அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

சிருஷ்டி டாங்கே
பிரீமியம் ஸ்டோரி
News
சிருஷ்டி டாங்கே

சர்ச்சை புகழ் கியாரா அத்வானியைத் தன்னுடைய அடுத்த படத்துக்கு இயக்குநர் ஷங்கர் ஃபிக்ஸ் பண்ணிவிட்டதாக ஏக பரபரப்பு

ஹோம்லியா, கவர்ச்சியா... என டபுள் மைண்டில் இருந்த சிருஷ்டி டாங்கே ‘இனி தாராளமயக் கவர்ச்சிதான்’ என்கிற முடிவை அறிவித்துவிட்டார். சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவேற்றி, “என்னுடைய கதைத் தேர்வுகளும் இனி இப்படித்தான் இருக்கும். ஹோம்லி ரோல் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தாலும், வாய்ப்புகளை வாங்கித் தரவில்லையே” என ஆதங்கப்பட்டிருக்கிறார் சிருஷ்டி. தற்போது தமிழில் ‘கட்டில்’ என்கிற ஒரு படம் மட்டுமே இவரின் கைவசம் இருக்கிறது.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

சர்ச்சை புகழ் கியாரா அத்வானியைத் தன்னுடைய அடுத்த படத்துக்கு இயக்குநர் ஷங்கர் ஃபிக்ஸ் பண்ணிவிட்டதாக ஏக பரபரப்பு. தெலுங்கு பக்கம் கால்வைக்கும் ஷங்கர், ராம் சரணிடம் கதை சொல்லி ஷூட்டிங் போக ரெடியாகிவிட்டார். ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. அம்மணியும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாகத் தகவல். விரைவில் ராம் சரண் - கியாரா அத்வானி கூட்டணி குறித்த அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

நல்ல வாய்ப்புக்காகத் தவம்கிடந்த நரேனுக்கு ‘கைதி’ படத்தில் போலீஸ் அதிகாரி பாத்திரம் கொடுத்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். படம் அதிரிபுதிரி வெற்றிபெற்றாலும், நரேனுக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. இதனால், கமலை வைத்து இயக்கும் `விக்ரம்’ படத்திலும் நரேனுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கமல் படம் என்றாலே கெட்டப் செஞ்ச் பட்டையைக் கிளப்பும். இதில் நரேனுக்கு 60 வயதான முதியவர் கெட்டப்பாம்.

கொரோனாவிலிருந்து மீண்ட ஆண்ட்ரியா கையில் ‘அரண்மனை -3’, ‘நோ என்ட்ரி’, ‘பிசாசு 2’, ‘மாளிகை’ எனப் பல படங்கள். தனிமைப்படுத்திக்கொள்ளவும், ஊரடங்கைக் கடைப்பிடிக்கவும் வீட்டுக்குள்ளேயே இருந்த ஆண்ட்ரியாவுக்கு எப்போது ஷூட்டிங் போவது என ஒரே ஆர்வமாம். இதற்கிடையில், போனிலேயே கதை கேட்டு இடைப்பட்ட இந்த ஒரு மாதத்தில் இரண்டு கதைகளை ஓ.கே செய்து வைத்திருக்கிறார் அம்மணி.

சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி எனத் தயாராகும் படத்தில் தனுஷுக்கு ஜோடி யார் என்கிற கேள்வி தொடர்ந்து நீடித்த நிலையில், சாய் பல்லவியின் பெயரை டிக் அடித்திருக்கிறாராம் தனுஷ். ‘மாரி - 2’ படத்தில் நடித்தபோதே தனுஷ் - சாய் பல்லவி கெமிஸ்ட்ரி பக்காவாக வொர்க்அவுட்டான நிலையில், அடுத்த படத்துக்கும் தனுஷ் அம்மணியையே தேர்வுசெய்திருப்பது பல நாயகிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

உஷ்…

ஈழத்தை
இழிவுபடுத்திவிட்டதாக வெப் சீரீஸுக்கு எதிராகப் பொங்கிய தாடி இயக்குநர், போகிறபோக்கில் சீனியர் இயக்குநர்களையும் காய்ச்சி எடுத்துவிட்டாராம். அதோடு சங்கப் பொறுப்பு வகிக்கும் இயக்குநரையும் சீண்ட, தாடிக்காரருக்குத் தடைபோடுகிற அளவுக்கு யோசிக்கிறார்களாம் வறுபட்டவர்கள்!