Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

திருமணமான பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, தற்போது, நானிக்கு ஜோடியாக ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

* ‘பலே வெள்ளையத் தேவா’, ‘பிருந்தாவனம்’, ‘கருப்பன்’ ஆகிய படங்களில் ஹோம்லியாகவே நடித்துக்கொண்டிருந்த நடிகை தான்யா ரவிச்சந்திரனுக்கு, அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. சிபி சத்யராஜுடன் நடித்த ‘மாயோன்’ படமும் வெளியாகவில்லை. தற்போது தமிழில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் என நடித்துவருகிறார். தமிழில் அவர் நடிக்கும் படத்தை ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். ‘ரெக்கை முளைத்தேன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஹீரோயின் சென்ட்ரிக் கதையில், போலீஸ் அதிகாரியாக தான்யா நடித்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

* திருமணமான பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, பின்னர் மலையாளத்தில் ப்ரித்விராஜுடன் ‘கூடே’, கணவர் ஃபகத் பாசிலுடன் ‘ட்ரான்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது, நானிக்கு ஜோடியாக ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இது நஸ்ரியாவின் முதல் தெலுங்குப் படம். இதற்கு டப்பிங்கும் அவரே ‘மாட்லாட’விருக்கிறாராம்!

* ‘தெய்வத்திருமகள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜுன், அதன் பிறகு சில தமிழ், இந்திப் படங்களில் நடித்துவந்தார். தற்போது, பிரியாமணி நாயகியாக நடிக்கும் ‘கொட்டேஷன் கேங்’ எனும் கேங்ஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கிறார். இதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த சாராவுக்கு, இது வேறொரு முகத்தைக் கொடுக்கும் என்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

* தீபாவளி ஸ்பெஷலாக நடிகைகள் பலரும் தங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். அதில் குறிப்பாக, ஜான்வி பதிவிட்ட குடும்பப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. ஜான்வி, மஞ்சள் நிறப் புடவையிலிருக்கும் புகைப்படங்கள் அவை. தற்போது ‘ரூஹி அஃப்ஸனா’ எனும் ஹாரர் காமெடி படத்திலும், ‘தோஸ்தனா 2’ எனும் ரொமான்ட்டிக் காமெடி படத்திலும் நடித்துவருகிறார்.

மிஸ்டர் மியாவ்

* தமிழில் `தலைவி’, ‘விசித்திரன்’ ஆகிய இரண்டு படங்கள், தெலுங்கில் `பேக் டோர்’, கன்னடத்தில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார் நடிகை பூர்ணா. இந்தநிலையில், மணிரத்னம் தயாரிக்கும் ஆந்தாலஜியான ‘நவரசா’வில் கார்த்திக் நரேன் இயக்கும் பகுதியில் அரவிந்த்சாமியுடன் நடித்திருக்கிறார். `ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என்று நினைக்காமல், கிடைத்த வாய்ப்புகளைக் கைப்பற்றுவதாலேயே இத்தனை படங்கள் பூர்ணாவின் கைவசம் இருக்கின்றன’ என்கிறார்கள்.