
ஸ்ட்ரீம் பாய்
Secrets of the Saqqara Tomb


2019-ம் ஆண்டு தலைப்புச்செய்தியான எகிப்தின் சக்காரா கல்லறைகள் பற்றிப் பேசுகிறது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி யிருக்கும் Secrets of the Saqqara. அரச படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள் எல்லாவற்றையும் கடந்து வாட்டி என்பவர் எழுப்பிய அந்தக் கல்லறைகள், அத்துணைச் சுத்தமாய் இருக்கின்றன. பண்பட்ட சமூகம், முன்னேறிய சமூகம் என நாம் மார்தட்டிக் கொண்டிருக்க 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த மனிதர்கள் கல்லறைகள் எழுப்பியிருக்கிறார்கள். அதுவும் அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களுடன் வாழ்ந்த மிருகங்களுக்குக்கூட ஒரே இடத்தில் 3000-க்கும் அதிகமான பொருள்கள் என கண்கள் அகல விரிய ஆச்சர்யப்படுத்துகிறது இந்தக் கல்லறைக் குவியல். சலிப்புத் தட்டை வில்லை என்றாலும் பேசிக்கொண்டே இருப்பது சில இடங்களில் நம்மைத் தொந்தரவு செய்கிறது. 110 நிமிடங்கள் ஓடும் இந்த டாக்குமெண்ட்ரி, பண்டைய கால அறியப்படாத மனிதர்கள் பற்றிய ஆவணம்.
ரேட்டிங் 3.0
பீமசேனா நளமகாராஜா
கன்னடம்


உணவுக் கலாசாரத்தை பிரதானமாக வைத்து வரும் படங்கள் இந்திய சினிமாவில் குறைவுதான். ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் கன்னட சினிமா ‘பீமசேனா நளமகாராஜா’ இதனாலேயே தனிக்கவனம் பெறுகிறது. கடவுளின் குழந்தையாக வளர்ந்த நாயகன் சமையல் கலையின் மீதான ஆர்வம் காரணமாக ஒரு ரிசார்ட்டில் ‘செப்’பாகப் பணி செய்கிறார். அங்கு வரும் விருந்தினரான ஒரு பெண்ணிடம் தன் காதல் கதையை விவரிக்கிறார். உணவால் இணைந்த அவர்களின் காதல் வாழ்க்கையை விவரிக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகளைக் கடந்தால் எதிர்பார்க்காத சில ‘வாவ்’ ட்விஸ்ட்கள் எட்டிப்பார்க்கின்றன. தெளிவான நீரோடை போன்ற நாயகன் அரவிந்த் ஐயரின் நடிப்பு சிறப்பு. உஸ்தாத் ஹோட்டல்’, ‘சால்ட் அண்டு பேப்பர்’ போன்ற உணவு சார்ந்த படங்களைப்போல ஒரு கிளாசிக்காக இந்தப் படம் இல்லாவிட்டாலும் தயங்காமல் ஒரு வீக்கெண்டில் ஸ்டிரீம் செய்யலாம்.
ரேட்டிங் : 2.5