அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

அஜித்தைப்போலவே மர்மமான முறையிலேயே தனது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத்.

டிரீம் வாரியர்ஸ் நிறுவனம், ஒரே நேரத்தில் 11 படங்களைத் தயாரிக்கவிருக்கிறது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற முக்கிய நாயகிகளின் தேதிகளை மாதக்கணக்கில் வாங்கிவைத்திருக்கும் டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் சூர்யா, கார்த்தி இருவரிடமும் தலா ஒரு படத்துக்குத் தேதி வாங்கியிருக்கிறது. தமிழ்த் திரையுலகில் தற்போது அதிக படங்களைத் தயாரிக்கிற நிறுவனம் டிரீம் வாரியர்ஸ்தான்!

‘சார்பட்டா’ படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு ‘அரண்மனை 3’ படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார் ஆர்யா. ஆனால், படம் பெரிதாகப் போகாததால் மீண்டும் தனக்கான பிசினஸ் குறைந்துவிடுமோ என நினைக்கிறார் ஆர்யா. இந்தப் பதற்றத்துக்குக் காரணம் ஆர்யா நடிப்பில், அமீர் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் ‘சந்தனத்தேவன்’ 20 கோடி பட்ஜெட்டை நெருங்கிவருகிறதாம். படத்தயாரிப்புக்கு ஆர்யாவும் பணம் போட்டிருக்கிறார்!

மிஸ்டர் மியாவ்

அஜித்தைப்போலவே மர்மமான முறையிலேயே தனது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். சமீபத்தில் தனி ஆளாகத் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குப் பயணித்தவர், நீண்ட க்யூவில் நின்றாராம். மாஸ்க்குடன் இருந்தபோதும் பலரும் அடையாளம் கண்டு செல்ஃபி எடுக்க, போலீஸ் வந்துதான் ஆளை மீட்டு அழைத்துப்போனார்களாம்!

பெண்களுக்கான போர்க்குரலாக ஒலிக்கும் கதைக்காகக் காத்திருக்கிறார் ஓவியா. தேதி, சம்பளம் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் இல்லாமல், இப்படிப்பட்ட கதையில் நடிக்கத் தயார் என்கிறார். ‘அதற்காகக் கதை பிரசாரமாக இருக்கக் கூடாது’ என்றும் சொல்கிறார் ஓவியா!

உஷ்...

“நிறைய படங்களை ஒப்புக்கொண்டு ஏன் இப்படிப் பண்றீங்க?” எனக் ‘கூத்துப்பட்டறை’ நடிகருக்கு அக்கறையாகப் பலரும் கடிதம் எழுதினார்கள். ஆனாலும், இப்போதும் பல கதைகளைக் கேட்டு அட்வான்ஸ்களை வாங்கிப் போட்டபடியேதான் இருக்கிறாராம். சில கட்டுமானப் பணிகளுக்குப் பணம் தேவைப்படுவதுதான் காரணமாம். #அட்வான்ஸும் கடந்து போகும்!