சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

“ராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் எளிமையே பலம்!” - அஷ்வத்

அஷ்வத்
பிரீமியம் ஸ்டோரி
News
அஷ்வத்

தமிழில் ஒரு படத்துக்கு ஆறு பாட்டாக இருந்தது, இப்போது மூன்று பாடல்களாக சுருங்கிவிட்டது. பாடலின் நேரமும் குறைந்துவிட்டது.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

`` `எஃப்.ஐ.ஆர்' படத்துல எனக்கு ஒரு அடையாளம் கிடைச்சுது. மக்கள் மனதில் என் படங்கள் எந்த அளவுக்கு உள்ளே போய் தங்கியிருக்கோ, அதுதான் என் இடம். `நளனும் நந்தினி'யில் ஆரம்பிச்சு இன்னிக்கு `எஃப்.ஐ.ஆர்' வரைக்கும் என் பாடல்கள் பேசப்படுகின்றன. நல்லிசையையும் மெல்லிசையையும் ரசிக்கிற ஒவ்வொரு மனசிலும் நான் இருக்கேன். சினிமா மாதிரியான கூட்டு முயற்சியில் என்னுடைய பகுதி எப்போதும் நிறைவாக இருக்கணும்னு நினைப்பேன். இத்தனை கோடி மக்கள் இருக்கிற இடத்தில் நமக்குன்னு ஒரு தனி இடம் கிடைக்குது. எப்படிப் பார்த்தாலும் இசையில் மக்களின் ரசனையை உயர்த்தவேண்டியது நம்ம தார்மிகப் பொறுப்பா இருக்கணும். நல்ல கற்பனைக்கு இடம் கொடுத்தால் மொழியே சந்தோஷப்பட்டு துள்ளிக்கிட்டு வரும்.'' அடர்த்தியாகப் பேச ஆரம்பிக்கிறார் இசையமைப்பாளர் அஷ்வத். தமிழில் நம்பிக்கை வரவு.

``இசைத்துறைக்கு வந்தது எப்படி?’’

``என் சொந்த ஊரே சென்னைதான். அப்பா எப்பவும் திரைப்படப் பாடல்கள் கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அதனால சின்ன வயசுல இருந்தே எல்லாப் பாடல்களும் எனக்கும் அத்துப்படி. ராஜால ஆரம்பிச்சு ரஹ்மான், ஹாரிஸ்னு எல்லாரோட பாடல்களையும் கேட்டும் ரசிச்சும் வளர்ந்திருக்கேன். அண்ணா யுனிவர்சிட்டியில படிக்கும்போது, ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களோட சேர்ந்து குறும்படங்கள் பண்ற வாய்ப்பு கிடைச்சது. அங்கே இருக்குற மாணவர்கள்தான் ‘நளனும் நந்தினியும்’ பண்ணும்போது, என்னை இசையமைக்கக் கூப்பிட்டாங்க. அப்புறம், நிறைய சேனல்களுக்கு ஜிங்கிள்ஸ் பண்ணியிருக்கேன். தொடர்ந்து மதுரையை மையமாகக்கொண்ட கிராமத்துக் கதைகளா தேடி வந்தது. ஒரே மாதிரி பண்ண விரும்பலை. நகரத்துப் படங்களுக்கு இசையமைக்கணும்னு விரும்பினேன். அப்படி வந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்துக்கான இசையும் பேசப்பட்டது.

ஆரம்பத்துலயே எனக்கு இசைக்கான வாய்ப்பு, சூழல், ஆசிரியர்கள்னு நல்ல இடம் இருந்தது. மனசுக்கு இசைதான் பிடித்தமானதாக இருந்தது. `இசையில் உனக்கு ஆர்வம் இருக்கு. வேலையெல்லாம் வேண்டாம். சினிமாவுக்குப் போயிடு'ன்னு நண்பர்கள் சொன்னாங்க. முதல் படமாக தமிழில் `நளனும் நந்தினி'யும் செய்தேன். `பயணம்...' பாடல் ஹிட்டாச்சு. நம்ம இசைத் துறையில் பெரிய பெயரெடுத்தவர்களிடம் தேடிப் பார்த்தா ஒரு அருமையான எளிமை தென்படும். இளையராஜா, ரஹ்மான் மாதிரியானவர்களுக்கு அதுதான் பெரிய பலம். அந்த எளிமை எனக்கும் கைவந்தாலே போதும்னு நினைப்பேன்.''

“ராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் எளிமையே பலம்!” - அஷ்வத்

டிஜிட்டல் ஒலி சேர்க்கை மட்டுமே ஒரு நல்ல இசையை உருவாக்கிடுமா?

''கருவிகளை வெச்சுக்கிட்டு என்ன பண்றத... நம்மகிட்ட விஷயம் இருக்கணும். நிறைய லேட்டஸ்ட் உபகரணங்களை வெச்சுக்கிட்டு இங்கே யாரும் சிறப்பாகப் பண்ண முடியாது. இதெல்லாம் இல்லாத காலத்தில் வந்த பாடல்களைத்தான் இன்னும் இங்கே பாதிக்கு மேலே கேட்டுக்கிட்டு இருக்காங்க.

தமிழில் ஒரு படத்துக்கு ஆறு பாட்டாக இருந்தது, இப்போது மூன்று பாடல்களாக சுருங்கிவிட்டது. பாடலின் நேரமும் குறைந்துவிட்டது. இப்ப டீன் ஏஜ்ல இருக்கிற பசங்க எல்லாத்தையும் ஃபாஸ்ட்டா கேட்கிறாங்க. சின்ன வயதில் நீங்க ஆராதித்து கேட்ட பாடல்கள் பத்தி அவங்களுக்கு அதிகம் தெரியவே தெரியாது. பாரதிராஜா, மகேந்திரன் மாதிரி பாட்டைக் கேட்டு வாங்கினவங்க மாதிரி இப்போ படம் பண்றதில்லை. வரக்கூடிய புதுமை, உங்களுக்குத் திறமை இருந்தால்தான் வரும். நீங்க ஒண்ணும் செய்யாமல் இசையோடு பாடல் தனியாக வந்துடாது. பாடல்னா அதன் விலாசமே இப்ப மாறிப்போயிருக்கு. நல்ல திரைக்கதைகளை கவனித்துப் பார்த்தால், அதில் உணர்ச்சிமிக்க வெளிப்பாடுகள் வருவதற்கான தருணங்கள் பொங்கி வரும். ராஜா, ரஹ்மான் மாதிரியானவர்கள் அந்த மாதிரி தருணங்களைக்கொண்டு வழங்கினார்கள். இசையானது காலத்தைத் தாண்டி நிற்பதற்கு இதுவே காரணம்.''