அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

யாஷிகா ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
யாஷிகா ஆனந்த்

போட்டோ ஷூட்களாலும் பெரிய அளவில் பலனில்லை என அறிந்துகொண்டவர், தற்போது தனது சம்பளத்தைக் குறைத்திருக்கிறாராம்.

`பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமா வாய்ப்புகள் அதிகம் வரும் என நினைத்த யாஷிகா ஆனந்துக்கு, விஜய் டி.வி-யின் ரியாலிட்டி ஷோ வாய்ப்புகள் மட்டும்தான் வருகின்றனவாம். பெரிய வாய்ப்புகள் வருகிற வரைக்கும், வரும் வாய்ப்புகளை விட வேண்டாம் என டி.வி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் யாஷிகா, சினிமா வாய்ப்புகளுக்காக அவ்வப்போது கிளாமர் போட்டோ ஷூட் செய்வதையும் வழக்கமாகவைத்திருக்கிறார். போட்டோ ஷூட்களாலும் பெரிய அளவில் பலனில்லை என அறிந்துகொண்டவர், தற்போது தனது சம்பளத்தைக் குறைத்திருக்கிறாராம்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘ஸ்லிம் நயன்தாரா’ எனத் தன்னைத் தானே அழைத்துக்கொள்ளும் தர்ஷாகுப்தா, ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனதில் ரொம்பவே வருத்தமாக இருக்கிறாராம். விரைவில் வரவிருக்கும் ரீ-என்ட்ரி சுற்றில் சிறப்பாகச் சமைத்து, மீண்டும் போட்டிக்குள் நுழைந்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார் தர்ஷா. இந்த மாதிரியான சூழ்நிலையில் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு தேவை என்பதால், தனது இன்ஸ்டாகிராம் கணக்குக்கு ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் வந்ததைத் தனது ரசிகர்களோடு கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகக் கூட்டணி சேர்ந்திருக்கும் சிம்பு - கெளதம் மேனன் படத்துக்கு, ‘சூப்பர் ஸ்டார்’ என்கிற டைட்டிலை வைக்கலாம் என யோசித்திருக்கிறார்கள். ஆனால், அந்த டைட்டிலை வைத்தால் சில பிரச்னைகள் வரும் என்பதால், வழக்கம்போல் தனது பாணியிலேயே பாடல்வரியை படத்தின் பெயராக வைத்திருக்கிறார் கெளதம் மேனன். அவரது ‘காக்க காக்க’ படத்தின் ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’ பாடலில் வரும் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்கிற வரியைத் தனது புதுப்படத்தின் பெயராக அறிவித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் நாயகியாக ‘டாக்டர்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகவிருக்கும் பிரியங்கா மோகனுக்கு, முதல் படம் வெளியாகும் முன்பாகவே, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடிவர ஆரம்பித்திருக்கின்றன. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும், இரண்டாவது முறை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டான்’ படத்திலும் கமிட்டாகியிருக்கும் பிரியங்காவிடம், இன்னும் சில பெரிய படங்களுக்கான பேச்சுவார்த்தையும் நடந்துவருகிறதாம்.

உஷ்!

ஊரே கேட்கும் அப்டேட்டுக்காக போட்டோ ஷூட் எடுக்கப்பட்டு, எட்டு போட்டோக்களை நாயகனிடம் கொடுத்திருக்கிறார் டைரக்டர். மாஸாக இருந்த அந்த ஃபோட்டோஸைப் பார்த்த நாயகன் ‘ஆகஸ்ட்லதானே படம்... ஃபர்ஸ்ட் லுக்கில் இதைவிட்டால் இப்பவே பத்திக்குமே... வெயிட் பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டாராம். எனவே, மார்ச் இறுதியில் ஒரு வியாழன் அன்று ஃபர்ஸ்ட் லுக். ஏப்ரல் இறுதி வாரத்தில் டிரெய்லர் என்று முடிவாகியிருக்கிறதாம்!