அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மீனாக்‌ஷி சௌத்ரி
பிரீமியம் ஸ்டோரி
News
மீனாக்‌ஷி சௌத்ரி

மாற்று விமர்சனங்களைக் கடந்து ‘தீரமான’ நடிகரின் படம் வசூலை வாரிக்குவித்ததில், கோடம்பாக்கத்தில் பலருக்கும் ஆச்சர்யம்.

அசுர நடிகர் தெலுங்குப் பக்கம் போய் நடித்த படத்துக்கு பேமென்ட் சரிவரக் கொடுக்கப்படவில்லையாம். அதனால், டப்பிங் போகாமல் ரொம்பவே இழுத்தடித்தாராம் நடிகர். ‘பேசிய தொகையைக் கொடுத்துட்டோம். ஆனால், பாதி ஷூட்டிங்கில் ரேட்டை ஏத்திட்டார். இப்போ பிரச்னை வேறு பண்றார்’ எனத் தயாரிப்புத் தரப்பும் தங்களின் நியாயத்தை எடுத்துவைக்கிறதாம். அக்ரிமென்ட் போடாமல் படம் பண்ணலாம் என்கிற அளவுக்கு நட்புரீதியாக நெருக்கமாக இருந்த தயாரிப்பாளரும், அசுர நடிகரும் இப்போது முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள். பேசியதைக் காட்டிலும் இரண்டு சி-யை அசுர நடிகர் அதிகமாகக் கேட்டதுதான் காரணமாம்.

புயலான காமெடி நடிகரை ஹீரோவாக வைத்து படமெடுக்கும் நிறுவனம், மொத்தமாக மூன்று படங்களுக்கு அவரிடம் அக்ரிமென்ட் போட்டதாம். ஹீரோவாக நடிக்கும் படத்தில், புயல் காமெடியார் கொடுத்த அலப்பறைகள் தயாரிப்பு நிறுவனத்தையே திகைக்க வைத்துவிட்டனவாம். ‘படத்தை முடித்தால் போதும்’ என்கிற அளவுக்கு ஆடம்பரச் செலவுகளை அதிகப்படுத்திவிட்டாராம். அதனால், புயல் காமெடி நடிகருடைய அடுத்த இரண்டு படங்களுக்கான அக்ரிமென்ட் இப்போதைக்குக் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றனவாம்.

மீனாக்‌ஷி சௌத்ரி
மீனாக்‌ஷி சௌத்ரி
மீனாக்‌ஷி சௌத்ரி
மீனாக்‌ஷி சௌத்ரி

பொங்கல் தினத்தில் ரிலீஸாகும் வலிமையான நடிகரின் படத்துக்கு, ஆன்லைன் புரொமோஷன் உள்ளிட்ட விஷயங்களுக்குப் பெரிய தொகை ஒதுக்கக் கோரி சிலர் அறிவுரை சொன்னார்களாம். ஆனால், வழக்கமான புரொமோஷன்களைத் தாண்டி எதுவும் செய்ய முடியாது எனச் சொல்லிவிட்டதாம் தயாரிப்புத் தரப்பு. அதேவேளையில் வலிமையான நடிகருக்கு எதிராகப் பாயும் மெர்சலான நடிகர் ஆன்லைன் புரொமோஷனுக்கும், அட்டாக் பரப்புரைகளுக்கும் சேர்த்துப் பெரும் தொகையை ஒதுக்கியிருக்கிறாராம். படங்களின் ரிலீஸுக்கு முன்னரே மோதல் தூள் பறக்கிறது.

மாற்று விமர்சனங்களைக் கடந்து ‘தீரமான’ நடிகரின் படம் வசூலை வாரிக்குவித்ததில், கோடம்பாக்கத்தில் பலருக்கும் ஆச்சர்யம். மற்றவர்களைக் காட்டிலும் ரொம்பவே ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தது ‘தீரமான’ நடிகர்தானாம். ஷூட்டிங் நேரத்திலேயே படத்தின் மேக்கிங் திருப்தியாக இல்லை என இயக்குநருடன் முட்டிக்கொண்டே இருந்தாராம். படம் முடித்து பிரிவியூ பார்த்தபோதும் திருப்திப்படாமல்தான் திட்டினாராம். படம் ஆஹா ஓஹோவென ஓட, ‘ஜட்ஜ்மென்ட் மிஸ்ஸாயிடிச்சே…’ என நெளிகிறாராம் ஹீரோ.

மீனாக்‌ஷி சௌத்ரி
மீனாக்‌ஷி சௌத்ரி

மதுரைக்கார ஃபைனான்ஸியரால் படாதபாடு பட்ட தாடிக்கார ஹீரோ, ஒருவழியாக மொத்தக் கடனையும் வட்டியோடு செட்டில் பண்ணிவிட்டாராம். கடந்த நான்கு வருடங்களாக அவர் நடித்த படங்களின் மொத்தச் சம்பளத்தையும் கடனுக்கும் வட்டிக்குமே கட்டி, மற்ற தேவைகளைக் குறைத்துக்கொண்டாராம். மீண்டும் நடித்து லாபம் பார்க்கவேண்டிய தாடிக்கார ஹீரோ, மறுபடியும் தயாரிப்பில் இறங்கத் திட்டமிட்டாராம். ‘இது தேவையா?’ எனப் பலரும் எச்சரிக்க, தயாரிப்பு முடிவை இப்போதைக்குத் தள்ளிப்போட்டிருக்கிறாராம்.