அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ரகுல் பிரீத் சிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ரகுல் பிரீத் சிங்

கௌதம் மேனன் படத்தில் கமிட்டானபோதே மிகப்பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் மேகா ஆகாஷ்.

தாறுமாறான விமர்சனங்களைத் தாண்டி, வசூலை வாரிக்குவித்திருக்கிறதாம் அஜித்தின் ‘வலிமை.’ ‘டாக்டர்’, ‘மாநாடு’ படங்களின் மொத்த வசூலை மூன்றே நாள்களில் தாண்டிவிட்டது என்கிறார்கள். அஜித்தின் அம்மா சென்டிமென்ட், பி அண்ட் சி சென்டர்களில் பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதுகாலம் வரை அஜித் செய்த படங்களிலேயே அதிக பட்ஜெட் `வலிமை’ படத்துக்குத்தான். கொரோனாகால நெருக்கடி, மூன்று வருடகால வட்டி என நீண்டது பட்ஜெட். அதையெல்லாம் ஒரு வார காலத்துக்குள் ஈடுசெய்து தயாரிப்பாளர் போனி கபூரைத் தெம்பாக்கியிருக்கிறதாம் ‘வலிமை’ வசூல்!

விஜயகாந்த்தின் மகன் சண்முகப் பாண்டியன், கதை கேட்கும் விஷயத்தில் ரொம்பவே அக்கறையும் கவனமுமாக இருக்கிறார். அடுத்தடுத்து படங்கள் செய்து பிஸியாக இருக்க வேண்டும் என்று எண்ணாமல், நல்ல கதைக்காக எவ்வளவு நாள்கள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என நினைக்கிறாராம். சமீபத்தில் கேட்ட ஹிஸ்டாரிக்கல் ஸ்டோரி ஒன்று அவருக்கு ரொம்பவே பிடித்துப்போனதாம். மதுரை கதைக்களம் என்பதால், அதற்கான ஹோம்வொர்க்குகளில் தீவிரமாகியிருக்கிறாராம் சண்முகப் பாண்டியன்!

ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்

கௌதம் மேனன் படத்தில் கமிட்டானபோதே மிகப்பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் மேகா ஆகாஷ். ஆனால், அடுத்தடுத்து அம்மணி தேர்வுசெய்த படங்கள் சரியாகப் போகவில்லை. இப்போது விஜய் ஆண்டனியுடன் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் கமிட்டாகியிருக்கிறார் மேகா ஆகாஷ். சமீபகாலமாக யார் கதை சொல்ல வந்தாலும், இந்தப் படத்தின் ரிலீஸுக்குப் பிறகே கேட்பதாகச் சொல்கிறாராம். அந்த அளவுக்கு இந்தப் படத்தைப் பெரிதாக நம்புகிறாராம் மேகா ஆகாஷ்.

‘பழைய பஞ்சாங்கம்’, ‘க்ரிஞ்ச்’ என்றெல்லாம் விமர்சனங்கள் கிளம்பினாலும், சென்டிமென்ட் படங்களுக்கு அதிகரித்துவரும் வரவேற்பும் மிகுதியாகத்தான் இருக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ அண்ணன், தங்கை பாசத்தை வலியுறுத்தும் படம். சூர்யா, இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருக்கும் படமும் அண்ணன், தங்கை பாசக் கதைதான். விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்திலும் தழுதழுக்க வைக்கும் தங்கச்சி சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்திருக்கின்றனவாம். சிவகார்த்திகேயனின் ‘டான்’ படம் அப்பா, மகன் உறவைச் சொல்லும் சென்டிமென்ட் கதையாம்!

உஷ்...

‘இவ்வளவு மோசமான விமர்சனங்கள் ஏன் கிளம்பின?’ எனத் தன் மேனேஜர் மூலமாக விசாரிக்கச் சொன்னாராம் பைக் நடிகர். பெரும்பாலும் மீடியா, சமூக வலைதளங்கள் என எதன் பக்கமும் கவனம் காட்டாத பைக் நடிகர், சமீபத்திய `ஸ்ட்ராங்’ படத்தின் விமர்சனங்களை முழுவதுமாகப் பார்த்து மூட் அவுட் ஆனாராம். அதனால்தான், அதற்கான பின்னணி குறித்து விசாரிக்கச் சொன்னாராம்!