அலசல்
அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

பிராக்யா ஜைஸ்வால்
பிரீமியம் ஸ்டோரி
News
பிராக்யா ஜைஸ்வால்

ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், வெப் சீரீஸ் ஒன்றை இயக்குவதற்குத் திட்டமிட்டிருக்கிறார். பல ஓடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அம்மணியிடம் அக்ரிமென்ட் போட்டுவிட்டது அமேசான்

தமிழில் வெற்றிமாறனின் ‘விடுதலை’, இந்தியில் அஜய் தேவ்கனின் ‘போலா’, தெலுங்கில் நானியின் ‘தசரா’ படங்கள் மார்ச் மாத இறுதியில் ஒரே நாளில் ரிலீஸாகின்றன. நானியின் ‘தசரா’ படத்தைத் தமிழிலும் நிறைய திரையரங்குகளில் வெளியிடுவதற்குத் திட்டமிடுகிறார்கள். இதற்கிடையில் சிம்புவின் ‘பத்து தல’ படத்தையும் அதேநாளில் ரிலீஸ் செய்வதற்குத் திட்டமிட்டிருப்பதால், திரையரங்குகளை எந்தப் படத்துக்கு ஒதுக்குவது என்பதில் குளறுபடிகள் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. “ ‘விடுதலை’ படத்தை உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட்’ வாங்கியிருப்பதால், அதற்கே அதிக திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பு” என்கிறார்கள்.

பிராக்யா ஜைஸ்வால்
பிராக்யா ஜைஸ்வால்

‘அயோத்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சசிகுமார் பெரிதாக நம்பியிருப்பது இரா.சரவணன் இயக்கத்தில் ரெடியாகும் ‘நந்தன்’ படத்தை. ‘அயோத்தி’யில் பிறர் நடிப்புக்கு இடம் கொடுத்து, படம் முழுக்க ஒதுங்கி நின்ற சசிகுமார், க்ளைமாக்ஸ் நேரத்தில் முழு கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். மாறுபட்ட இந்த நடிப்புக்குக் கிடைத்த ஆதரவுபோல் ‘நந்தன்’ படத்தின் நடிப்புக்கும் கிடைக்கும் என நம்புகிறார். ‘மே மாதம் ரிலீஸ்’ என டார்கெட் வைத்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைத் தீவிரமாக நடத்திவருகிறார்கள் ‘நந்தன்’ படக்குழுவினர்.

உடல்ரீதியான பிரச்னைகளால் படாத பாடுபடும் சமந்தாவுக்கு, இப்போதைய ஒரே நிம்மதி ‘சாகுந்தலம்’ படம்தானாம். சிகிச்சைகளுக்கு மத்தியில், சமீபத்தில் ‘சாகுந்தலம்’ படத்தை சமந்தாவுக்குப் பிரத்யேகமாகத் திரையிட்டுக் காட்டியிருக்கிறது படக்குழு. மகிழ்ச்சியிலும், ஆனந்தக் கண்ணீரிலும் திக்குமுக்காடிப்போயிருக்கிறார் சமந்தா, ‘இந்த நிறைவே எனக்கான சிகிச்சை’ என இயக்குநர் குணசேகரிடம் நெகிழ்ந்தாராம். ஏப்ரல் 14-ம் தேதி ரிலீஸாகும் இந்தப் படத்தை, தமிழிலும் நிறைய திரையரங்குகளில் திரையிடத் திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் தில் ராஜூ.

பிராக்யா ஜைஸ்வால்
பிராக்யா ஜைஸ்வால்

ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், வெப் சீரீஸ் ஒன்றை இயக்குவதற்குத் திட்டமிட்டிருக்கிறார். பல ஓடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அம்மணியிடம் அக்ரிமென்ட் போட்டுவிட்டது அமேசான். இதற்கிடையில், பான் இண்டியா படம் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த், அதற்காக மலையாளத்தில் பெரிய ஹிட்டடித்த ‘மாளிக்காபுரம்’ படப்புகழ் கதையாசிரியர் அபிஷேக்கை வைத்து முழுக்கதையையும் ரெடிசெய்துவிட்டாராம். ஹீரோ வேட்டை தொடங்கியிருக்கிறது என்கிறார்கள்.

உஷ்...

திலக நடிகை, திடீரென போட்டோ ஷூட் நடத்தி அட்டகாசப் புகைப்படங்களை வெளியிட்டார் அல்லவா... அந்த ஸ்டில்ஸ், நிறைய பட வாய்ப்புகளை அம்மணிக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனவாம். ஹீரோயினை மையப்படுத்தும் கதைகளாகக் குவிய, ‘முன்னணி ஹீரோவுக்கு ஜோடி’யாக நடிக்கும் கதைகளே தேவை எனச் சொல்லிவிட்டாராம் அம்மணி. ஐந்து ஹீரோக்களின் பெயர்களைச் சொல்லி, ‘கதையை ரெடி பண்ணுங்க… அவங்களைச் சந்திக்க நான் ஏற்பாடு பண்றேன்’ என்றாராம்!