அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

சாக்‌ஷி அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
News
சாக்‌ஷி அகர்வால்

ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்தை முடித்துவிட்டு, அ.வினோத்துடன் கைகோக்கிறார் கமல்.

இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, மகிழ் திருமேனி ஆகியோரின் படங்களில் நடிக்க ரொம்பவே ஆசைப்படுகிறாராம் ஆர்யா. இந்த இருவரும் ஆர்யாவை வைத்து ஏற்கெனவே படமெடுத்தவர்கள். ஆனாலும், இருவருமே பிஸியான ஓட்டத்தில் இருப்பதால், அதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அதனால், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, ‘நவம்பர் ஸ்டோரி’ இந்திரா சுப்ரமணியன் இருவரிடமும் கதை கேட்டு அடுத்த லைன்-அப்புக்கு வியூகம் வகுத்துவருகிறாராம் ஆர்யா.

சாக்‌ஷி அகர்வால்
சாக்‌ஷி அகர்வால்

கணவரின் மறைவால் வருத்தத்தில் இருந்த மீனா, சற்றே மீண்டுவரத் தொடங்கியிருக்கிறார். போனிலேயே புதுப் படங்களுக்கான கதைகளைக் கேட்கத் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் பழனி முருகனை மையமாகவைத்து ஓர் இயக்குநர் சொன்ன ஆன்மிகக் கதை மீனாவுக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டதாம். ஹீரோயினுக்கு முக்கியத்துவமான அந்தக் கதை மூலமாக, தன் ரீ என்ட்ரியைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டிருக்கிறாராம் மீனா.

சாக்‌ஷி அகர்வால்
சாக்‌ஷி அகர்வால்

மகிழ் திருமேனி சொன்ன ஒன்லைன் அஜித்துக்கு டபுள் ஓகேயாகிவிட்டதாம். ஆனாலும், படத்தின் பட்ஜெட் குறித்த தோராயக் கணக்கைக்கூட மகிழ் திருமேனி இன்னமும் சொல்லாமல் இருப்பதால், லைகா நிறுவனம் படம் குறித்த அடுத்தகட்ட விவரங்களைச் சொல்லாமல் அமைதி காக்கிறது. இதற்கிடையில், அப்டேட் கேட்டு ஆன்லைனில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்க, மனைவி ஷாலினியுடன் துபாய்க்குப் போன புகைப்படங்களை லீக் செய்திருக்கிறது அஜித் தரப்பு. ‘கடந்த அமாவாசை அன்று பூஜை’ எனத் திட்டமிடப்பட்டிருந்ததாம். ஆனாலும், இயக்குநரின் முழுத் திட்டம் குறித்த தகவல் வந்தால்தான் பூஜை எனச் சொல்லிவிட்டதாம் லைகா நிறுவனம்.

ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்தை முடித்துவிட்டு, அ.வினோத்துடன் கைகோக்கிறார் கமல். அ.வினோத் சொன்ன கதையும், அதிலிருக்கும் டீடெய்லிங்கும் கமலை ரொம்பவே ஆச்சர்யப்படுத்திவிட்டனவாம். எல்லாவற்றையும் தாண்டி, “35 நாள்கள் போதும்” என வினோத் சொன்னதுதான் கமலை ரொம்பவே ஈர்த்துவிட்டதாம். அதனால், குறுகியகாலத்தில் வினோத் படத்தை முடித்துவிட்டு, மணி ரத்னத்துடன் இணைய முடிவெடுத்திருக்கிறார் கமல்.

சாக்‌ஷி அகர்வால்
சாக்‌ஷி அகர்வால்

உஷ்...

நகை காணாமல்போன விவகாரத்தை உச்ச நடிகரின் வாரிசு பெரிதாக்க, போலீஸ் அசுர வேகத்தில் இயங்கி குற்றவாளியை வளைத்திருக்கிறது. ஒருகட்டத்தில் விசாரணைக்காக உச்ச நடிகரின் டிரைவரையும் போலீஸ் வளைக்க, நடிகருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டதாம். “மேற்கொண்டு விஷயம் மீடியாக்களுக்குப் போக வேண்டாம்” என போலீஸுக்கு வேண்டுகோள் வைத்தாராம் உச்ச நடிகர்!