அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ் - ஆனந்த சிருஷ்டி

யாஷிகா ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
யாஷிகா ஆனந்த்

‘டிரைவிங் லைசென்ஸ்’, ‘அய்யப்பனும் கோஷியும்’, ‘ஜோசப்’, ‘ஹெலன்’ என அடுத்தடுத்து மலையாளப் படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுகின்றன

* ‘கும்கி’ படத்துக்குப் பிறகு, விக்ரம் பிரபு - லட்சுமி மேனன் ஜோடி இணைந்து நடிக்கிறது. இந்தப் படத்தை முத்தையா இயக்குகிறார். படத்துக்கு ‘பேச்சி’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக சன் நெக்ஸ்ட் தளத்திலும், சன் டி.வி-யிலும் வெளியாகும் என்கிறார்கள். சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகும் ‘மாயா பஜார் 2016’ என்ற கன்னடப் பட ரீமேக்கும் இதேபோல நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

* ஹை ஸோன் கிளாமர், மிட் ஸோன் கிளாமர் என கிளாமரில் கிராமர் சொல்லித்தரும் யாஷிகா ஆனந்த், தற்போது தன்னுடைய நீளமான தலைமுடியை வெட்டி, புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறியிருக்கிறார். யாஷிகாவிடமிருந்து ஒரு போட்டோ வந்துவிட்டால் போதும், இன்ஸ்டாகிராமில் இவருடைய இரண்டு மில்லியன் ஃபாலோயர்களும் உடனே ஆஜராகி லைக், கமென்ட், ஷேர் என பிஸியாகிவிடுகிறார்கள்.

* மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்து வெளியான ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘மாறா’வில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தை அறிமுக இயக்குநர் திலீப் குமார் இயக்கியிருக்கிறார். இந்தப் படம் டிசம்பர் 17-ம் தேதி அமேஸான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகவிருக்கிறது.

யாஷிகா ஆனந்த் - சிருஷ்டி டாங்கே
யாஷிகா ஆனந்த் - சிருஷ்டி டாங்கே

* ‘மேகா’ படத்தில் ‘புத்தம் புது காலை’ பாடலில் சிருஷ்டி டாங்கேவின் கன்னக்குழி அத்தனை அழகாக இருக்கும். அந்தப் படத்துக்குப் பிறகு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், எந்தப் படத்துக்கும் சரியான வரவேற்பு கிடைக்காததால் கொஞ்சம் கிளாமர் மோடுக்குச் சென்றார், சிருஷ்டி. தற்போது, வெஸ்டர்ன் உடைகளில் விதவிதமான போட்டோக்களைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். விஷாலின் ‘சக்ரா’ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* ‘டிரைவிங் லைசென்ஸ்’, ‘அய்யப்பனும் கோஷியும்’, ‘ஜோசப்’, ‘ஹெலன்’ என அடுத்தடுத்து மலையாளப் படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான ‘ப்ரதி பூவன்கோழி’ படம், தமிழிலும் இந்தியிலும் ரீமேக் ஆகவிருக்கிறது. இந்தியில் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை போனி கபூர் பெற்றிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.