Published:Updated:

``அக்‌ஷராஹாசன் சில உணவகங்களைப் பரிந்துரைத்தார்..!" மிஸ்டர் இந்தியாவின் ஜாலி பேட்டி

`மிஸ்டர் இந்தியா' தாராசிங்

கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன், மிகவும் பிடித்தமான நெருங்கிய தோழி. சென்னையின் சில முக்கிய உணவு இடங்களைப் பரிந்துரைத்தார். டயட்டைப் பற்றி யோசிக்காமல் நன்றாகச் சாப்பிட்டேன். அவ்வளவு சுவை!

Published:Updated:

``அக்‌ஷராஹாசன் சில உணவகங்களைப் பரிந்துரைத்தார்..!" மிஸ்டர் இந்தியாவின் ஜாலி பேட்டி

கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன், மிகவும் பிடித்தமான நெருங்கிய தோழி. சென்னையின் சில முக்கிய உணவு இடங்களைப் பரிந்துரைத்தார். டயட்டைப் பற்றி யோசிக்காமல் நன்றாகச் சாப்பிட்டேன். அவ்வளவு சுவை!

`மிஸ்டர் இந்தியா' தாராசிங்

`மிஸ்டர் இந்தியா 2017' பட்டம் எட்டிப்பிடித்தவர், மும்பை முகம் தாராசிங் குரானா. இவர், ரத்த ஸ்டெம் செல்களின் பதிவகமாகத் தரமணியில் இயங்கிவரும் தொண்டு நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதுவர். சென்னை வந்திருந்தார், தாராசிங். காரிலேயே பேட்டி தந்தார், கலகலப்பாக!

Dara Singh
Dara Singh

தன்னை உற்சாகமாக வைத்திருப்பவை பற்றி சிலாகித்தார். ``வேலை, அரட்டை எதுவும் இல்லாத சமயத்தில் இசை அதிகம் கேட்பேன். நெட்ஃப்ளிக்ஸ்ல மூவீஸ் பார்ப்பேன். ஒன்று மட்டும் இல்லாம என்னால் இருக்கவே முடியாது என்றால் அந்த ஒன்று, தேடல்! புதிய நாடுகளையும் அந்த நாடுகளின் பல்வேறு உணவுகளையும் தேடிக்கொண்டே இருப்பேன். பட்டியலிட்டு பயணம் செய்வேன்" என்றார், முகம் முழுக்க புன்னகை.

டயட் மற்றும் ஃபிட்னெஸ் பற்றி கேட்டபோது, ``எனக்கு ரொம்பவும் பிடித்தது, சமையல். மிகவும் நன்றாகச் சமைப்பேன். ஸ்வீட்ஸ் சாப்பிட வேண்டும் போல இருந்தால், உடனே வீட்டுக்கு ஓடிவந்து விரும்பிய இனிப்பு வகைகளைச் செய்து சாப்பிடுவேன். நானே செய்து சாப்பிடுவதில் பெரும் மனநிறைவு கிடைக்கும். எவ்வளவு சாப்பிடுகிறேனோ அதற்கேற்ற உடற்பயிற்சியில் எப்போதுமே தவற மாட்டேன். எதையெல்லாம் மெனக்கெட்டு செய்ய வேண்டும், எதைப் போகிறபோக்கில் செய்ய வேண்டும் என்ற தெளிவு உள்ளது எனக்கு.

Dara Singh
Dara Singh

உடற்பயிற்சி, எனது தினசரி செயல்பாடு. மெனக்கெடல் இதில் இருக்காது. உணவில் மெனக்கெடுவேன்" என்றார் கண்ணடித்தபடி! சென்னை பற்றிக் கேட்டோம். ``மிஸ்டர் இந்தியாவுக்கு முன்பாக ஒருமுறை சென்னை வந்துள்ளேன். இப்போது வந்திருப்பதில் மகிழ்ச்சி. இந்த இடங்களெல்லாம் ஏதோவொரு வகையில் என் நெஞ்சுக்கு நெருக்கமாக அமைந்திருக்கின்றன. தென்னிந்திய உணவு ரொம்பப் பிடிக்கும். வரும் வழியில்தான் தயிர்சாதம் சாப்பிட்டேன். அத்தனை ருசி. எப்போதுமே சென்னை அருமைதான்" என்றார், கொள்ளைச் சிரிப்போடு.

வளர்ச்சியை எப்படி உணர்கிறீர்கள் எனக் கேட்டதும், கடகடவென பதில். ``மும்பையின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, படித்து வளர்ந்தேன். நடிகராகவும் மாடலாகவும் வர வேண்டும் என சிறுவயதில் ஆசைப்பட்டேன். எனது வாழ்விடத்திலிருந்து அந்தக் கனவை எட்டுவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாததாக இருந்தது. அதைப் பற்றியெல்லாம் நினைக்காமல், அந்தச் சிறிய பகுதியிலேயேதான் இருக்கவேண்டியதாய் இருந்தது. லட்சியமும் தன்னம்பிக்கையும் இருந்தால் எவரும் நம்மை நிறுத்திவிட முடியாதே.

அதேதான் எனக்கும் நேர்ந்தது. என்னுடைய கனவு என்னை உந்தித்தள்ள, நான் மும்பை கிளம்பிச்சென்றேன். குடும்பத்தினரோடு சண்டைபோட்டுவிட்டு, என் குடும்பத்தைவிட்டே ஓடினேன். என்னுடைய 16 வயதில் புனே சென்று படித்தேன். மும்பையில் பட்டம் பெற்றேன். பிறகு, பிசினஸ் மேனேஜ்மேன்ட் படித்தேன். நாளுக்குநாள் நடிப்பு ஆசை மட்டும் வளர்ந்துகொண்டேயிருந்தது" என்றார், ஆச்சர்யம் குறையாமல்.

நடிப்பு, ஓர் உணர்வு. ஒருநாள் திடீரென நட்சத்திரம் ஆவோம். அடுத்த மூன்றாண்டுகளில், நம்மை மக்கள் மறந்தேகூட விடுவார்கள்; யாருமே நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். நம்பிக்கையோடு நம் திறமையை வளர்த்துக்கொண்டே இருந்தால்தான் நீடித்து நிற்க முடியும். ஒன்றில் மட்டும் நின்றுவிடாமல் பல்வேறு திறனும், கல்வியும் கொண்டிருக்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கை. நிறைய தேடித் தேடிக் கற்பேன். எதையும் ஒதுக்க மாட்டேன். நான் புறப்பட்ட சிறு பகுதி என் தலையில் மிகச் சிலவற்றையே ஏற்றிவைத்திருந்தது, டாக்டர் இன்ஜினீயர் இப்படியெல்லாம் ஆகவேண்டுமென.

Dara Singh
Dara Singh

ஆனால், நான் அதையெல்லாம் தாண்டி நிறைய வாய்ப்பை எனக்காகக் கொண்டிருக்கிறேன். வெவ்வேறு நிறுவங்களின் இன்டெர்ன்ஷிப்புகள் மூலம் சேர்ந்து பலதரப்பட்ட உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன். உண்மையில், நடிப்பு என்பது எனது 8-வது ஆப்ஷன். சீக்கிரம் என்னை பாலிவுட்டில் பார்ப்பீர்கள்" என்றார் உற்சாகமாய். தமிழக நட்சத்திரங்களோடு நட்பு குறித்துக் கேட்டோம். ``கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன், மிகவும் பிடித்தமான நெருங்கிய தோழி. சென்னையின் சில முக்கிய உணவு இடங்களைப் பரிந்துரைத்தார். டயட்டைப் பற்றி யோசிக்காமல் நன்றாகச் சாப்பிட்டேன். அவ்வளவு சுவை."

மிஸ்டர் இந்தியா பட்டம் பெற்ற தருணம் பற்றிக் கூறுகையில் கண்கள் நிறைய பெருமை. ``2017-ம் ஆண்டு பட்டம் பெற்றதில் எனது வாழ்வே முற்றிலும் மாறியது. என் கனவுலகத்திற்குள் காலடி எடுத்துவைத்த தருணம் அது. காலையில் எழுந்து கல்லூரி சென்று வந்த பையனை... மறுநாள், மக்கள் பெரிய ஸ்டாராகப் பார்க்கத் தொடங்குவதை அனுபவிக்கும் உணர்வு அளப்பரியது. இதயபூர்வமாக அதே ஆளாகத்தான் இருப்போம். ஆனால், மக்கள் ஒரு பிரபலமாகப் பார்ப்பார்கள்.

Dara Singh
Dara Singh

அந்த விஷயம்தான் எல்லாவற்றையும் மாற்றியது. பட்டம் வாங்கியதற்கு வீட்டாரின் ரியாக்‌ஷன்? ``என் தந்தையிடம் சென்று, நான் 'மிஸ்டர் இந்தியா' டைட்டில் வாங்கியிருக்கிறேன் என்று சொன்னேன். எனது வீட்டிற்கு நிறைய பத்திரிகையாளர்கள், மீடியாக்காரர்கள் வந்தனர். என் தந்தை அவர்களைப் பார்த்து ஷாக் ஆகியிருந்தார், மகிழ்ந்திருப்பாரா என்றெல்லாம் தெரியாது. ஆனால், அவர் அன்றைக்குச் சொன்ன அறிவுரையை மறக்கவே மாட்டேன். `இப்போது நீ இந்த டைட்டிலை வென்றிருக்கிறாய். உனக்காக மட்டுமே எதையும் செய்துகொள்ளாதே, தயவுசெய்து உலகத்துக்காக எதையாவது செய்' எனச் சொன்னார். அதை மனதில் ஏற்றிக்கொண்டேன். அதன் வெளிப்பாடாகத்தான், நான் நல்லெண்ணத் தூதுவராகப் பணியாற்றுகிறேன்.

மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற பெருமைமிகு இளைஞராக இந்திய வாலிபர்களுக்குச் சொல்ல நினைப்பது... ``இளைஞர்களின் எதிர்காலம் போதைக்கானதாக இருக்கக் கூடாது. கல்லூரி மாணவர்கள், சிறுவர்கள் நிறைய பேர் போதைக்கு அடிமையாகிவிடுகின்றனர். அது, உடல்நலத்தை பாதிப்பதோடு அவர்களின் கனவையும் சேர்த்து பாதித்துவிடுகிறது.

Dara Singh
Dara Singh

இதில் மோசமானது என்னவென்றால், அந்த இளைஞர்களால் அந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாமல் போய்விடுவதுதான். அதுதான் யதார்த்தமும்கூட. ஒருமுறை போதைக்கு அடிமைப்பட்டுவிட்டால் மீள்வது கடினம். மீண்டாலும், அந்தச் சுவடு உடலிலும் மனதிலும் பாதிப்பை உண்டாக்கிக்கொண்டே தான் இருக்கும். என் சகோதர சகோதரிகள் அனைவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். போதைப் பழக்கத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இந்தியாவின் தூண்கள் நாம். எனவே, ப்ளீஸ்... ஸ்டாப் டிரக்ஸ்! இது, தமிழக இளைஞர்களிடம் இருந்தே தொடங்கட்டும்" என தம்ப்ஸ் அப் காட்டினார்!