சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

விஜய் - ராஷ்மிகா
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் - ராஷ்மிகா

‘கோமாளி’ படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்திருக்கும் ‘லவ் டுடே’ படம் பெரிய ஹிட்டடித்திருக்கிறது

‘துணிவு’ படத்தில் அஜித்துடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார் சமுத்திரக்கனி. ஷூட்டிங் இடைவெளியில் அஜித்துடன் நெருங்கிப் பேசிய சமுத்திரக்கனி, அவர் மனதுக்குப் பிடித்தமான நண்பராகி விட்டாராம். “இத்தனை காலம் எப்படி என் வளையத்துக்குள் வராமல் இருந்தீர்கள்?” என அஜித் ஆதங்கப்பட, சமுத்திரக்கனிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. சமீபத்தில் டப்பிங்கில் சந்தித்த இருவரும், இரவு நெடுநேரம் வரை உரையாடினார்களாம். அப்போது கனி சொன்ன ஒன்லைன், அஜித்தை அசரவைத்துவிட்டதாம். ‘பார்க்கலாம்…’ எனச் சொல்லியிருக்கிறாராம் அஜித்.

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருந்த படத்தின் ஷூட்டிங், நவம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்தது. ராஜூ முருகனுக்கு டைஃபாய்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால், படப்பிடிப்பைச் சில வாரங்களுக்குத் தள்ளிவைத்தார்கள். இதற்கிடையில் கார்த்தி என்ன நினைத்தாரோ, அடுத்த படத்தை முடித்துவிட்டு ராஜூ முருகனுக்குத் தேதி தருவதாகச் சொல்கிறாராம். ஏற்கெனவே கதை சொல்லி ஒரு வருடமாகக் காத்திருக்கும் ராஜூ முருகன், மறுபடியும் காத்திருக்கவேண்டிய நிலை.

விஜய் - ராஷ்மிகா
விஜய் - ராஷ்மிகா
விஜய் - ராஷ்மிகா
விஜய் - ராஷ்மிகா
விஜய் - ராஷ்மிகா
விஜய் - ராஷ்மிகா
விஜய் - ராஷ்மிகா
விஜய் - ராஷ்மிகா

‘கோமாளி’ படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்திருக்கும் ‘லவ் டுடே’ படம் பெரிய ஹிட்டடித்திருக்கிறது. யூத் பல்ஸ் பிடித்து, பக்கா சிக்ஸ் அடித்திருக்கும் பிரதீப் நடிப்பிலும் கலக்கியிருக்கிறார். தனுஷ் பாணியில் அவர் செய்யும் சேட்டைகளுக்குத் தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ். அடுத்து நடிப்பா, இயக்கமா என பிரதீப் ரங்கநாதனிடம் கேள்விகள் மொய்க்கின்றன. ஏற்கெனவே விஜய்க்குக் கதை சொல்லி ஓகே வாங்கியிருக்கும் பிரதீப், அவரை இயக்கத் தயாராக இருக்கிறார். விஜய் படம் தள்ளிப்போனால், மீண்டும் ஹீரோ அவதாரம்தானாம்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்துவரும் உதயநிதி, வடிவேலுவின் நடிப்பை, செல்லும் இடமெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார். தேவர் ஜயந்திக்குப் போயிருந்த போது ‘மாமன்னன்’ குறித்துக் கேட்டவர்களிடம், “பக்கா அரசியல் படமா வந்திருக்கு. வடிவேலு அண்ணனுக்கு நிச்சயமா தேசிய விருது கிடைக்கும்” எனச் சிலாகித்தாராம் உதயநிதி. அந்த அளவுக்கு ‘மாமன்னன்’ படத்தில் குணச்சித்திரமாக வெளுத்து வாங்கியிருக்கிறாராம் வடிவேலு.

உஷ்...

தன் படம் ரெடியாகும்போதெல்லாம், கதையைத் திருடிவிட்டதாகக் கிளம்பும் புகார்கள் மூன்றெழுத்து யூத் இயக்குநரை ரொம்பவே வருத்தத்தில் ஆழ்த்துகின்றனவாம். “பாலிவுட் பக்கம் வந்து படம் பண்ணும்போதும் இதே திருட்டுக் குற்றச்சாட்டைக் கிளப்புறாங்களே…” என நண்பர்களிடம் நொந்து புலம்பினாராம். சீக்கிரமே தனக்கென லீகல் டீம் ஒன்றை உருவாக்கி, நிரந்தரமாக வேலைக்கு வைக்கும் முடிவில் இருக்கிறாராம்!