
கதைத் தேர்வில் மிகுந்த கவனம் காட்டும் வழக்கமுடையவர் சாய் பல்லவி. தமிழில் தொடர்ந்து படங்கள் செய்ய ஆர்வமாக இருக்கும் சாய் பல்லவி, கதைகளைக் கேட்க நேரம் ஒதுக்காமல், தன் இமெயில் முகவரிக்கு அனுப்பச் சொல்கிறார்.
தனுஷ் நடிப்பில் ஒரு படத்தைத் தயாரிக்க, கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாகக் கதை கேட்டுக்கொண்டிருந்தார் தயாரிப்பாளர் மதுரை அன்பு. அவருக்குப் பிடித்த கதை, தனுஷுக்குப் பிடிக்காது. தனுஷுக்குப் பிடித்த கதை, அன்புக்குப் பிடிக்காது. இருவரும் கிட்டத்தட்ட ஒரு கதையை ஓகே செய்யும்போது, இருவருக்கும் நெருக்கமாக இருக்கும் இயக்குநர் சுப்ரமணிய சிவாவுக்கு அந்தக் கதை பிடிக்காது. இப்படியே இழுத்துக்கொண்டே போன கதைப் போராட்டம், ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ‘கட்டா குஸ்தி’ இயக்குநர் செல்லா சொன்ன கதை எல்லோரையும் ஈர்க்க, அட்வான்ஸ் கொடுத்து, படத்தை ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறாராம் அன்பு.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘அயோத்தி’ படம் மூலமாக வெற்றிபெற்றிருக்கிறார் சசிகுமார். படம் குறித்த விவாதங்கள் பெரிதான நிலையில், முதல் மூன்று நாள்கள் தள்ளாடிய வசூல், அப்படியே பிக்கப் ஆகியிருக்கிறதாம். படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை ஜீ நிறுவனம் கைப்பற்றியிருக்கும் நிலையில், தியேட்டரிக்கல் ஷேரும் மிகுதியாகக் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது என்கிறது படத்தரப்பு.

கதைத் தேர்வில் மிகுந்த கவனம் காட்டும் வழக்கமுடையவர் சாய் பல்லவி. தமிழில் தொடர்ந்து படங்கள் செய்ய ஆர்வமாக இருக்கும் சாய் பல்லவி, கதைகளைக் கேட்க நேரம் ஒதுக்காமல், தன் இமெயில் முகவரிக்கு அனுப்பச் சொல்கிறார். எத்தனை கதைகள் வந்தாலும், முழுக்கப் படித்து முடிவெடுக்கிறார். சில கதைகளை அவர் செய்ய முடியாத நிலையிலும்கூட, எழுதியவர்களைத் தொடர்புகொண்டு பாராட்டி, படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சிபாரிசு செய்கிறாராம்.

கமல் நடிப்புக்காக, ராஜ் கமல் நிறுவனத்துக்கு ஸ்கிரிப்ட் புக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அ.வினோத். ‘துணிவு’ ஷூட்டிங் நேரத்திலேயே அவருக்கு அட்வான்ஸ் கொடுத்து அமுக்கிப் போட்டுவிட்டார் கமல். இந்த நிலையில், கமலிடம் ஒன்லைன்கூடச் சொல்லாமல், ‘இந்தக் கதை சாருக்குச் சரியா இருக்கும். படிக்கச் சொல்லுங்க…’ எனக் கதையைப் புத்தகமாக்கிக் கொடுத்திருக்கிறார் அ.வினோத். ‘இந்தியன் - 2’ இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இருக்கும் கமல், ஜூன் மாதம் அ.வினோத் படத்துக்குத் தேதி கொடுத்திருக்கிறாராம்.
உஷ்...
ஸ்டைலிஷ்ஷான இயக்குநர், இப்போது நிறைய படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். பேமன்ட் விஷயத்தில் கடும் கறார் காட்டும் இயக்குநர், ஷூட்டிங் ஸ்பாட் வரை தலையீடு செய்கிறாராம். எந்த ஸ்பாட்டில் ஷூட்டிங் என்பதை முதல் நாளே அவருடைய உதவியாளர்கள் நேரில் வந்து பார்வையிடுவார்களாம். சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் ஸ்பாட் இருந்தால் மட்டுமே ஸ்டைலிஷ் இயக்குநர் நடிக்க ஓகே சொல்வாராம்.