அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

திவி வத்யா
பிரீமியம் ஸ்டோரி
News
திவி வத்யா

மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், கைத்துப்பாக்கியுடன் இருக்கும் வடிவேலுவின் கெட்டப் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது

“சூர்யாவை வைத்து பாண்டிராஜ் இயக்கிய ‘எதற்கும் துணிந்தவன்’ என்கிற ஒரே ஒரு படம்தான் ஓடவில்லை. பாண்டிராஜை மொத்தமாக ஓரங்கட்டிவிட்டார்கள் முன்னணி ஹீரோக்கள். பாண்டிராஜால் அடையாளம் காட்டப்பட்ட சிவகார்த்திகேயன்கூட அவருக்கு வாய்ப்பு கொடுக்க முன்வரவில்லை. கார்த்தி, விஷால் என அணுகிய ஆட்களும் பாண்டிராஜுக்குப் பிடிகொடுக்கவில்லை. இந்த நிலையில், ஜெயம் ரவி வலிய முன்வந்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார்” என்கிறார்கள் பாண்டிராஜுக்கு நெருக்கமானவர்கள். ஆம்… பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கிறாராம். தன் மாமியாரின் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி அட்வான்ஸ் கொடுத்திருக்கிறாராம் ஜெயம் ரவி.

அஜித் - மகிழ் திருமேனி இணையும் படத்துக்கு ‘விடாமுயற்சி’ எனத் தலைப்பு வைத்திருப்பது கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. “மாஸ் தலைப்புகளைத் தவிர்த்து தன்னம்பிக்கையான தலைப்புகளை வைத்து ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்” எனச் சிலர் சிலிர்க்க, “லாரி பின்னால் எழுதவேண்டிய வாசகங்களையெல்லாம் தலைப்பாக வைக்கிறாரே… ‘மீகாமன்’, ‘தடையறத் தாக்க’ என்றெல்லாம் தலைப்புகள்வைத்த இயக்குநரை இப்படி மொக்கையாக்கிவிட்டாரே…” என ஆவேசங்களும் அலையடிக்கின்றன. அனிருத் இசை என்பதே அஜித் பட அறிவிப்பின் ஆறுதலான விஷயம்.

நானியின் ‘தசரா’ தமிழில் சுமார், தெலுங்கில் பெரிய ஹிட் என வரவேற்பைப் பெற்றாலும், படத்துக்கு எதிரான விமர்சனங்களும் பெரிதாக இருந்தன. இத்தனை காலம் கதைத் தேர்வில் அசத்திய நானிக்கு ‘தசரா’ பெரிய குழப்பத்தைக் கொடுத்திருப்பதே உண்மை. அதனால், நம்மூர் இயக்குநர் ‘டான்’ சிபி சக்கரவர்த்தி சொன்ன கதைக்கும் அவ்வளவு சீக்கிரம் ஓகே சொல்லாமல், அமைதி காக்கிறாராம் நானி. வசூலில் பெரிய வெற்றிபெற்ற ‘டான்’ என்கிற படத்தைக் கொடுத்த சிபி, இத்தனை காலத்துக்குப் பிறகும் அடுத்த படத்தை அறிவிக்க முடியாத நிலையில் போராடிவருகிறார்.

திவி வத்யா
திவி வத்யா

மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், கைத்துப்பாக்கியுடன் இருக்கும் வடிவேலுவின் கெட்டப் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ‘வடிவேலுவின் உண்மையான ரீ-என்ட்ரி இதுதான்’ என ஆன்லைனில் கொண்டாடித் தீர்க்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளராக இருந்தும், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் பெயர்களுக்குப் பின்னால் உதயநிதி பெயர் போடப்பட்டிருக்கிறது. படத்திலும் உதயநிதியைத் தாண்டி வடிவேலுக்குத்தான் முக்கியப் பாத்திரமாம். இதைப் பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்ட உதயநிதியை யூனிட்டில் கொண்டாடுகிறார்கள்.

உஷ்...

பல வருடங்களாகப் படம் பண்ணாத நிலையிலும், சம்பள விஷயத்தில் கடும் கறார் காட்டுகிறாராம் ‘கதை சுடும்’ இயக்குநர். பிரகாச சேனலிடமும் தான் கேட்கிற சம்பளம் கிடைத்தால்தான் ஷூட் எனத் தெளிவாகச் சொல்லிவிட்டாராம். ‘வாங்கிய சம்பளத்தைவிடக் குறையக் கூடாது’ என்பதில் அவ்வளவு உறுதியாக இருக்கிறாராம்!