அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஆத்மிகா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆத்மிகா

வாடகைத்தாய் விவகாரத்தை அசால்ட்டாகக் கடந்துவிட்ட நயன்தாரா, சீக்கிரமே ஷூட்டிங் கிளம்பவிருக்கிறார்

மலைக்கவைக்கும் அளவுக்கு புரொமோஷன் செய்யப்பட்டும் உதயநிதியின் ‘கலகத் தலைவன்’ பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆளுங்கட்சி ஆட்கள் மூலமாக முதல்நாள் தியேட்டர்களை நிறைத்தாலும், அடுத்தடுத்த நாள்களில் ‘செயற்கையான கூட்டம் வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டாராம் உதயநிதி. ‘கலகத் தலைவன்’ படத்தை அப்படியே மறந்துவிட்டு, மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பிவிட்டாராம். ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகுதான் அடுத்த படத்துக்கான கதையைக் கேட்பேன் எனவும் சொல்லிவிட்டாராம்.

அஜித்தின் ‘துணிவு’ பட டப்பிங்கை 12 நாள்களில் முடித்து அசத்தியிருக்கிறார் ஹெச்.வினோத். ‘பொங்கல் ரிலீஸ்’ எனத் தேதி குறிக்கப்பட்ட நிலையில், ‘கொஞ்சம் பொறுமையாக வரலாமே…’ எனத் தயாரிப்பாளர் போனி கபூரிடம் சொன்னாராம் ஹெச்.வினோத். தன் தரப்பு நெருக்கடியை போனி கபூர் சொல்ல, எந்த மறுப்பும் சொல்லாமல், தடாலடி வேகத்தில் டப்பிங் பணியை முடித்தாராம் வினோத். அஜித்தும் நான்கைந்து நாள்களில் தன் டப்பிங்கை முடித்துக்கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

ஆத்மிகா
ஆத்மிகா
ஆத்மிகா
ஆத்மிகா

வாடகைத்தாய் விவகாரத்தை அசால்ட்டாகக் கடந்துவிட்ட நயன்தாரா, சீக்கிரமே ஷூட்டிங் கிளம்பவிருக்கிறார். ‘இறைவன்’, ‘கனெக்ட்’ ஆகிய படங்களை முடித்துக்கொடுத்திருக்கும் நயன்தாரா, ஷாருக் கானுடன் நடிக்கும் ‘தவான்’ படத்தில் மட்டும் சில நாள்கள் மீதம் வைத்திருக்கிறார். படத்தை இயக்கும் அட்லி, நயன்தாராவுக்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவரும் கெடுபிடி காட்டவில்லை. இந்த நிலையில், மீதமிருக்கும் ஷூட்டிங்கை முடித்துக்கொடுக்க ரெடியாகிவிட்ட நயன், அடுத்து மாதவனுடன் இணைந்து புதிய படத்தைத் தொடங்கவிருக்கிறார். இன்னும் இரண்டு வருடங்களுக்கான கதைத் தேர்வையும் நயன் நடத்தி முடித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆத்மிகா
ஆத்மிகா

தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படத்தின் வேலைகள் 99 சதவிகிதம் முடிந்துவிட்ட நிலையில், டிசம்பர் 2-ம் தேதி ரிலீஸ் என முடிவெடுக்கப்பட்டது. படத்தின் பாடல்களும் பெரிய அளவுக்குப் பேசப்பட்ட நிலையில், திடீரென படத்தின் ரிலீஸை பிப்ரவரி மாதத்துக்குத் தள்ளிவைத்துவிட்டார்கள். ‘தொழில்நுட்ப வேலைகள் தாமதம்’ எனக் காரணம் சொல்லப்பட்டாலும், தயாரிப்பாளருக்கும் தனுஷுக்கும் இடையே நடக்கும் பனிப்போர்தான் உண்மையான பின்னணியாம். இந்த இடைவெளியை அட்டகாசமாகப் பயன்படுத்திக்கொண்டு ‘கட்டா குஸ்தி’யை டிசம்பர் 2 அன்று ரிலீஸ் செய்கிறார் விஷ்ணு விஷால்!

உஷ்...

“ரெயின் எஃபெக்ட் காட்சிகளில் நடிக்க மாட்டேன்” எனப் பெரும்பாலும் ஹீரோயின்கள்தான் சொல்வார்கள். ஆனால், புரட்சிகரமான நடிகர் தன்னை புக் பண்ணும் தயாரிப்பாளர்களிடம் இந்த கண்டிஷனைப் போடுகிறாராம். ‘தண்ணீரில் நனைந்தால் உடம்புக்கு ஆகாது’ எனக் காரணம் சொல்கிறாராம். கதைக்குத் தேவையென்றால், கிராபிக்ஸ் மூலமாக ஏற்பாடு செய்துகொள்ளச் சொல்கிறாராம்!