சமூகம்
அலசல்
அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

யாஷிகா ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
யாஷிகா ஆனந்த்

சசிகுமாரின் ‘அயோத்தி’ பட வெற்றியை, வளைகுடா நாடுகளில் கொண்டாட்டமாக நடத்தியிருக்கிறார்கள். இதற்காக துபாய், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு சசிகுமார், இயக்குநர் மந்திரமூர்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் ஒரு வாரப் பயணமாகப் போயிருக்கிறார்கள்

நயன்தாராவின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ நிறுவனம் குஜராத்தி மொழியில் தயாரித்து வெளியிட்ட ‘சுப் யாத்ரா’ படம் பெரிய வசூலைக் குவித்திருக்கிறதாம். விஜய் சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் ரீமேக்கான இந்த குஜராத்தி படத்துக்குப் பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் கிடைக்க, அடுத்தடுத்து குஜராத்தி மொழிப் படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் நயன்தாரா. ‘முதலீட்டுக்கு மும்பை நிறுவனங்கள் கைகொடுக்க, நல்ல கதைத் தேர்வு அடிப்படையில் அட்டகாசமான தயாரிப்பாளராக குஜராத்தில் ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறார் நயன்தாரா’ என்கிறார்கள் சினிமா புள்ளிகள்.

ஜெய் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம் ‘தீராக்காதல்.’ ஜெய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்தப் படம், முதல் காதலை நினைவூட்டும் கதையை மையப்படுத்தியதாம். ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ படங்களை இயக்கிய ரோஹித் வெங்கடேசன் இயக்கும் இந்தப் படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் நம்புகிறாராம் ஜெய். இந்தப் படத்தின் ரிலீஸுக்குப் பிறகுதான் அடுத்த படத்துக்கான கதையையும் நிறுவனத்தையும் முடிவெடுக்கிற ஐடியாவில் இருக்கிறாராம் ஜெய். அந்த அளவுக்கு ‘தீராக்காதல்’ இன்றைய தலைமுறையுடன் கனெக்ட் ஆகும் என்கிறாராம்.

யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த்

சசிகுமாரின் ‘அயோத்தி’ பட வெற்றியை, வளைகுடா நாடுகளில் கொண்டாட்டமாக நடத்தியிருக்கிறார்கள். இதற்காக துபாய், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு சசிகுமார், இயக்குநர் மந்திரமூர்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் ஒரு வாரப் பயணமாகப் போயிருக்கிறார்கள். வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தமிழர்கள் எதிர்பாராதவிதமாக இறக்கும்போது, அவர்களின் உடலை பத்திரமாகத் தாய்நாட்டுக்கு அனுப்ப உதவுகிறவர்களை ‘அயோத்தி’ பட விழாவில் தேடிப்பிடித்துக் கௌரவித்திருக்கிறார் சசிகுமார். வெளிநாட்டிலிருந்து உதவுகிற உள்ளத்தினரை நெகிழவைத்துவிட்டதாம் இந்த நிகழ்வு.

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ படம் ரிலீஸுக்கு ரெடியாகியிருக்கிறது. ஆதிக்கவாதிகளின் அடக்குமுறையை எதிர்த்து கொந்தளிக்கிற பாத்திரத்தில் நடித்திருக்கிறார் சேரன். சமீபத்தில் படத்தைப் பார்த்த இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டவர்கள் சேரனின் நடிப்பை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள். படத்தைத் தானே வெளியிடுவதாகச் சொல்லி, சேரனை உற்சாகப்படுத்தியிருக்கிறார் சுரேஷ் காமாட்சி.

உஷ்...

மெர்சலான நடிகரை வளைத்துப்போட ரொம்பவே மெனக்கெடுகிறதாம் பிரகாச நிறுவனம். இந்திப் பக்கம் போன இயக்குநரை அடிக்கடி அந்த நடிகரைச் சந்திக்க வைத்து, சம்பள விஷயங்களைப் பேசி முடிக்கும்படி சொல்கிறதாம் பிரகாச நிறுவனம். நடிகர் என்ன கணக்கு போடுகிறாரோ… இயக்குநரின் போனை எடுக்காமல் காத்திருக்க வைத்திருக்கிறாராம்!