சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

சிம்ரன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிம்ரன்

முதல் இடத்தில் தனுஷ்...

* தனது சினிமா கரியரில் சில்வர் ஜூப்ளியைக் கொண்டாடிவருகிறார் சிம்ரன். இவரது நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் மூன்று படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. மாதவனுடன் ‘நம்பி விளைவு,’ விக்ரமுடன் ‘துருவ நட்சத்திரம்’, அரவிந்த் சுவாமியுடன் ‘வணங்காமுடி’ என ஹாட்ரிக் அடிக்க இருக்கிறார் சிம்ரன். இவை தவிர, த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கவிருக்கும் ‘சுகர்’ படத்தின் ஷூட்டிங்கும் இந்த ஆண்டு தொடங்கவுள்ளது.

* அதிக படங்கள் கையில் வைத்திருக்கும் நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் தனுஷ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’, கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஒரு படம் என, 2022-ம் ஆண்டு வரை தனுஷின் டேட்ஸ் ஹவுஸ்ஃபுல்!

* கெளதம் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்காக கார்த்திக் - ஜெஸ்ஸி ரசிகர்கள் வெயிட்டிங். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தொடர்ச்சியாக இந்தக் குறும்படத்தை வீட்டில் இருந்தபடியே விர்ச்சுவலாக இயக்கியிருக்கும் கெளதம் மேனன், த்ரிஷா நடித்த காட்சிகளின் டீஸரை மட்டும்தான் வெளியிட்டிருக்கிறார். சிம்புவின் ஷூட்டிங்கும் முடிந்த நிலையில், விரைவில் சிம்பு டீஸர் ரிலீஸ் இருக்குமாம்.

சிம்ரன்
சிம்ரன்

* ஊரடங்கு முடிந்து ஷூட்டிங் தொடங்கலாம் என அரசாங்கம் சொன்னாலும், `டாப் நடிகர்கள், நடிகைகள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவார்களா!’ என்ற தவிப்பில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். கிட்டத்தட்ட 75 சதவிகிதத்துக்கும் அதிகமான அளவில் படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில், தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களின் ஹீரோக்களுக்கு போன் அடிக்க... உச்ச நட்சத்திரங்கள் பலரும் ‘இப்போதைக்கு எதுவும் பிளான் பண்ணாதீங்க... எப்ப வருவோம்னு நாங்க சொல்றோம்’ என்கிறார்களாம்.

* கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் ‘பென்குயின்.’ வுமன் சென்ட்ரிக் படமான இந்தப் படம் தியேட்டர் ரிலிஸுக்குத் தயாராக இருந்த நிலையில்தான் கொரோனா விஸ்வரூபம் எடுத்தது. ஏற்கெனவே, ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை வாங்கியிருந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் ‘பென்குயின்’ படத்தையும் அமேசான் பிரைம் வாங்கியிருக்கிறது. படம், ஜூன் முதல் வாரத்தில் ரிலீஸாம்!