அலசல்
அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ் - ஓ மை வாணி!

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பெட்ரூம் புகைப்படங்களுக்கு ஏகபோக வரவேற்பு.

* ‘மாஸ்டர்’, ‘கா’, ‘மாளிகை’ உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகக் காத்திருக்கின்றன. இவை தவிர, ‘நோ என்ட்ரி’ என்ற படத்திலும் இவர் நடித்திருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது. த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில், 15-க்கும் மேற்பட்ட நாய்கள் நடித்திருக் கின்றனவாம். அந்த நாய்களிடமிருந்து தப்பித்துவருவதே கதை என்கிறார்கள். சிரபுஞ்சியில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

* தமிழில் ‘ஆலம்பனா’, இந்தியில் ‘83’ ஆகிய படங்கள் பார்வதி நாயர் வசம் உள்ளன. பலவிதமான காஸ்ட்யூம்களில் விதவிதமாக போட்டோஷூட் செய்து, அவற்றை தினமும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவருகிறார். அந்த போட்டோஷூட்டில் பத்தில் ஒன்பது புகைப்படங்கள் ஹை கிளாமர் ஸோன்தான்.

வாணி போஜன்
வாணி போஜன்

* ‘ஓ மை கடவுளே’, ‘லாக்கப்’ என வாணி போஜன் நடித்த முதல் இரண்டு படங்களும் ஹிட். வெற்றிகரமாக 2020-ம் ஆண்டைத் தொடங்கிய இவர், ஆதவ் கண்ணதாசனுடன் ‘தாழ் திறவா’, அதர்வாவுடன் ஒரு படம், விக்ரம் பிரபுவுடன் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பெட்ரூம் புகைப்படங்களுக்கு ஏகபோக வரவேற்பு.

வாணி போஜன்
வாணி போஜன்

* ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவிலுள்ள தன் வீட்டுக்கு விக்னேஷ் சிவனோடு சென்றிருந்தார் நயன்தாரா. அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் செம வைரல். சமீபத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா, அவரின் அம்மா ஆகிய மூவரும் கோவா சென்றிருக்கின்றனர். அங்கு விக்னேஷ் சிவன், நயன்தாராவை ரசித்து ரசித்து எடுக்கும் புகைப்படங்கள் மீண்டும் வைரலாகத் தொடங்கிவிட்டன.

* ‘அமெரிக்க மாப்பிள்ளை’ என்ற வெப் சீரிஸை இயக்கிய ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் படத்துக்கு ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்காக கர்னாடக சங்கீதமும் கற்றுக்கொள்கிறாராம். இந்தப் படத்தில் வரும் முக்கியமான கேரக்டரில் பாடகி உஷா உதுப்பும் நடிக்கிறார்.