அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

 லாவண்யா திரிபாதி - ஆண்ட்ரியா
பிரீமியம் ஸ்டோரி
News
லாவண்யா திரிபாதி - ஆண்ட்ரியா

சுசீந்திரன் படத்தில் விக்ரம் பிரபு

  • ‘கென்னடி கிளப்’ படத்துக்குப் பிறகு, சுசீந்திரன் இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன், ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

  • ‘வலிமை’ படத்தில், அஜித்துக்கு வில்லனாக பலர் நடிக்கிறார்களாம். அவர்களில் ஹூமா குரேஷியும் ஒருவர். ‘காலா’ படத்துக்குப் பிறகு, ஹூமா நடிக்கும் தமிழ்ப் படம் இது. இதில் அவருக்கு பைக் ஸ்டன்ட் காட்சிகள் நிறைய இருக்கின்றனவாம்.

ஹூமா குரேஷி
ஹூமா குரேஷி
  • ‘தள்ளிப் போகாதே’ படத்துக்குப் பிறகு அதர்வா நடிப்பில் உருவாகும் புதிய படத்தை, அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார், ‘மாயவன்’ படத்தில் நடித்த லாவண்யா திரிபாதி. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அதர்வா.

  • வெற்றி மாறன் இயக்கிய ‘வடசென்னை’ படத்தில் நடித்ததைத் தொடர்ந்து, அவர் தயாரிப்பில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் ஆண்ட்ரியா. மேலும், விஜி சந்திரசேகரின் மகளும் நடிகையுமான லவ்லின் சந்திரசேகரும் அந்தப் படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் இயக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

 லாவண்யா திரிபாதி - ஆண்ட்ரியா
லாவண்யா திரிபாதி - ஆண்ட்ரியா
  • அக்‌ஷய் குமாரை வைத்து ‘லக்‌ஷ்மி பாம்’ படத்தை இயக்கிவரும் ராகவா லாரன்ஸ், தற்போது புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ‘5 ஸ்டார்’ நிறுவனம் தயாரிக்கிறது.

ம்யூட்

தொடர்ந்து தனது படங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், ‘மாஸ்’ உச்ச நட்சத்திரங்களில் ஒருவரின் மகனை, முக்கியக் கதாபாத்திரமாக வைத்து ஜூனியர் நட்சத்திரமாக அறிமுகப்படுத்தி மார்க்கெட்டைப் பிடிக்க நினைத்த இயக்குநருக்கு, அந்த உச்ச நட்சத்திரமே கால்ஷீட் கொடுத்துவிட்டாராம். சின்ன மீனைப் பிடிக்க தூண்டில் போட்டவருக்கு ‘சுறா’வே கிடைத்துவிட்டதால் மகிழ்ச்சியில் இருக்கிறாராம் அந்த இயக்குநர்.