கட்டுரைகள்
Published:Updated:

OTT கார்னர்!

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

ஸ்ட்ரீம் பாய்

V (movie)

OTT கார்னர்!
OTT கார்னர்!

கலவரத்தை ஒடுக்கிய காவல்துறை அதிகாரி சுதீர்பாபுவை ஊரே பாராட்டுகிறது. திடீரென ஒரு போலீஸ் கொல்லப்படுகிறார். கொல்பவர் நானி. அடுத்தடுத்து கொலைகள். அஞ்சு வில்லன், போலீஸ், நானி இவர்களுக்குள்ளான சண்டையும் ட்விஸ்ட்டும்தான் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் V படத்தின் கதை. பிளாஷ்பேக்குக்கு அதிதி ராவ், நிகழ்காலத்துக்கு நிவேதா தாமஸ் இருவரும் இருக்கிறார்கள் அவ்வளவே. அமித் த்ரிவேதியின் இசையில் பாடல்கள் சிறப்பாக இருந்தாலும், பின்னணி இசையில் தமன், ‘ராட்சசன்’ பிஜிஎம்மை எல்லாம் நினைவுபடுத்த வைக்கிறார். அட்டகாசமான த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படம், மசாலாவாக அதிகமாகவே அரைத்துக் கிண்டியதில் பாலய்யா படம்போல் வந்திருக்கிறது. அதிக மசாலாவுக்குத்தான் அங்கு அத்தனை பேர் இருக்கிறார்களே, ஏன் நீங்களும் நானி?

better call saul (series)

OTT கார்னர்!
OTT கார்னர்!

இதுவரை வந்ததிலேயே சிறந்த டிவி/வெப்சீரிஸ் எது என்று கேட்டால் அழைக்காமலே சண்டைகட்ட வந்துவிடுவார்கள் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ ரசிகர்களும், ‘பிரேக்கிங் பேட்’ ரசிகர்களும். அதிலும் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ கடைசி சீசன் சுமார் ரகம் என்பதால் இப்போது ‘பிரேக்கிங் பேட்’தான் இந்த லிஸ்ட்டில் முன்னணியில் இருக்கிறது. அப்படியான பிரேக்கிங் பேடிலிருந்துதான் சத்தமே இல்லாமல் ‘பெட்டர் கால் சால்’ என்னும் தரமான ஸ்பின் ஆப் தொடர் வெளிவந்துகொண்டிருக்கிறது. ஒரு உப்புமா வழக்கறிஞர் எப்படி குற்றவாளிகள் அனைவரும் விரும்பும் தில்லாலங்கடி கிரிமினல் லாயர் ஆகிறார் என்பதுதான் ஒன்லைன். அதன் வழி ‘பிரேக்கிங் பேட்’-ல் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கான பின் கதையையும் சொல்கிறார்கள். களம் வேறு என்றாலும் எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்துமே ‘பிரேக்கிங் பேட்’ பதத்தில் இருக்கின்றன. அதில் வந்த சில முன்னணி கதாபாத்திரங்கள் தவிர்த்து கிட்டத்தட்ட அனைத்து முக்கிய கதாபாத்திரங்களுக்குமே இந்த கதையிலும் வேலையிருக்கிறது. ஆக்ஷன் கம்மியாகவும், ஹியூமர் கொஞ்சம் தூக்கலாகவும் இருக்கும் இதன் சமீபத்திய சீசன் விறுவிறுப்பிலும் ‘பிரேக்கிங் பேட்’க்கு டப் கொடுக்கிறது. பிரேக்கிங் பேட் ரசிகர்கள் மிஸ் செய்யக்கூடாத சீரிஸ்!

back to titanic (documentary)

OTT கார்னர்!
OTT கார்னர்!

கடலைப் போலவே டைட்டானிக் கப்பலும் ஆச்சர்யம்தான். மூழ்கி நூற்றாண்டைக் கடந்தாலும் டைட்டானிக்கைச் சுற்றி ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் இன்னும் நெருக்கமாகவும் துல்லியமாகவும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை ஆராயும் முயற்சியை வரலாற்று ஆய்வாளர், உயிரியலாளர், ஆழ்கடல் ஆராய்ச்சி யாளர்களைக் கொண்ட ஒரு குழு முன்னெடுக் கிறது. டைட்டானிக் கப்பலின் இப்போதைய 3D மாதிரி படம் உருவாக்கப்பட்டு ஒரு குழு ஆய்வு செய்ய, சிதிலங்களின் மீது உள்ள நுண்ணியிரிகளை ஆய்வு செய்து சிதிலங்களின் எதிர்காலத்தைக் கணிக்கிறார்கள். கப்பல் இயங்கியபோது அது சுமந்த உயிர்களின் எண்ணிக்கையை விட இப்போது அது சுமந்துநிற்கும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகம், அதேபோல டைட்டானிக்குடன் தொடர்புடைய உணர்வுபூர்வமான கதைகளும் அதிகம். அப்படி ஓர் உணர்வுபூர்வமான கதையைப் பற்றிய நிஜத்தையும் இந்த ‘Back To Titanic’ ஆவணப்படம் ஹாட்ஸ்டாரில் திரையிடப்பட்டிருக்கிறது.

OTT கார்னர்!
OTT கார்னர்!

love guaranteed (movie)

ஆன்லைன் டேட்டிங் செயலி ஒன்றில் தனக்கான இணை கிடைக்கவில்லை என நீதிமன்றப்படி ஏறும் ஒருவரைப் பற்றிப் பேசுகிறது love guaranteed . ஆயிரம் டேட்டிங் சென்றும் ஒன்றுகூடக் கைகூடாததால் அப்செட்டில் இருக்கிறார் நிக் ஈவன்ஸ். பெண் வழக்கறிஞரான சூசனை வைத்து அந்த நிறுவனத்துக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடுக்கிறார். பிறகென்ன, சூசன், நிக் ஈவன்ஸ் இந்தச் சூழலில் எப்படிக் காதலித்து இணைகிறார்கள் என்பதே மீதிக் கதை. என்னங்க கதைய சொல்லிட்டீங்க என்கிறீர்களா. காலங்காலமாக ரொமாண்டிக் காமெடி படங்களில் வேறு எதை எதிர்பார்ப்பதாம்! கொஞ்சம் காதல், கொஞ்சம் காமெடி என 10 நிமிடம் பெய்யும் மாலை நேர மழைபோல், படம் மூளைக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் முடிந்துவிடும் என்பதே படத்தின் சிறப்பு.