அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்: தயாரிப்பு நிறுவன ரெய்டு; அதிர்ச்சி தந்த உச்ச நடிகரின் டீலிங்!

நிகிதா
பிரீமியம் ஸ்டோரி
News
நிகிதா

பிரகாச நடிகர் காளையை அடக்கும் படத்தில் நடிக்கப் பல வருடங்களாகக் காத்திருக்கிறார். ஆனாலும் சக்சஸ் இயக்குநர் படத்தைத் தொடங்குவதற்கான தேதியைச் சொல்லாமல், இழுத் தடித்துக்கொண்டேயிருக்கிறார்.

தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த ரெய்டு உற்சவத்தில் சிக்கிய ஓர் ஆவணம் எல்லோரையும் அதிரவைத்திருக்கிறது. உச்ச நடிகரின் பெயரைக் குறிப்பிட்டு, 50 ஸ்வீட் பாக்ஸுகள் என எழுதப்பட்டிருந்ததாம். மிக நெருக்கடியான நேரத்தில் உச்ச நடிகர் கேட்டதாகவும், ஒரே இரவில் மொத்த ஸ்வீட்டையும் ஏற்பாடு செய்து, கொடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததாம். ஆனால், தயாரிப்பு நிர்வாகத் தரப்பில் அது குறித்து வாய் திறக்க மறுக்கிறார்களாம். உச்ச நடிகரைக் காப்பாற்றத்தான் இந்த மௌனம் என நினைக்கிறது அதிகாரிகள் தரப்பு.

சிங்கமாக கர்ஜிக்கும் படத்தை முடித்துவிட்டு, அதகளமாக ஒரு காமெடி படம் செய்ய ஆசைப்பட்டாராம் மெர்சலான நடிகர். அதற்காகவே ஜாலியும் கேலியுமான இயக்குநரை வலிய அழைத்துக் கதை சொல்லச் சொன்னாராம். ஏற்கெனவே பைக் நடிகருக்குக் கதை சொல்லி அவர் அழைப்புக்காகக் காத்திருந்த ஜாலி இயக்குநரை, மெர்சல் நடிகரின் சர்ப்ரைஸ் அழைப்பு மிரளவைத்ததாம். ஓடோடிப் போய் கதை சொல்லி, சின்னச் சின்ன திருத்தங்களோடு கதையும் ஓகே ஆகிவிட்டதாம். ‘அடுத்து அவர் இயக்கத்தில்தான்’ என எல்லோரும் நம்பிய நேரத்தில், இயக்குநரின் சமீபத்திய படம் ரிலீஸாகி மண்ணைக் கவ்வ, மெர்சல் நடிகர் இப்போது ஜகா வாங்குகிறாராம். ‘பைக் நடிகரை இனி பார்க்கவே முடியாது’ என்கிற நிலையில், இரண்டு பக்கமும் வாய்ப்புகளை நழுவவிட்ட நிலை ஜாலி இயக்குநருக்கு.

நிகிதா
நிகிதா

`கைரேகைச் சட்ட’ வரலாற்றைச் சொல்லும் கதை ஓடிடி தளத்தில் ஓகே ஆகி, சீக்கிரமே ஷூட்டிங் கிளம்பப் போகிறார்கள். தென் பாண்டி நடிகரின் வாரிசை இந்தக் கதையில் மிக முக்கியப் பாத்திரத்துக்குப் பேசிவைத்திருந்தார்கள். அவரும் வருடக்கணக்கில் தாடி, மீசை வளர்த்து படப்பிடிப்புக்கு ரெடியானார். ‘தமிழ்ப் பரம்பரையின் கதையில் அவருக்கென்ன வேலை?’ என அண்ணன் தலைவர் அரற்ற, அவருக்கு விளக்கம் சொல்லிப் போராடிக்கொண்டிருக்கிறது படக்குழு. வருடக்கணக்கில் காத்திருக்கும் வாரிசு, தனக்கு இந்த வரலாற்று வாய்ப்பு கிடைக்குமா, கிடைக்காதா என்கிற திண்டாட்டத்தில் இருக்கிறார்.

பிரகாச நடிகர் காளையை அடக்கும் படத்தில் நடிக்கப் பல வருடங்களாகக் காத்திருக்கிறார். ஆனாலும் சக்சஸ் இயக்குநர் படத்தைத் தொடங்குவதற்கான தேதியைச் சொல்லாமல், இழுத் தடித்துக்கொண்டேயிருக்கிறார். இயக்குநரைவிட தான் பிஸி எனக் காட்டத்தான் மில்க் இயக்குநர், சீறும் இயக்குநரின் படங்களில் கமிட்டானார் பிரகாச நடிகர். ஒரு படம் டிராப்… இன்னொரு படம் ஷீட்டிங் முடிந்த நிலையிலும் சக்சஸ் இயக்குநர் பிஸி மோடிலேயே இருக்க, பிரகாச நடிகர் வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறாராம். படத்தின் தயாரிப்பாளரான பிரமாண்ட புள்ளி படத்தின் மொத்த பிசினஸையும் முடித்து ஒரு வருடத்துக்கு முன்னரே பசை பார்த்துவிட்டாராம். அவரும் சக்சஸ் இயக்குநரை அணுக முடியாமல் தத்தளிப்பது தனிக்கதை!