சினிமா
Published:Updated:

OTT கார்னர்

Sundari gardens (Movie)
பிரீமியம் ஸ்டோரி
News
Sundari gardens (Movie)

மலையாள உலகிலிருந்து வரும் ஃபீல் குட் படங்களில் இந்த வார கோட்டா ‘சுந்தரி கார்டன்ஸ்.’ பள்ளி ஒன்றில் நூலகராகப் பணிபுரிகிறார் அபர்ணா பாலமுரளி.

OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்

Pinocchio (Movie)

இத்தாலியா கிராமத்தில் வாழும் கெப்பட்டோ தன் மகனை இழந்து வாடுகிறார். நிர்க்கதியற்று நிற்கும் கெப்பட்டோ தனக்கென ஒரு பொம்மலாட்டக் கருவியை வடிவமைத்து அதற்குப் பினோக்கியோ எனப் பெயர் வைக்கிறார். ஓர் இரவு சால் நட்சத்திரத்தைப் பார்த்ததும், இந்த பொம்மைக்கு உயிர் வரக்கூடாதா என அவர் வேண்டிக்கொள்ள அதுவும் அப்படியே நடக்கிறது. ஆனால், உயிர்பெற்ற அந்த பொம்மைக்கு மனிதமும், உணர்வுகளும் துளிர்விட சில நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அந்த பொம்மை, கெப்பட்டோவுக்காக முழு மனிதனாக மனிதத்துடன் மாறியதா என்பதே ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் Pinocchio படத்தின் கதை. கெப்பட்டோவாக டாம் ஹாங்க்ஸ் தன் முதல் காட்சியிலேயே பிரமாதப்படுத்திவிடுகிறார். அதீதப் புகழ், தீய பழக்கங்கள் போன்றவை மனிதர்களை எந்த எல்லைக்கும் இட்டுச் செல்லும் என்கிற நீதிக்கதைதான் பெசிய மொழியில் எழுதப்பட்ட The Adventures of Pinocchio. 200-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகம், பல மொழிகளில் திரைப்படமாக, மேடை நாடகமாக எடுக்கப்பட்டது எனப் பல பெருமைகள் இந்தக் கதைக்கு உண்டு. இந்தப் படத்தில் பிரமாண்டம் இருக்கும் அளவு, எமோஷனல் காட்சிகள் பெரிதாக இல்லை என்பதே சிறு குறை. குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும் அனைவரையும் ஈர்க்கும் இந்தப் பினோக்கியோ.

OTT கார்னர்
OTT கார்னர்

Sundari gardens (Movie)

மலையாள உலகிலிருந்து வரும் ஃபீல் குட் படங்களில் இந்த வார கோட்டா ‘சுந்தரி கார்டன்ஸ்.’ பள்ளி ஒன்றில் நூலகராகப் பணிபுரிகிறார் அபர்ணா பாலமுரளி. அதே பள்ளியில் இங்கிலீஷ் வாத்தியாராக வந்து சேர்கிறார் நீரஜ் மாதவ். கொஞ்ச நாள்களில் நீரஜின் மேல் அபர்ணா காதல் கொள்ள, நீரஜோ இன்னொரு டீச்சரைக் காதலிக்கிறார். இப்படி மாறி மாறி காதல் கண்ணாமூச்சி ஆடும் இவர்களால் நிகழும் கலாட்டாக்கள்தான் கதை. அபர்ணா க்யூட்டான ரியாக்‌ஷன்களால் கவர்கிறார். ஆனால் கதை நல்லுணர்வுத் திரைப்படங்களுக்கே உரிய அதே டெம்ப்ளேட்டில் அப்படியே இருப்பதுதான் பிரச்னை. வெகு சுலபமாக யூகிக்க முடிகிற காட்சியமைப்புகள் படத்தை சாதாரண சினிமாவாக்கிவிடுகின்றன. ‘எங்களுக்குத் தேவை ஜாலியா டைம்பாஸ் பண்ண ஒரு படம்’ என நினைப்பவர்கள் தாராளமாய் சோனி லைவில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்

Seoul Vibe (Movie)

தென்கொரியாவில் நிஜத்திலிருந்த ஒரு சர்வாதிகாரியை மையமாய் வைத்து எடுக்கப்பட்ட காமெடியும் ஆக்‌ஷனும் கலந்த நெட்ப்ளிக்ஸ் படம் இது. 1988 ஒலிம்பிக்ஸ் தென்கொரியாவில் நடக்கவிருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திப் பல நூறு கோடி ரூபாயைத் தன் சகாக்களோடு வெளிநாட்டிற்குக் கடத்த முயல்கிறார் அந்த சர்வாதிகாரி. அந்த முயற்சியைத் தடுக்க அண்டர்கவர் உளவாளிகளாய் உள்ளே நுழைகிறது ஒரு குழு. இவர்கள் எப்படி ஸ்கெட்ச் போட்டு அந்த சர்வாதிகாரியையும் அவரின் கூட்டாளிகளையும் சிறைக்குள் தள்ளுகிறார்கள் என்பதே கதை. ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படங்களின் தாக்கம் ஆங்காங்கே தெரிந்தாலும் ஓரளவு நகைச்சுவையை வைத்து சமாளித்திருக்கிறார்கள். படத்தில் பெரிதும் பாராட்டப்படவேண்டியது கலை இயக்கம்தான். 35 ஆண்டுகளுக்கு முந்தைய உலகை தத்ரூபமாய் நம் கண்முன் காட்டி அசத்துகிறார்கள். ‘சராசரி படம்னாலும் அது கொரியன் மொழியா இருந்தா பார்ப்பேன்’ எனச் சொல்பவர்களுக்கான படம் இது.