அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

துஷாரா விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
News
துஷாரா விஜயன்

ஒரு பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் விக்ரம். அதனால், அடுத்து கைகோத்திருக்கும் ரஞ்சித்துடன் தொடர்ந்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சூப்பரான நிறுவனத்தின் 100-வது படத்துக்கு தேதி கொடுக்க, மெர்சலான நடிகர் கிட்டத்தட்ட உறுதிசெய்துவிட்டார். எப்போதுமே பண விஷயத்தில் அந்த நிறுவனம் கடும் கறார் காட்டும் என்பதால், பிரமாண்டத் தொகையை இப்போதே பேசி முடித்துவிட நினைக்கிறாராம் மெர்சலான நடிகர். அவர் கேட்கும் தொகையைவிட அதிக தொகை கொடுத்து அசத்தத் திட்டமிட்டிருக் கிறதாம் அந்த நிறுவனம்.

அனுமார் வாலாக நீண்டுகொண்டே போகும் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி, வெற்றிகரமான இயக்குநருக்கு இன்னும் பிடிபடவில்லையாம். வடபழனி பக்கமுள்ள ஒரு பிரபல ஹோட்டலில் ரூம் போட்டு தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறாராம். ஒரு படம், ரெண்டு பார்ட் ஆனதன் அதிர்ச்சியிலிருந்தே மீளாத தயாரிப்பாளர், எங்கு பார்ட் மூன்றையும் எடுக்க வேண்டுமென்பாரோ என்று கதறிக்கொண்டிருக்கிறாராம்!

துஷாரா விஜயன்
துஷாரா விஜயன்

அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடந்துவருகிறது. சுமார் 20 நாள்களுக்குத் திட்டமிடப்பட்டிருக்கும் ஷெட்யூலில் மொத்தப் படத்தையும் முடித்துவிடுவதாக உறுதி கூறியிருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். இதற்கிடையில் அடுத்த படத்தை லைகா நிறுவனத்துக்குக் கொடுத்திருக்கும் அஜித், இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் இந்த நிமிடம்வரை கதை குறித்துக் கேட்கவில்லையாம். படத்தை எப்போது தொடங்குவது என்பது குறித்தும் சொல்லவில்லையாம். அதனால், லைகா ஆட்களும் விக்னேஷ் சிவனும் பாங்காக் பயணப்பட்டு, அங்கேயே அஜித்திடம் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்!

ஃபைனான்ஸியர் அன்புச்செழியனின் தயாரிப்பில் தனுஷ் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அவரிடம் வாங்கியிருந்த கடனுக்காக தனுஷால் மறுக்க முடியாத நிலை. அதனால் தனுஷும் ஒப்புக்கொண்டார். அன்புச்செழியன் தினமும் பல இயக்குநர்களிடம் கதை கேட்டு தனுஷுக்கு அனுப்பிக் கொண்டேயிருந்தார். ‘கதை பிடிக்கலை…’, ‘ஆள் பிடிக்கலை…’ எனக் காரணம் சொல்லி, தப்பித்துக்கொண்டேயிருந்தார் தனுஷ். இந்நிலையில், ரெய்டுக்குப் பிறகு இப்போது படம் தயாரிக்கும் எண்ணம் இல்லை எனச் சொல்லிவிட்டாராம் அன்புச்செழியன். இதில், தனுஷுக்கு செம ஹேப்பியாம்.

துஷாரா விஜயன்
துஷாரா விஜயன்

ஒரு பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் விக்ரம். அதனால், அடுத்து கைகோத்திருக்கும் ரஞ்சித்துடன் தொடர்ந்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். “உடலை எப்படி மாத்தணும்னு மட்டும் சொல்லுங்க... தலைகீழா மாறிவந்து நிக்கிறேன்” என விக்ரம் உறுதி கொடுக்க, கோலார் தங்கவயலில் கூலி வேலை பார்க்கும் ஒருவராக ஸ்கெட்ச் பண்ணிக் கொடுத்தாராம் ரஞ்சித். இந்தப் படத்தில் விக்ரம் மிகப்பெரிய கவனம் பெறுவார் என இப்போதே அடித்துச் சொல்கிறார்கள்!