயக்குநர் பாண்டிராஜ், அடுத்து விஜய்க்கு கதை சொன்னார்

சூர்யாவை வைத்து ‘சூரரைப் போற்று’ ஹிட் கொடுத்த இயக்குநர் சுதா கோங்கரா, அடுத்து அஜித் தொடங்கி சிம்பு வரைக்கும் பலருக்கும் கதை சொன்னார். ஆனாலும், அடுத்த படத்தைத் தொடங்குவதற்குள் அவருக்குப் பெரும்பாடாகிவிட்டது. அதனால், மீண்டும் சூர்யாவிடமே இன்னொரு கதை சொன்னார். சூர்யா அதை ஓகே செய்தாலும், வரிசையாகக் கைவசம் வைத்திருக்கும் படங்களை முடிக்கவே அவருக்கு இன்னும் இரண்டு வருடங்கள் ஆகுமாம். இதற்கிடையில், ‘சூரரைப் போற்று’ படத்தை இந்தியில் தொடங்க சுதா திட்டமிட, அதுவும் தள்ளிக்கொண்டே போகிறது. விரைவில் வெப் சீரீஸ் ஒன்றைக் கையிலெடுக்கப் போகிறாராம் சுதா!

‘மண்டேலா’ கவனிக்கத்தக்க படமான பிறகு, தொடர்ந்து யோகி பாபுவைக் கதாநாயகனாக வைத்து பல கதைகள் படையெடுத்தன. ஆனாலும், யோகி பாபு அவ்வளவு சீக்கிரம் அத்தகைய கதைகளை ஓகே செய்யவில்லை. தன்னை மாஸாகக் காட்டும் கதைகள் வேண்டாம் எனச் சொல்லி, நாற்பதுக்கும் மேற்பட்ட கதைகளைத் தவிர்த்தாராம். சமீபத்தில் புதிய இயக்குநர் சொன்ன வில்லேஜ் கதை ஒன்று யோகி பாபுவுக்கு ரொம்பவே பிடித்துப்போக, அதை ஓகே செய்திருக்கிறாராம். செய்யாத கொலை ஒன்றில் சிக்கிக்கொண்டு யோகி பாபு படுகிற அல்லாட்டம்தான் கதையாம்!

சன் பிக்சர்ஸின் செல்லப்பிள்ளையாகிவிட்ட இயக்குநர் பாண்டிராஜ், அடுத்து விஜய்க்கு கதை சொன்னார். விஜய் பதில் சொல்லாத நிலையில், ரஜினியிடம் கதை சொல்ல அனுப்பிவைத்தது சன் பிக்சர்ஸ். ரஜினியும் கிரீன் சிக்னல் கொடுக்காததால், லாரன்ஸிடம் ஒன்லைன் ஒன்றைச் சொன்னாராம் பாண்டிராஜ். மிரட்டலான அந்தக் கதைக்கு லாரன்ஸ் உடனே ஓகே சொல்ல, அதைத் தயாரிக்க சன் பிக்சர்ஸ் தயாராகி வருகிறதாம். இதற்கிடையில், சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடிக்கும் கதையைச் சொந்தத் தயாரிப்பில் செய்யவும் தயாராகிவருகிறார் பாண்டிராஜ்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சிப் படங்களைப் பதிவேற்றி அதிரடிப்பார். அப்படி, கடந்த வாரம் பிகினி உடையில் ஈரம் சொட்டச் சொட்ட போஸ் கொடுத்த ஜான்வி கபூர், ‘அந்த உடையின் விலை 17 லட்சம்’ எனக் குறிப்பிட, ‘இரண்டு கர்ச்சீப் விலை இவ்வளவா?’ எனக் கேட்டு ஆன்லைனில் செம அலப்பறை கொடுத்துவிட்டார்கள் ரசிகர்கள். விரைவில் தமிழ்ப் பக்கம் என்ட்ரி கொடுக்கும் திட்டத்திலிருக்கும் ஜான்வி கபூர், முதன்முறையாக நம்மூர் இயக்குநர்களிடம் கதை கேட்க ஓகே சொல்லியிருக்கிறாராம்!

உஷ்...

கடந்த வருடம் மதுரைக்கார ஃபைனான்ஸியரிடம், மலைக்கவைக்கும் தொகையைக் கடனாகப் பெற்றிருந்தாராம் வேர்ல்டு நாயகன். வட்டி கட்டவே நடிகருக்கு நாக்கு தள்ளியதாம். அதனால்தான், இந்தி கம்பெனியோடு இணைந்து புதுப்படத்தை அவசரகதியில் அறிவித்தாராம். இவரை விஞ்சிக் கடனிலிருக்கும் ஹீரோவும் இந்த வலையில் சிக்கியதுதான் இந்தச் சம்பவத்தின் உச்சம்!