அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

கானவி
பிரீமியம் ஸ்டோரி
News
கானவி

மதுரை சினிமாவின் மைல் கல்லாக விளங்கும் ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் சசிகுமாரிடம் பலரும் பேச்சுவார்த்தை நடத்திவந்தார்கள்.

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் பிரமாண்ட பட்ஜெட் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டுவருகிறார்களாம். ஒரு பாகத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் பேசப்பட்டுவருகிறார். சமீபத்தில் மும்பைக்குச் சென்ற தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தீபிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். முதலில் மழுப்பிய அம்மணி பேசப்பட்ட சம்பளத்தைக் கேட்டு, அடுத்த கணமே ஓகே சொல்லிவிட்டாராம்.

கானவி
கானவி

மதுரை சினிமாவின் மைல் கல்லாக விளங்கும் ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் சசிகுமாரிடம் பலரும் பேச்சுவார்த்தை நடத்திவந்தார்கள். ஆனால், ‘சுப்ரமணியபுரம் படத்துக்கு இரண்டாம் பாகம் என்பதே கிடையாது’ என உறுதியாக மறுத்துவந்தார் சசி. சமீபத்தில் ஓடிடி நிறுவனம் ஒன்று சசிகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. ‘உங்களின் மொத்தக் கடனையும் சிங்கிள் பேமென்ட்டாக அடைக்கும் வகையில் பெரிய தொகையை ஒதுக்குகிறோம்’ என்று ஓடிடி நிறுவனம் அவருக்கு ஷாக் கொடுத்ததாம். விரைவில், ‘பார்ட்-2’ எடுக்க பச்சைக்கொடி காட்டிவிடுவார் சசிகுமார் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

கானவி
கானவி

கார்த்தி நடிப்பில் ‘சர்தார்-2’ எடுக்கும் திட்டத்தை ஒத்திவைத்துவிட்டு, யாஷ் நடிப்பில் அடுத்த படத்தை எடுக்கத் தயாராகிவிட்டார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். ரௌடியிசத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சொல்லும் அட்டகாசமான கதையை மித்ரன் சொல்ல, ‘இப்படியொரு கதைக்காகத்தான் காத்துக்கிட்டு இருந்தேன்’ என ஓகே சொல்லி, அட்வான்ஸும் கொடுத்து ஆளை லாக் பண்ணிவிட்டார் யாஷ். வரும் ஜூன் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கத் திட்டமாம்.

‘பைக்’ நடிகர் படத்தில் கமிட்டாகியிருந்த ‘ரௌடி’ இயக்குநருக்கு இரண்டு கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்ததாம். மேலும், கதை விவாதத்துக்காக மாதம் 20 லட்சம் என இரண்டே கால் கோடி ரூபாய் பணத்தைத் தயாரிப்பு நிறுவனம் செலவழித்திருக்கிறது. மற்ற செலவுகளையும் சேர்த்து மொத்தம் 5 கோடி ரூபாய் ‘ரௌடி’ இயக்குநருக்கே செலவாகிவிட்டதால், ‘மகிழ்ச்சி’ இயக்குநரிடம் சம்பளத்தைக் குறைவாகத் திட்டமிடும்படி தயாரிப்புத் தரப்பில் கேட்கப்பட்டதாம். ‘யார் செய்த செலவை, யார் தலையில கட்டுறாங்க?’ என மகிழ்ச்சி இயக்குநர் மைல்டு அப்செட்டாம். விரைவில் பூஜைக்குத் தயாராகும் புராஜெக்டில் பணப் பஞ்சாயத்து மட்டும் தீர்ந்தபாடில்லையாம்!

கானவி
கானவி

உஷ்...

முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று, சமீபத்தில் மும்பையில் மிகப்பெரிய பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் திரையிடப்பட்ட முன்னோட்டக் காட்சியில், ‘மெர்சலான’ நடிகர் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெயரளவில்கூடச் சேர்க்கப்படவில்லையாம். மாறாக ‘பைக்’ நடிகரின் காட்சிகளைப் பல இடங்களில் மாஸாக சேர்த்திருந்தார்களாம். இதனால், மெர்சலான நடிகரின் மேனேஜர் பாதியிலேயே பார்ட்டியிலிருந்து கழன்றுகொண்டாராம்!