அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ் - அக்கட பூமி அப்டேட்ஸ்!

அக்கட பூமி அப்டேட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
அக்கட பூமி அப்டேட்ஸ்!

சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘ரங்குஸ்தலம்’ வெற்றிக்கு அடுத்தபடியாய் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் ‘புஷ்பா’ படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் சுகுமார்.

லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கில் செம மாஸ் நடிகரான ராம் பொத்தினேனி ஹீரோவாக கமிட்டாக, ஜோடிக்கு ஆள் தேடினார்கள். கீர்த்தி ஷெட்டி பெயரை ராம் டிக் அடிக்க, லிங்குசாமிக்கும் டபுள் ஓகே. மாஸ் ஹிட்டடித்த ‘உப்பெனா’ படத்துக்குப் பிறகு கீர்த்தி ஷெட்டிக்குத் தெலுங்கில் செம கிரேஸ். அடுத்து, கதையில் அழுத்தமான வில்லன் பாத்திரத்துக்கு யாரைத் தேர்வு செய்வது எனத் தீவிரத் தேடுதலிலிருக்கிறார் லிங்கு. ‘தெலுங்கு ஹீரோ… தமிழ் வில்லன்’ என பிசினஸ் ரீதியாகவும் கணக்குப் போடுகிறார்கள்.

கே.ஜி.எஃப் நாயகன் யாஷ், கன்னடத் திரைத்துறையில் பணியாற்றும் மூவாயிரம் தொழிலாளர்களுக்குத் தலா 5000 ரூபாய் நிதியுதவி வழங்கியிருப்பது இந்திய அளவிலான பேச்சாக அமைந்துவிட்டது. ‘தமிழில் முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினி, அஜீத், விஜய், சூர்யா உள்ளிட்டவர்கள் இப்படிப்பட்ட உதவியைச் செய்வார்களா?’ என ஆன்லைனில் உரியவர்களை டேக் செய்து ரணகளம் செய்கிறார்கள் ரசிகர்கள். இதற்கிடையில், ‘என் உதவியை வைத்து வேறு யாரையும் விமர்சிக்காதீர்கள்’ என பி.ஆர்.ஓ-க்கள் மூலமாகத் தகவல் அனுப்புகிறாராம் யாஷ்.

சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘ரங்குஸ்தலம்’ வெற்றிக்கு அடுத்தபடியாய் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் ‘புஷ்பா’ படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் சுகுமார். படம் ரெடியான விதத்தைப் பார்த்து ரிலீஸுக்கு முன்னரே பார்ட் - 2 எடுக்கவும் திட்டமிட்டு ஷூட்டிங்கைத் தொடர்கிறார் சுகுமார். செம்மர பிசினஸில் கொடிகட்டிப் பறந்த புஷ்பராஜ் என்கிற தமிழரின் கதையாம் இது. படத்தின் முன்னோட்டமே பட்டையைக் கிளப்ப, கோடிகளைக் கொட்டிக் கொடுத்துத் தமிழ்நாட்டு விநியோக உரிமைக்குப் போட்டிபோடுகிறார்கள் பலரும்!

டொவினோ தாமஸ் நடிப்பில், மலையாளத்தில் வெளியாகியிருக்கும் ‘களா’ பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. படத்தில் தமிழ் இளைஞனாக வரும் சுமேஷ் மூரினை நன்கு விளையாடவிட்டு, அவன் மூலமாகப் புத்தி பெறுகிற பாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்திருப்பது பலருடைய பாராட்டையும் பெற்றிருக்கிறது. “படம் முழுக்கத் தாங்களே முக்கியத்துவம் பெறணும்னு நினைக்கிற ஹீரோக்களுக்கு மத்தியில் இப்படி ஒருவரா?” என வியக்க வைத்திருக்கும் டொவினோ தாமஸுக்குத் தமிழ்த் திரையுலகிலிருந்தும் ஏக அழைப்பாம்.

மிஸ்டர் மியாவ் - அக்கட பூமி அப்டேட்ஸ்!

பிக்பாஸிலிருந்து 49-வது நாளே வெளியேற்றப்பட்டாலும், சோஷியல் மீடியா பவரால் லைம்லைட்டிலேயே இருக்கிறார் சாக்‌ஷி. லாக் டௌன் சமயத்தில் ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தியவர் யோக, தியானம், ஜிம் என்று மாறிமாறி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். சமீபத்திய அவரது இடது கால் டாட்டூ ஹிட்டாக, ‘என்ன எழுதியிருக்கிறார்?’ என்று பலரும் சோஷியல் மீடியாவில் கேட்க, நேரடியாக நாம் சாக்‌ஷியிடமே கேட்டோம். “La vie est belle’ அதாவது, பிரெஞ்சு மொழியில் ‘லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல்’ என்று பொருள்” என்றார் நம்மிடம். பியூட்டிஃபுல்!

உஷ்!

மாஜிக்கு எதிராகப் பாலியல் புகார் கிளப்பியிருக்கும் நடிகை, சமூகக் கருத்துகளைப் போராளியாய் பரப்பும் பழமான நடிகர் ப்ளஸ் இயக்குநரிடமும் சில காலம் நெருக்கமாக இருந்தாராம். வண்டவாள வண்டியில் தன் பெயரும் ஏறிவிடக் கூடாது என போனிலேயே அம்மணியை தாஜா செய்கிறாராம் புரட்சியாளர். பாவத்த…!