அலசல்
அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

நந்தினி ராய்
பிரீமியம் ஸ்டோரி
News
நந்தினி ராய்

கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘1947’ படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது

ரஜினி - த.செ.ஞானவேல் கைகோக்கும் தகவலை நம் ஜூ.வி-தான் முதலில் சொன்னது. ரஜினியிடம் கதை சொல்லி ஓகே வாங்கிய ஞானவேல், தன்னுடைய ‘ஜெய் பீம்’ டெக்னீஷியன் டீம் அப்படியே இந்தப் படத்துக்கும் தேவை எனச் சொன்னாராம். தலையாட்டிய லைகா நிறுவனம், ரஜினியின் சிபாரிசில் அனிருத்தை இசையமைப்பாளராக அறிவித்திருக்கிறது. இதில் திடுக்கிட்டுப்போன ஞானவேல், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், கலை இயக்குநர் கதிர் இருவரும் அவசியம் வேண்டும் என வலியுறுத்திவருகிறாராம். ரஜினி என்ன சொல்லப்போகிறார் எனத் தெரியாமல் ‘ஜெய் பீம்’ பட டெக்னீஷியன்கள் காத்திருக்கிறார்கள்.

நந்தினி ராய்
நந்தினி ராய்

தனுஷும் விஷ்ணு விஷாலும் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. தனுஷ், படத்தைத் தானே இயக்குவதாகச் சொல்ல, தயாரிப்புத் தரப்புக்கு டபுள் ஓகே. நடிகர் + இயக்குநர் என இரட்டிப்புச் சம்பளம் கேட்டார் தனுஷ். அதற்கும் ஓகே சொன்னது சன் பிக்சர்ஸ். இப்போது, திடீரென தன் படத்திலிருந்து விஷ்ணு விஷாலை நீக்கியிருக்கிறாராம் தனுஷ்.

சசிகுமாரின் ‘அயோத்தி’ படம் நல்ல கவனத்தைப் பெற்றிருக்கிறது. மாஸ் ஹீரோயிசத்தைத் தவிர்த்துவிட்டு, கதாபாத்திரத்தின் தன்மை புரிந்து கதையைத் தேர்வுசெய்யத் தொடங்கியிருக்கும் சசிகுமாரின் பிளான், சக்சஸ் ஆகத் தொடங்கியிருக்கிறது. ‘அயோத்தி வெற்றியால், அடுத்தடுத்து ரிலீஸுக்குக் காத்திருக்கும் சசிகுமார் படங்களுக்கு பிசினஸ் வாய்ப்பு கூடத் தொடங்கியிருக்கிறது’ என்கிறார்கள்.

நந்தினி ராய்
நந்தினி ராய்

கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘1947’ படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த விஷயத்தையே அறியாமல் அல்லாடும் கிராமத்தைப் பற்றிய கதை என்பதால், சுவாரஸ்யத்துக்குக் குறைவேயில்லையாம். இந்த நிலையில் கௌதம் கார்த்திக், தன் அடுத்த படமாகத் தேர்வுசெய்து வைத்திருந்த ‘செல்லப்பிள்ளை’யை நிறுத்தச் சொல்லிவிட்டாராம். ‘1947’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தன் வளர்ச்சி பெரிதாக இருக்கும் என அவர் நம்புவதால், அட்வான்ஸைத் திரும்பப் பெற்றுக்கொள்ளச் சொல்லிவிட்டாராம்.

உஷ்...

தொடர்ந்து ஃப்ளாப் கொடுத்தாலும், இசை ஹீரோவை வைத்து சத்தியமான நிறுவனம் படம் எடுத்துக்கொண்டே இருப்பதுதான் பலருக்கும் ஆச்சர்யம். தயாரிப்பு நிறுவனத்தின் வாரிசும், இசை ஹீரோவும் அவ்வளவு நெருக்கமான நண்பர்களாம். ‘நஷ்டம் வந்தாலும் நான் இருக்கிறேன்’ என வாரிசு நம்பிக்கை கொடுக்க, ‘வீரமான படத்தையாவது வெற்றியாக்கிக் கொடுங்கப்பா’ எனக் கெஞ்சுகிறாராம் ஹீரோ!