Published:Updated:

Viduthalai: "வெற்றிமாறன் திரையுலகத்திற்குக் கிடைத்த முக்கியமான இயக்குநர்!"- இளையராஜா புகழாரம்

Viduthalai | இளையராஜா

'விடுதலை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா இயக்குநர் வெற்றிமாறனைப் புகழ்ந்து பேசினார்.

Published:Updated:

Viduthalai: "வெற்றிமாறன் திரையுலகத்திற்குக் கிடைத்த முக்கியமான இயக்குநர்!"- இளையராஜா புகழாரம்

'விடுதலை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா இயக்குநர் வெற்றிமாறனைப் புகழ்ந்து பேசினார்.

Viduthalai | இளையராஜா
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `விடுதலை'. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இரண்டு பாகங்களாக இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், முதல் பாகத்துக்கான இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் படத்தின் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். விழாவின் நாயகன் இளையராஜா மற்றும் படக்குழுவினர் அனைவரும் மேடையில் ஏறிப் படத்தின் இசையை வெளியிட்டனர். அப்போது இயக்குநர் வெற்றிமாறன் இளையராஜாவிடம் பாடல் வாங்கிய அனுபவங்கள் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசினார்.

விடுதலை | இளையராஜா
விடுதலை | இளையராஜா

இதையடுத்து பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, "இப்படம் இதுவரை திரையுலகம் சந்திக்காத ஒரு களத்தில் நடக்கும் ஒன்றாக இருக்கும். வெற்றிமாறனின் ஒவ்வொரு திரைக்கதையும் வெவ்வேறு வகையானவை. கடலில் தோன்றும் அலைகளைப் போல அவரின் திரைக்கதையும் தனித்துவம் கொண்டது. வெற்றிமாறன் திரையுலகத்திற்குக் கிடைத்த முக்கியமான இயக்குநர். 1500 திரைப்படத்திற்கு இசையமைத்த பிறகும் இதை நான் சொல்கிறேன் என்றால் புரிந்து கொள்ளுங்கள். திரையுலகத்திற்குக் கிடைத்த ஒரு நல்ல இயக்குநர் அவர். அதேபோல இப்படத்தில் நீங்கள் இதுவரை கேட்காத இசையைக் கேட்பீர்கள்" என்றார்.