அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ருஹானி ஷர்மா
பிரீமியம் ஸ்டோரி
News
ருஹானி ஷர்மா

சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்துக்கு ‘நந்தன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இரா.சரவணன் இயக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.

டிசம்பர் 2-ம் தேதி தனுஷின் ‘வாத்தி’ ரிலீஸாகவிருந்த நிலையில், தயாரிப்பாளருடனான பனிப்போரால் அந்தப் படம் பிப்ரவரி மாதத்துக்குத் தள்ளிப்போனது. அந்த இடைவெளியை நிரப்ப, தன் நண்பன் விஷ்ணு விஷால் நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கிய ‘கட்டா குஸ்தி’ படத்தை ரிலீஸுக்கு வாங்கினார் உதயநிதி. ஃபேமிலி ஆடியன்ஸுக்கும், காமெடி ஆர்வலர்களுக்கும் படம் மிகுந்த மனநிறைவைக் கொடுத்திருப்பதால், நல்ல கலெக்‌ஷன் அள்ள முடியும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள் நண்பர்கள் இருவரும்.

ராஜ்கிரண் - அதர்வா நடிப்பில் சற்குணம் இயக்கிய ‘பட்டத்து அரசன்’ படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. படம் குறித்த எதிர்பார்ப்பை எகிறவைத்ததில் ராஜ்கிரண் பங்களிப்பு முக்கியமானது. தொடர்ந்து தன் சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக அந்தப் படம் குறித்து பாசிட்டிவான கருத்துகளை எழுதியபடியே இருக்கிறார் ராஜ்கிரண். நடித்ததோடு ஒதுங்கிக்கொள்ளும் நடிகர்களுக்கு மத்தியில், தொடர்ந்து புரொமோஷன் பணியைச் செய்யும் ராஜ்கிரண், “நல்ல கதையை நாமதான் சார் புரொமோட் பண்ணணும்” என்கிறார் முத்தாய்ப்பாக.

மிஸ்டர் மியாவ்

சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்துக்கு ‘நந்தன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இரா.சரவணன் இயக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். அதில் வெற்றிலைக் கறை, கலைந்த முடி, அழுக்கு உடை என சசிகுமாரின் மொத்த அடையாளமும் மாறியிருக்க, படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. ‘பிக் பாஸ்’ புகழ் சுருதி பெரியசாமியை டோல்கேட்டில் முந்திரிப் பருப்பு விற்கும் பெண்ணாக மாற்றி, சசிகுமாருக்கு ஜோடியாக்கியிருக்கிறார்களாம். படத்தில் சசிகுமாருக்கு இணையான பாத்திரம் இயக்குநர் பாலாஜி சக்திவேலுக்காம். இருவருக்குமான முட்டலும் மோதலும்தான் கதையாம்.

மிஸ்டர் மியாவ்

இயக்குநர் அவதாரம் எடுத்தே தீருவது என்பதில் தனுஷ் உறுதியாக இருக்கிறார். மதுரை ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் தயாரிப்பில் படம் இயக்க தனுஷ் பேசினார். ஆனால், சம்பளம் உள்ளிட்ட விஷயங்களால் அது சாத்தியப்படாமல் போனது. இந்த நிலையில் தனுஷை இயக்குந ராக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்திருக்கிறது. நடிப்பு, இயக்கம் தனுஷ் என்கிற அறிவிப்பை விரைவில் வெளியிடவிருக்கிறது சன் நிறுவனம். இரண்டுக்கும் சேர்த்து தனுஷ் பேசியிருக்கும் சம்பளம் என நான்கு விரல்களைக் காட்டுகிறார்கள்!

மிஸ்டர் மியாவ்

உஷ்...

ஆடிப் பாடி சம்பாதித்த பணத்தை நிலத்தில் போட்டுவைத்திருந்தார் முன்னாள் ஸ்லிம் நடிகை. சொந்த ஊருக்குப் போகும் திட்டத்தில், நிலங்களை விலை பேசி முடித்தார். திடீரெனத் திட்டம் மாறி, படத் தயாரிப்பில் இறங்கப்போகிறாராம். ‘இது தேவையா?’ என நண்பர்கள் எச்சரிக்க, ‘இதைக் கொடுத்ததும் சினிமாதானே?’ என்றாராம் பொளேரென. சிறு முதலீட்டுப் படங்களைத் தயாரிக்கும் வகையில் கதை கேட்கத் தொடங்கியிருக்கிறார் அம்மணி!