Published:Updated:

Lokesh kanagaraj : `விறுவிறு ஒன்லைன்!'; ரஜினி -லோகேஷ் கனகராஜ் பட அறிவிப்பு எப்போது?!

ரஜினி - லோகேஷ்

`விக்ரம்' தாறுமாறான வசூலை அள்ளிக் குவித்த நிலையில்தான் விஜய்யின் `லியோ' படத்தை இயக்கச் சென்றார் லோகேஷ். `லியோ' படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் படுவேகமாக நடந்து வருகிறது.

Published:Updated:

Lokesh kanagaraj : `விறுவிறு ஒன்லைன்!'; ரஜினி -லோகேஷ் கனகராஜ் பட அறிவிப்பு எப்போது?!

`விக்ரம்' தாறுமாறான வசூலை அள்ளிக் குவித்த நிலையில்தான் விஜய்யின் `லியோ' படத்தை இயக்கச் சென்றார் லோகேஷ். `லியோ' படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் படுவேகமாக நடந்து வருகிறது.

ரஜினி - லோகேஷ்
கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனராஜ் படம் இயக்குவதற்கான பேச்சு கடந்த ஆண்டில் பரபரத்தது. ஆனால், அந்த புராஜெக்ட் ஒருசில காரணங்களால் மேற்கொண்டு நகரவில்லை.

இதனிடையே கமலின் தீவிர ரசிகரான லோகேஷ், கமலிடம் சொன்ன விக்ரம் கதை பிடித்துப் போனதும், உடனடியாக விக்ரம் படத்தை ஆரம்பித்துவிட்டனர். விக்ரம் தாறுமாறான வசூலை அள்ளிக் குவித்த நிலையில்தான் விஜய்யின் `லியோ' படத்தை இயக்க சென்றார் லோகேஷ். `லியோ' படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் படுவேகமாக நடந்து வருகிறது. படத்தில் லோகேஷின் ஆஸ்தான விஜய் சேதுபதியையும் உள்ளே கொண்டு வருவதற்கான வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

'லியோ' கூட்டணி
'லியோ' கூட்டணி

சேது இப்போது மணிகண்டன் இயக்கும் வெப் சீரீஸ் ஒன்றில் படப்பிடிப்பில் இருக்கிறார். உசிலம்பட்டி ஏரியாக்களில் அதன் படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், இன்னமும் விஜய் சேதுபதியிடம் குறித்து அவரிடம் யாரும் பேசவில்லை என்கிறார்கள்.

ஒரு படம் முடித்துவிட்டே அடுத்து இயக்கும் படத்தில் கவனம் செலுத்துவார் லோகேஷ். ஆனாலும் `மாஸ்டர்' படப்பிடிப்பிற்கு இடையேதான் கமலிடம் விக்ரமிற்கான கதையை சொன்னார் அவர். அதைப்போல லோகேஷிடம் ரஜினிக்கான ஒன் லைன் ரெடியாகவே இருக்கிறது. அதை ரஜினியிடம் சொல்லியும் இருக்கிறார். ரஜினி -லோகேஷ் படத்தை இயக்க இப்போது `ஜெயிலர்' எடுத்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறது என்ற பேச்சும் இருக்கிறது.

ரஜினி 171 கூட்டணி
ரஜினி 171 கூட்டணி

இது குறித்து அவர்கள் இருவரிடமும் அந்நிறுவனம் பேசியும் வருகிறது. 'ஜெய்பீம்' இயக்குநர் டி.ஜே.ஞானவேல் படத்தை முடித்துவிட்டு ரஜினி, அடுத்து லோகேஷ் படத்திற்குள் வருவது உறுதி என்றாலும் லைகாவும், ராஜ்கமல் நிறுவனமும் கூட இந்த படத்தை தயாரிக்க ஆர்வமாக இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஆக, தயாரிப்பு நிறுவனம் உறுதியான பிறகுதான் அடுத்தடுத்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும்.