அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்: அட்லியின் புராஜெக்ட்; தமிழ் என்ட்ரிக்கு தயாராகிறாரா ஜான்வி கபூர்?

ஆத்மிகா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆத்மிகா

விஜய் தேவரகொண்டா - சமந்தா இணையும் பான் இண்டியா படம் ‘குஷி.’ செப்டம்பர் மாதம் திரைக்கு வரத் தயார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா - சமந்தா கெமிஸ்ட்ரி பக்காவாக வொர்க்அவுட்டாகியிருக்கிறதாம்.

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், அட்லியின் அடுத்த படத்தில் நடிக்கப்போகிறார் என்கிற செய்தி பலமாக அலையடிக்கிறது. இரு தரப்பிலும் இது குறித்த விளக்கம் வெளியாகாத நிலையில், இந்தியில் அருண் தவானை வைத்து இயக்கவிருக்கும் படத்தில்தான் ஜான்வி கபூரை ஜோடியாக்க அட்லி திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள். உண்மையில், தமிழில் பக்கா என்ட்ரி கொடுக்கத்தான் நல்ல இயக்குநரைத் தேடிவருகிறாராம் ஜான்வி கபூர். ஷங்கர் தொடங்கி அ.வினோத் வரை அவர் எதிர்பார்க்கும் அத்தனை இயக்குநர்களும் பிஸியோ பிஸி என்கிற நிலையில், ‘நல்ல கதையுடன் யார் வந்தாலும் ஓகே’ என்கிறாராம் ஜான்வி.

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் 75-வது படத்தின் ஷூட்டிங் விரைவில் முடியவிருக்கிறது. படத்தில் இரண்டு அட்டகாசமான வில்லன் கதாபாத்திரங்களாம். அதற்காக இந்தியிலிருந்து நவாசுதீன் சித்திக்கையும், தமிழிலிருந்து சமுத்திரக்கனியையும் அணுகி யிருக்கிறார்கள். நவசுதீன் சித்திக் உடனே ஓகே சொல்லிவிட, சமுத்திரக்கனி தேதிகூட ஒதுக்க முடியாத அளவுக்கு பிஸியாம். அதனால், அந்தப் பாத்திரத்துக்கு பசுபதியை ஃபிக்ஸ் செய்திருக் கிறார்கள். நவசுதீன் சித்திக்கைவிட வலுவான கதாபாத்திரமாம் பசுபதிக்கு!

ஆத்மிகா
ஆத்மிகா

நானியின் ‘தசரா’ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சக்கைபோடு போட்டது. ‘இனி கதைத் தேர்வில் மிகுந்த கவனம் காட்டுவதே நல்ல எதிர்காலத்துக்கு வழிவகுக்கும்’ என நெருங்கியவர்கள் சொன்ன அட்வைஸ், நானியை ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறது. பலரிடமும் கதை கேட்ட நானி, அடுத்து மலையாள இயக்குநர் ஜித்து ஜோசப்புடன் கைகோக்க முடிவெடுத்திருக்கிறார். ஜித்து சொன்ன க்ரைம் த்ரில்லர் கதை நானிக்கு ரொம்பவே பிடித்துப்போக, உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

விஜய் தேவரகொண்டா - சமந்தா இணையும் பான் இண்டியா படம் ‘குஷி.’ செப்டம்பர் மாதம் திரைக்கு வரத் தயார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா - சமந்தா கெமிஸ்ட்ரி பக்காவாக வொர்க்அவுட்டாகியிருக்கிறதாம். பாடல்களும், படத்தின் மேக்கிங்கும் மிகுந்த எதிர்பார்ப்புடன் பேசப்படுவதால், விஜய் தேவரகொண்டா உற்சாக மோடில் இருக்கிறார். ‘நோட்டா’ படத்தின் மூலம் தமிழில் பெரிய கவனம் பெறத் திட்டமிட்டிருந்த விஜய் தேவரகொண்டாவுக்கு அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. ‘குஷி’ நிச்சயம் தமிழில் சாதிக்கும் என நம்பிக்கையாகக் காத்திருக்கிறார் விஜய்.

உஷ்...

குஸ்தி போட்ட மலையாள நடிகையின் படம் பெரிய கவனம் பெற்றதால், சம்பளம் தொடங்கி தேதி உள்ளிட்ட விஷயங்களில் ரொம்பவே பிகு காட்டுகிறாராம். யாரும் அணுக முடியாத ஆளாகக் காட்டிக்கொண்டால்தான் கெத்து என உடனிருப்ப வர்களும் உசுப்பேற்ற, அம்மணியை போனில் பிடிப்பதே பெரும்பாடாக இருக்கிறதாம். போராடி அணுகும் சிலரிடமும், ‘இந்திதான் என் அடுத்த டார்கெட்’ எனச் சொல்லி அழைப்பைத் துண்டிக்கிறாராம் அம்மணி.