அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஃபரியா அப்துல்லா
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபரியா அப்துல்லா

சிவகார்த்திகேயன் தொடங்கி கார்த்தி வரை பல நடிகர்களின் தேதிக்காகக் காத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

‘நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு’ எனக் கசியும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என்கிறார்கள். குழந்தைகளைப் பராமரிப்பதிலும், படத் தயாரிப்புப் பணிகளிலும் தீவிரமாக இருப்பதால், நடிப்பு வேலைக்குக் கொஞ்சம் இடைவெளி கொடுத்திருக்கிறார் நயன்தாரா. ஜெயம் ரவியுடன் நடிக்கும் ‘இறைவன்’, ஷாருக் கானுடன் ‘ஜவான்’, பெயரிடப்படாத இரண்டு படங்கள் என நயன்தாராவின் அடுத்தடுத்த புராஜெக்ட்டுகள் நீள்கின்றன. ‘குறைந்தது 100 படங்களுக்குப் பிறகுதான் ஓய்வு’ என்பதில் தெளிவாக இருக்கிறாராம் நயன்.

அஜித்தின் அடுத்த படத்தை இயக்க முதலில் அழைக்கப்பட்டவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். ஆனால், அஜித் அழைப்பதற்கு முன்பே, சல்மான் கானிடம் கதை சொல்லி ரிசல்ட்டுக்காக வெயிட் பண்ணிய விஷ்ணுவர்தன், ‘சல்மான் கானின் பதில் தெரியாமல் நான் வருவது நியாயமானதாக இருக்காது’ என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் சொன்னாராம். பிறகுதான் மகிழ்திருமேனியை ஃபிக்ஸ் பண்ணினார்கள். இதற்கிடையில் இந்த விஷயம் சல்மான் கானுக்கு தெரியவர, மனிதர் அசந்துபோயிருக்கிறார். ‘கதைக்காக மட்டுமில்லை… உங்களின் நேர்மைக்காகவும் நிச்சயம் நாம் இணைந்து படம் செய்கிறோம்’ என உறுதிப்படுத்திவிட்டாராம் சல்மான் கான்.

ஃபரியா அப்துல்லா
ஃபரியா அப்துல்லா

சிவகார்த்திகேயன் தொடங்கி கார்த்தி வரை பல நடிகர்களின் தேதிக்காகக் காத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். இத்தனைக்கும் இவர் இயக்கத்தில் படம் செய்ய எப்போது வேண்டுமானாலும் ரெடி எனச் சொல்லி இருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஆனாலும், ஹீரோக்களைப் பிடிக்க முடியாமல் படாதபாடு படுகிறார் பாண்டிராஜ். கிடைத்த இடைவெளியில் மாஸ் ஆக்‌ஷனாக இரண்டு ஸ்கிரிப்டுகளை எழுதி புத்தகமாக்கியிருக்கிறார். இதற்கு மேலும் பெரிய ஹீரோக்களின் தேதி தள்ளிக்கொண்டே போனால், புதுமுகத்தைவைத்துப் படமெடுத்துவிடலாம் என்ற மனநிலைக்கும் தயாராகிவிட்டாராம் பாண்டி.

இயக்குநர் பிஜு விஸ்வநாத் சொன்ன, ‘ஆரஞ்சு மிட்டாய்’ கதையைக் கேட்டுச் சிலிர்த்த விஜய் சேதுபதி, அந்தப் படத்தைத் தானே தயாரித்து, நடித்தார். படம் நஷ்டத்தைக் கொடுத்தாலும், பிஜு விஸ்வநாத்தை வைத்து அடுத்த படத்தைத் தொடங்கும் முடிவில் இருக்கிறாராம் விஜய் சேதுபதி. தயாரிப்பாளர் கிடைக்காவிட்டால் தானே தயாரிக்கவும் ரெடி என்கிறாராம்.

உஷ்...

ஷூட்டிங் இழுபட்ட படத்தின் இசைச் சேர்ப்புப் பணியிலும் ஏகச் சிக்கலாம். ‘இது சரியில்லை… அது சரியில்லை’ என ‘ஹிட்’ இயக்குநர் கத்திக் குவித்துவிட்டாராம். பாடலுக்கான ட்யூன் செலக்‌ஷன் தொடங்கி பின்னணி இசை வரை விவாதம் பெரிதானதாம். பாடல் வரிகளை மாற்றச் சொல்லி முதலில் தலையீடு காட்டிய ‘இசைப் புள்ளி’ ஒருகட்டத்தில் படத்திலிருந்து ‘விடு’பட்டால் சரி என்கிற மனநிலைக்கு வந்துவிட்டாராம். ஆனாலும், இந்த மோதல் விஷயம் எள்முனை அளவுக்குக்கூட வெளியே தெரியாத அளவுக்கு இரு ஜாம்பவான்களும் இன்முகம் காட்டுவதுதான் ஹைலைட்!