அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மாளவிகா மோகனன்
பிரீமியம் ஸ்டோரி
News
மாளவிகா மோகனன்

படங்கள்: கிரண் சா

* விஜய்யின் அடுத்த படத்தைத் தயாரிக்கப்போவது யார் என்ற புதிருக்கே இன்னும் பதில் தெரியவில்லை. அதற்குள் விஜய்க்கு சம்பளம் 100 கோடி ரூபாய் பேசப்பட்டிருப்பதாகவும், சத்யஜோதி நிறுவனம் அதைக் கொடுக்கத் தயாராகிவிட்டதாகவும் கடுமையான பரபரப்பு கிளம்பிவிட்டது. தயாரிப்பாளர் போட்டியில் விஜய்யின் ‘டிக்’ லிஸ்ட்டில் இருப்பவர் தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜூ. ‘அவ்வளவு சம்பளமா… ஆளைவிடுங்கடா சாமி’ என அவரை ஓடவைக்கத்தான் இந்த 100 கோடி பரபரப்பு சிலரால் பரப்பிவிடப்படுகிறதாம்.

* ரஜினி, விஜய், தனுஷ் எனப் பெரிய ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து இடம்பிடிக்கும் மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர். சேலை தொடங்கி மாடர்ன் டிரெஸ் வரை அணிந்து அடிக்கடி புகைப்படங்களைப் பதிவேற்றி ரசிகர்களைக் குதூகலிக்க வைப்பது மாளவிகாவின் வழக்கம். சமீபகாலமாக புகைப்படங்களில் அம்மணியின் கவர்ச்சி அநியாயத்துக்கு அதிகமாகிவிட்டது. ‘ரசிகர்கள் சந்தோஷமா இருக்கட்டும் சார்…’ எனச் சொல்லி மீடியேட்டர்களையே மிரளவைக்கிறார் அம்மணி.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

* நீண்ட நாள்களுக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தின் ஸ்பெஷல் ஸ்பேஸ் மீட்டுக்காக ட்விட்டர் பக்கம் வந்தார் சிம்பு. யுவன் ஷங்கர் ராஜா, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா, வெங்கட் பிரபு, மதன் கார்க்கி எனப் பலரும் கலந்துகொண்டு பேசிய கலந்துரையாடலில் மதுப்பழக்கத்தை விட்டது தொடங்கி பல விஷயங்களை சிம்பு செம ஜாலியாகப் பகிர்ந்துகொண்டார். இடையிடையே வேறு சிலர் குறுக்கிட்டுக்கொண்டேயிருக்க, ஒருகட்டத்தில் சிம்பு சைலன்ட்டாகிவிட்டார். ‘அவர் போக்கில் பேசவிட்டிருந்தால் இன்னும் பல விஷயங்களை சிம்பு பகிர்ந்திருப்பார்’ என ஆதங்கப்படுகிறார்கள் சிம்பு ஃபேன்ஸ்.

* நடிப்பு, தயாரிப்பு என சூர்யா சம்பந்தப்பட்ட பல படங்கள் ஷூட்டிங்குக்காகக் காத்திருக்கின்றன. ஆனால், ‘அனைவரும் தடுப்பூசி போட்டால்தான் ஷூட்டிங் போகணும்’ எனக் கறார் உத்தரவு போட்டிருக்கிறாராம் சூர்யா. அதேபோல், அரசு விதிகளை மீறி கூட்டத்தை அதிகம் சேர்ப்பதோ, சமூக இடைவெளி இல்லாமல் நடந்துகொள்வதோ கூடாது என்றும் வலியுறுத்திச் சொல்கிறாராம்.

எக்ஸ்க்ளூசிவ்: மருத்துவ நிபுணர்கள் பலரிடமும் கலந்து பேசி ஒருவழியாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டார் அஜித். தடுப்பூசி விழிப்புணர்வுக்காக அதைப் புகைப்படம் எடுக்கலாமா என மருத்துவமனை தரப்பு கேட்க, ‘வேண்டவே வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டாராம். ஊசி போடாமல் போஸ் மட்டும் கொடுத்ததாக நயன்தாரா விவகாரம் சர்ச்சை ஆனதால், இந்த எச்சரிக்கையாம். அதனால்தான், அஜித் தடுப்பூசி போட்டுக்கொண்ட செய்திகூட எந்த ஊடகத்திலும் வரவில்லை!

உஷ்…

ஓடிடி-யில் தன்னுடைய படம் வெளியாவதை விரும்பாமல், தயாரிப்பாளருடன் வெளிப்படையாகவே மோதினார் ஒல்லி நடிகர். அதையும் மீறி படம் ஓடிடி-யில் ரிலீஸாகி, கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துவருகிறது. உண்மையில், டபுள் பாசிட்டிவ் பார்த்தபோதே, ‘தயவுசெய்து இது திரைக்கு வேண்டாம். ஓடிடி-க்குத் தள்ளிவிட்டுடுங்க’ என்று சொன்னதே ஒல்லி நடிகர்தானாம். ‘தியேட்டர்க்காரங்க தரப்பில் எனக்கு கெட்ட பெயர் வராமல் பார்த்துக்க நான் சில விஷயங்கள் பண்றேன். பொறுத்துக்கங்க…’ எனத் தயாரிப்பாளருடன் பக்கா டீல் போட்டுக்கொண்டுதான் வெளியே மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதாகக் காட்டிக்கொள்கிறாராம்.