அலசல்
அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

தீப்தி சதி
பிரீமியம் ஸ்டோரி
News
தீப்தி சதி

‘மத யானைக் கூட்டம்’ பட இயக்குநர் விக்ரம் சுகுமாறனின் லேட்டஸ்ட் படமான ‘இராவண கோட்டம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது.

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் திரைக்கதையை ஒருவழியாக லாக் பண்ணிக் கொடுத்துவிட்டாராம் இயக்குநர் மகிழ் திருமேனி. ‘லைகா’ நிறுவனம் ஓகே சொன்னால், தனக்குச் சம்மதம் எனச் சொல்லிவிட்டாராம் அஜித். ஹீரோயின் தேடும் படலம் முடிவுக்கு வந்ததும், படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

சமந்தா மிகவும் எதிர்பார்த்த படம் ‘சாகுந்தலம்.’ சுமார் 20 கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்திய இந்தப் படம், சமந்தாவையும் மனரீதியாக முடங்க வைத்துவிட்டது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் படம் படுத்துக்கொள்ள, கதைத் தேர்வில் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறார் சமந்தா.

‘பொன்னியின் செல்வன் 2’ மொத்த கலெக்‌ஷன் 40 கோடியைத் தொட்டால் பெரிய விஷயம் என்றாகிவிட்டது. முதல் பாகத்தின் கலெக்‌ஷனில் பாதிகூட இரண்டாம் பாகத்துக்குத் தேறாத நிலை. வசூல் குறைவைக் காட்டிலும், படம் குறித்த மாற்று விமர்சனங்கள்தான் மணி ரத்னத்தை ரொம்பவே வருத்தத்தில் ஆழ்த்திவிட்டனவாம்.

‘மத யானைக் கூட்டம்’ பட இயக்குநர் விக்ரம் சுகுமாறனின் லேட்டஸ்ட் படமான ‘இராவண கோட்டம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. இதில் விக்ரம் சுகுமாறனைக் காட்டிலும் அதிக கவலையில் இருப்பது நடிகர் சூரிதான். காரணம், விக்ரம் சுகுமாறனின் இயக்கத்தில் அடுத்து நடிக்க ஏற்கெனவே கமிட்டாகியிருப்பவர் சூரி.

தீப்தி சதி
தீப்தி சதி

தெலுங்கில் கவனம் ஈர்த்த ‘ரைட்டர் பத்மபூஷண்’ படம் தமிழில் ரீமேக் ஆகிறது. கதாநாயகர்களின் நண்பர் பாத்திரத்தில் மட்டுமே இதுவரை தலைகாட்டிய ரக்‌ஷன் இதில் கதாநாயகனாக புரொமோஷன் ஆகிறார்.

த்ரிஷாவின் நடிப்பில் அடுத்து ரெடியாகும் படம் ‘தி ரோட்.’ ஐந்து மொழிகளில் ரிலீஸுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறார் த்ரிஷா. மதுரைக் கதைக்களத்தில் இதுவரை செய்திராத பாத்திரத்தில் முதன்முறையாக வெளுத்துக்கட்டியிருக்கிறாராம் அம்மணி.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படம், ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ் பிளான் செய்யப்பட்டிருப்பதால் அந்தத் தேதியை ஏற்கெனவே அறிவித்திருந்த சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ குழு ஜூலை மாதம் முன்கூட்டியே வருகிறது. இதனால் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளைப் புயல் வேகத்தில் பார்க்கிறார்களாம். வேலைகள் இழுபறியானால், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்துடன் ‘மாவீரன்’ படம் மோதினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

உஷ்...

இனி நடிக்கும் படங்களில், திரைக்கதையுடன் ஷாட் டிவிஷன் வரையிலான விவரங்களையும் கொடுக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறாராம் நம்பர் நடிகை. ‘இந்த மாதிரி ஷாட்களை எனக்கு வைக்கக் கூடாது’ என ஆரம்பத்திலேயே தவிர்க்க, இப்படிச் சொல்கிறாராம் அம்மணி. ‘இதெல்லாம் ரொம்ப ஓவர்’ எனத் தலையில் அடித்துக்கொள்கிறார்கள் கதை சொல்லிக் காத்திருக்கும் இயக்குநர்கள்!