
சினிமா, வெப் சீரிஸ் என இரண்டிலும் கவனம் செலுத்திவந்த அக்ஷரா ஹாசன், தற்போது ஹீரோயினை மையப்படுத்திய மியூசிக்கல் கதையொன்றில் நடிக்க விருக்கிறார்.
* ‘ஆக்ஷன்’ படம் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமான மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமிதான், ‘ஜகமே தந்திரம்’ படத்தின் நாயகி. தற்போது, ‘அர்ச்சனா 31 நாட் அவுட்’ என்ற ஹீரோயின் சென்ட்ரிக் மலையாளப் படத்தில் கமிட்டாகி இருக்கிறார். தவிர, நிவின் பாலியுடன் ‘பிஸ்மி ஸ்பெஷல்’ என்ற படமும் இவர் வசமுள்ளது.
* சினிமா, வெப் சீரிஸ் என இரண்டிலும் கவனம் செலுத்திவந்த அக்ஷரா ஹாசன், தற்போது ஹீரோயினை மையப்படுத்திய மியூசிக்கல் கதையொன்றில் நடிக்க விருக்கிறார். இந்தப் படத்துக்காக கர்னாடக சங்கீதம் கற்றுக்கொள் கிறாராம். இந்தப் படத்தை ‘அமெரிக்க மாப்பிள்ளை’ என்ற வெப் சீரிஸை இயக்கிய ராஜா ராமமூர்த்தி இயக்குகிறார்.

* தெலுங்கில் ‘அசுரன்’ ரீமேக், இந்தியில் அஜய் தேவ்கனுடன் ‘மைதான்’ ஆகிய படங்கள் நடிகை பிரியாமணியின் வசமுள்ளன. தற்போது, ‘கொட்டேஷன் கேங்’ என்ற த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி யிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் உருவாகும் இந்தப் படம் பிரியாமணியை மையப்படுத் தியது என்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர்கள் கோவிந்தா, ஜாக்கி ஷெராஃப் ஆகியோரிடமும் பேச்சு வார்த்தை நடத்திவருகிறார்களாம்.
* கெளதம் கார்த்திக் - யாஷிகா ஆனந்த் நடித்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவிட்டது. இதில் ஹீரோவாக நடிக்க சில இளம் நடிகர்களை அணுகியபோது, ‘நோ’ சொல்லிவிட்டதால், இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமாரே நடித்திருக் கிறார். கரிஷ்மா, அக்ரிதி ஆகிய இரண்டு மாடல்கள் லீட் ரோலில் நடித் துள்ளனர். படத்துக்கு ‘இரண்டாம் குத்து’ எனப் பெயரிட்டுள்ளனர்.
* நடிகர் விஷ்ணு விஷால், கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இதைத் தொடர்ந்து, இந்திய பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் இவரும் காதலிப்பதாகத் தகவல்கள் கசிந்தன. இருவருமே அதை மறுக்கவில்லை. தற்போது, ஜுவாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்து சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார், விஷ்ணு. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருக் கிறார்கள்.

* ‘குட்டி லவ் ஸ்டோரி’ எனும் ஆந்தாலஜி படத்தை கெளதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய், நலன் குமாரசாமி ஆகியோர் இயக்குகின்றனர். இதில், கெளதம் மேனன் இயக்கும் கதையில் அமலா பால், வெங்கட் பிரபு இயக்கும் கதையில் சாக்ஷி அகர்வால், விஜய் இயக்கும் கதையில் மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கின்றனர்.