
ரஜினிக்குக் கதை சொல்லிக் காத்திருந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, சைலன்ட்டாக கமல் படத்தில் கமிட்டாகிவிட்டார்.
வெற்றிமாறனின் ‘விடுதலை’ பட முன்னோட்டத்தில் சூரி பட்டையைக் கிளப்பியிருக்கிறார். காமெடியனாக இருந்து கதைநாயகனாக உயர்ந்திருக்கும் சூரி, ஃபிட்டான உடல்வாகிலும், அர்ப்பணிப்பான நடிப்பிலும் முத்திரை பதிக்க, ஏக பாராட்டு. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘கூழாங்கல்’ வினோத் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்திருக்கும் ‘கொட்டுக்காளி’ படத்தின் டீசரும் ரிலீஸாகி, மிரளவைத்திருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்காக, கிட்டத்தட்ட 11 படங்களை இழந்தாராம் சூரி. பெரிய கவனம்பெற்றிருக்கும் ‘அயோத்தி’ படத்தில் சசிகுமாருக்கு நண்பனாக புகழ் நடித்த பாத்திரம், முதலில் சூரிக்குத்தான் சொல்லப்பட்டதாம்.

அஜித் நடிக்கும் அடுத்த படத்துக்கு மகிழ் திருமேனி சொன்ன ஒன்லைன் ஓகேயாகிவிட்டது. ‘முழுக் கதையை லைகா நிறுவனத்திடம் சொன்னால் போதும்’ எனச் சொல்லி ஷூட்டிங்குக்கு ரெடியாகிவிட்டாராம் அஜித். லைகா நிறுவனமும் சீக்கிரமே பூஜை போட்டு ஷூட்டிங்கை ஆரம்பிக்கச் சொல்கிறது. ஆனால் மகிழ் திருமேனி, கதை முழுமையான வடிவம் பெற்ற பிறகே ஷூட்டிங் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். கதாபாத்திரத் தேர்வையும் இந்த மாத இறுதிக்குள் ஓகே செய்துவிட நினைக்கிறார் மகிழ்.
ரஜினிக்குக் கதை சொல்லிக் காத்திருந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, சைலன்ட்டாக கமல் படத்தில் கமிட்டாகிவிட்டார். முன்பு கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பதற்காக லோகேஷ் கனகராஜ் சொன்ன கதைதான், பின்னர் ‘விக்ரம்’ படமாக மாறியது. ரஜினி கேட்ட கதை, மறுபடியும் கமல் அலுவலகக் கதவைத் தட்டுவது இது இரண்டாவது முறை.

தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பயணித்த சத்யராஜ், அடுத்து இந்தியிலும் பிஸியாகிவிட்டார். சரியான கேரக்டர், மரியாதையான சம்பளம் என இரண்டையும் கொடுத்து கௌரவித்திருக்கிறது இந்தித் திரையுலகம். “என்னால் இந்தியில் ஒருசில வார்த்தைகள்கூடப் பேசத் தெரியாது” என சத்யராஜ் சொல்ல, “கட்டப்பாவின் முகம் போதும் சார்...” எனச் சொல்லிவிட்டார்களாம். அடுத்தடுத்து இந்தியில் கதை கேட்டுவருகிறார் சத்யராஜ்.
உஷ்...
நாணுகிற ஹீரோவுடன் திலக நடிகை இணைந்து நடிக்கும் தெலுங்குப் படம் தமிழிலும் ரிலீஸாகிறது. படத்தைப் பெரிதாகக் கொண்டுசேர்க்க ஆளும் தரப்பின் வாரிசிடம் கோரிக்கைவைத்தாராம் அம்மணி. நாணுகிற ஹீரோ கேட்டும் நடக்காத ஒன்று, அம்மணி கேட்டு நடக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்!