அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

பார்வதி
பிரீமியம் ஸ்டோரி
News
பார்வதி

ஹாட்ரிக் வெற்றிக்குக் காத்திருந்த வருத்தப்படாத நடிகரின் சமீபத்திய படத்தை, திட்டமிட்டு நெகடிவ் கமென்ட்ஸ் பரப்பி சிதறடித்தார்கள் ஆன்லைன் ஆட்கள்.

வயதே ஏறாமலிருக்க வரம் வாங்கிவந்த ஹீரோயின் அவர். இறங்குமுகமாகவே இருந்த அவருடைய மார்க்கெட், வரலாற்றுப் படத்துக்குப் பிறகு வகைதொகை இல்லாமல் எகிறத் தொடங்கிவிட்டது. இப்போது பேசுகிற நிறுவனங்களுக்கு மூன்று விரல்களைக் காட்டிச் சம்பளம் பேசுகிறார் அம்மணி. அட்வான்ஸாக ஒரு விரலாம். ‘கதை பிடித்திருந்தால் அடுத்த வருஷம் கால்ஷீட்’ எனப் பல வகையான கெடுபிடிகள் காட்டப்படுகின்றனவாம். அதையும் ஏற்றுக்கொண்டு பல நிறுவனங்கள் அட்வான்ஸ் கொடுப்பதால், அம்மணி காட்டில் இப்போ அடைமழை!

க்ரிஞ்ச் படம் என்றாலும், யாரும் எதிர்பார்க்காத வகையில் அது ஹிட் அடிக்க, இயக்குநருக்கு செம யோகம். முதல் பட வாய்ப்பளித்த நிறுவனமே அடுத்த படத்துக்கும் அவரை வளைக்க, தன் குருநாதர் பாணியில் 15 கோடி சம்பளம் கேட்டாராம். திகைத்துப்போன நிறுவனம், ‘5 சி-க்கு மேல் தரவே முடியாது’ எனக் கறார்காட்ட, ‘என் ரேஞ்சு தெரியாமல் போயிடுச்சு’ எனக் கோபித்துவிட்டுக் கிளம்பினாராம் இயக்குநர். தயாரிப்பு நிறுவனம் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் புறக்கணிக்க, வேறு வழியின்றி வலிய வந்து கையெழுத்து போட்டு கமிட்டானாராம் இயக்குநர்.

பார்வதி
பார்வதி

முரட்டு இயக்குநரின் கிராமத்துப் படம், சீனியர் இயக்குநரின் வரலாற்றுப் படம், சமீபத்திய தண்ணீர் படம் மூன்றையுமே குறைத்துத்தான் மதிப்பிட்டிருந்தாராம் அந்தக் கதாநாயகன். மூன்று படங்களுமே வசூலை வாரிக்குவிக்க, கதாநாயனுக்கு ஒன்றுமே புரியவில்லையாம். ஹாட்ரிக் வெற்றி என ரசிகர்கள் கொண்டாட, ‘என் ஜட்ஜ்மென்ட் எப்படி மிஸ்ஸாகுது?’ எனப் புரியாமல், மனதுக்குள்ளேயே மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறாராம். ஜாதகம் மற்றும் நேர கால விஷயங்களில் இப்போது நிறைய நம்பிக்கை வந்துவிட்டதாம் அவருக்கு!

பைக் நடிகரின் படத்தை ஆளுங்கட்சியின் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது. பொங்கல் நாளில் போட்டிப் படமாக ரிலீஸாகும் மெர்சலான நடிகரின் படத்தை, பைக் நடிகரின் படம் மிஞ்ச வேண்டும் என நினைக்கிறாராம் வாரிசுப் புள்ளி. புரொமோஷனுக்கு பைக் நடிகர் வரப்போவதாகக் கிளம்பிய வதந்திக்குப் பின்னால் இருப்பது வாரிசின் கைங்கர்யம்தானாம். இந்தப் பின்னணி பிளான் தெரிந்ததும், துளியும் தாமதிக்காமல் அதற்கு விளக்கம் கொடுத்து, பரபரப்புக்கு எண்ட் கார்டு போடச் சொன்னாராம் பைக் நடிகர். ‘இனி இது போன்ற பப்ளிசிட்டி ஸ்டன்ட்டுகள் அரங்கேறாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்’ எனப் படக்குழுவுக்கும் கறார் உத்தரவு போட்டிருக்கிறாராம் பைக் நடிகர்.

பார்வதி
பார்வதி

ஹாட்ரிக் வெற்றிக்குக் காத்திருந்த வருத்தப்படாத நடிகரின் சமீபத்திய படத்தை, திட்டமிட்டு நெகடிவ் கமென்ட்ஸ் பரப்பி சிதறடித்தார்கள் ஆன்லைன் ஆட்கள். இதில் வருத்தப்படாத நடிகர் செம அப்செட். ‘இந்த நெகடிவ் வேலைகளைச் செய்தவர்கள் யார்?’ என வருத்தப்படாத நடிகரின் தரப்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டதாம். வருத்தப்படாத நடிகருடன் நெருக்கத்தில் இருக்கும் சிலரே அவருக்கு எதிராக நிகழ்த்திய வியூகம் எனத் தெரியவந்ததாம். ‘என் அடுத்த படம் இவர்களுக்கு பதில் சொல்லும்’ எனச் சொல்லி, அதற்கான வேலைகளில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டாராம் வருத்தப்படாத நடிகர்.