Published:Updated:

தோனி இப்போது தயாரிப்பாளர்; CSK அணியை வைத்து உருவாகும் திரைப்படம் உள்பட மேலும் இரண்டு படங்கள்!

தோனி

தோனி இப்போது திரைத்துறையில் தயாரிப்பாளராக வலம் வரப்போகிறார். அவரது தயாரிப்பில் மூன்று படங்கள் ரெடி.

Published:Updated:

தோனி இப்போது தயாரிப்பாளர்; CSK அணியை வைத்து உருவாகும் திரைப்படம் உள்பட மேலும் இரண்டு படங்கள்!

தோனி இப்போது திரைத்துறையில் தயாரிப்பாளராக வலம் வரப்போகிறார். அவரது தயாரிப்பில் மூன்று படங்கள் ரெடி.

தோனி

தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று பல வருடங்கள் ஆகின்றன. தற்போது அவர், CSK அணியை வழிநடத்தி ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும் அவரது பெயர் எப்போதும் ஓயாமல் ஊடகங்களில் வளம் வந்த வண்ணம் இருக்கின்றன. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனி விவசாயம் செய்வது, விளம்பரங்களில் நடிப்பது, மற்றும் பல நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடர் என வலம் வந்துகொண்டிருக்கிறார். இதையடுத்து தற்போது திரைத்துறையில் தயாரிப்பாளராக வலம் வரப்போகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

'Roar of the Lion',   'Blaze to Glory, 'The Hidden Hindu'
'Roar of the Lion', 'Blaze to Glory, 'The Hidden Hindu'

தோனி இப்போது 'Dhoni Entertainment' என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் படங்கள் தயாரிக்க இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. ஏற்கெனவே அவரது தயாரிப்பில் இந்தியன் பிரீமியர் லீக் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2013 சூதாட்ட ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு ஐபிஎல் 2018 பதிப்பிற்குத் திரும்பியதை அடிப்டையாகக் கொண்டு 'Roar of the Lion' என்ற 'docu-drama' 'Hotstar'-ல் வெளியாகியிருந்தது. இதையடுத்து, 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு 'Blaze to Glory (docu-drama)' , 'The Hidden Hindu' என்ற புராணத்தை அடிப்டையாகக் கொண்ட திரில்லர் படம் ஒன்றையும் 'Dhoni Entertainment' தயாரிக்கவுள்ளது. இதைத் தெடர்ந்து பாலிவுட் மட்டுமல்லாமல் பல தென்னிந்தியத் திரைப்படங்களை 'Dhoni Entertainment' தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் கசிந்துள்ளன.