கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

OTT கார்னர்

Meet Cute
பிரீமியம் ஸ்டோரி
News
Meet Cute

கிறிஸ்துமஸை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் குட்டிப் படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இறக்கியிருக்கிறது மார்வெல். அதன் Phase four திட்டத்தின் கடைசிப் படைப்பு இது

Meet Cute - Anthology Web Series

வித்தியாசமான சந்திப்புகளுக்குப் பிறகு ஏற்படும் மாற்றங்கள்தான் நானி தயாரிப்பில் தீப்தி கன்டா இயக்கத்தில் சோனி லைவ்வில் வெளியாகியுள்ள ‘Meet Cute' ஆந்தாலஜியின் ஒன்லைன்.

OTT கார்னர்

In L(aw)ove

தன் மகன் காதலிக்கும் பெண்ணிடம், தான் யார் என்ற உண்மையைச் சொல்லாமல் அவளது அலுவலகத்தில் அவளைச் சந்தித்துப் பேசும் அம்மாவின் கதை இது. இந்த ஆந்தாலஜியில் சுவாரஸ்யமான திரைக்கதை கொண்ட படம் இது. மகனைவிடக் காதலிக்கு வயது அதிகம் என்பதோடு, அவள் விவாகரத்தானவள் என்றாலும்கூட அதை மனப்பக்குவத்துடன் ஏற்றுக்கொள்ளும் ரோகிணியின் நடிப்பு நெகிழ்ச்சி. அந்த மனப்பக்குவத்தை சமூகத்திற்கும் கடத்த முயன்றுள்ள இயக்குநருக்குப் பாராட்டுகள். ஆகான்ஷா சிங்கின் குட்டிக் குட்டி எக்ஸ்பிரஷன்கள் அழகு!

OTT கார்னர்

*****

Star Struck

பிரபல நடிகையின் கார் பழுதானதால் ஒரு டாக்டரின் காரில் லிஃப்ட் கேட்டுச் செல்கிறார். இருவருக்குமான உரையாடல்தான் இந்தப் படம். நடிகை ஆதா ஷர்மாவுக்கும் டாக்டர் சிவ கந்துகுரிக்கும் இடையேயான வசனங்கள் தொடக்கத்தில் நன்றாகத் தெரிந்தாலும், போகப் போக வலிந்து திணிக்கப்பட்ட நல்லியல்பை வெளிப்படுத்துகின்றன. டாக்டர் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று இந்த உலகம் எப்படி நம்பிக்கொண்டிருக்கிறதோ அப்படியே இயக்குநரும் நம்பி, அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். க்ளைமாக்ஸ் கிரிஞ்ச் மேக்ஸ்!

OTT கார்னர்

****

Meet the Boy

மேட்ரிமோனியல் மூலம் ஓர் ஆணும் பெண்ணும் ஒரு ரெஸ்டாரன்ட்டில் சந்தித்துப் பேசிக்கொள்கிறார்கள். ஆணின் ‘அல்வா’த்தனமான பேச்சுக்கு மயங்காத, காரசாரமான அந்த ‘மாடர்ன்’ பெண் என்ன முடிவு எடுத்தாள்? ஸ்வீட்டாகப் பேசி பார்வையாளர்களின் இதயத்தை இனிக்க வைத்துவிடுகிறார் மாப்பிள்ளை அஸ்வின். எத்தனை பந்துகளை வீசினாலும் அசால்ட்டாக அடித்து ஆடுகிறார் மணப்பெண் வர்ஷா பொல்லம்மா. ஃப்ளாஷ்பேக் காட்சிகள் க்ளிஷேவாக இருந்தாலும் ரசிக்கவைக்கின்றன.

OTT கார்னர்

******

Old is Gold

கணவன் இல்லாமல் தனியாகப் பயணம் செய்யவேண்டும் என்று நினைக்கும் இளம் மனைவி, எதிர்பாராதவிதமாக ஒரு முதியவரைச் சந்திக்கிறார். அப்போதைய உரையாடலால் ஏற்படும் மாற்றங்கள்தான் இதன் ஒன்லைன். ருகாணி சர்மாவுடன் சத்யராஜ் பேசும் வசனங்கள் உணர்வுபூர்வமானவை என்றாலும் சத்யராஜின் குரலுக்கு வேறொருவர் டப்பிங் என்பது ஒருவித அந்நியத்தன்மையை உண்டாக்குகிறது. ஒரு பெண் தனியாகப் பயணம் செய்ய விரும்புவதை அட்வைஸ் என்கிற பெயரில் மனம் மாற்றுவது நெருடலாகிவிடுகிறது. ருகாணி சர்மாவின் நடிப்பு ஆறுதல்!

OTT கார்னர்

*****

Ex-Girl Friend

புதிதாகத் திருமணமான கணவருடன் எப்போதும் சண்டைபோட்டுக்கொண்டிருக்கும் மனைவியை, கணவனின் முன்னாள் காதலி கடற்கரையில் சந்தித்துப் பேசுகிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது? ஓர் ஆண் குறித்து இரண்டு பெண்கள் வெவ்வேறு விதமாகப் புரிந்துவைத்திருப்பதும் விவாதிப்பதும் வித்தியாசமான பயணம். ‘பக்’கென்று முடியும் க்ளைமாக்ஸ் கொஞ்சம் எதிர்பாராததுதான். சுனைனா, சஞ்சிதா இருவருமே ஸ்கோர் செய்கிறார்கள். ஆனால், கணவனை அனுசரித்து வாழவேண்டும் என்பதை இன்னொரு பெண் மூலமே மெசேஜாகச் சொன்னது அபத்தம்!

OTT கார்னர்

All Quiet on the Western Front - Movie

OTT கார்னர்
OTT கார்னர்

எரிச் மரியா ரெமார்யூவின் நாவலைத் தழுவி உருவாகியிருக்கிறது நெட்ப்ளிக்ஸின் இந்த வார்-டிராமா திரைப்படம். முதல் உலகப் போரின் மூன்றாம் ஆண்டு. போர் குறித்த பல்வேறு கனவுகளோடு தன் பள்ளி நண்பர்களுடன் ஜெர்மனி ராணுவத்தில் சேர்கிறான் 17 வயது பால் பௌமர். ஆனால், யுத்தக்களம் நினைத்ததைவிடப் பல மடங்கு ரணமாய் இருக்கிறது. முதல் நாள் யுத்தத்திலேயே தன் நண்பனை இழக்கிறான் பால். மறுபுறம், பிரான்சுடன் அமைதி உடன்படிக்கையில் ஜெர்மனி ஈடுபடுகிறது. போர் நின்றதா, பாலுக்கு என்ன ஆனது என ரத்த சாட்சியாய் விரிகிறது கதை. காட்சிகளில் பிரமாண்டம் காட்டிய அதே நேரத்தில் எந்த நொடியிலும் உயிர் போகலாம் என்றிருக்கும் போர் வீரரின் மனநிலையை அச்சு அசலாகக் காட்சிப்படுத்துகிறது படம். பதின்வயது பால் பௌமராகவே வாழ்ந்திருக்கிறார் ஃபெலிக்ஸ் காமரர். டெக்னிக்கல் டீமின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. அதீத வன்முறைக் காட்சிகள் உண்டு என்பதால் இது நிச்சயம் இளகிய மனம் படைத்தவர்களுக்கானது அல்ல!

****

The Guardians of the Galaxy Holiday Special - Movie

OTT கார்னர்
OTT கார்னர்

கிறிஸ்துமஸை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் குட்டிப் படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இறக்கியிருக்கிறது மார்வெல். அதன் Phase four திட்டத்தின் கடைசிப் படைப்பு இது. தோர் படத்தின் லேட்டஸ்ட் பாகம் முடிந்த இடத்திலிருந்து தொடங்கும் இந்தப் படத்தில் பீட்டர் க்வில்லுக்கு கிறிஸ்துமஸை முன்னிட்டு மறக்கமுடியாத பரிசு ஒன்றைத் தர முயல்கிறார்கள் ட்ராக்ஸும் மேன்டிஸும். க்வில் பூமியிலுள்ள கெவின் பேக்கனின் தீவிர ரசிகன் எனத் தெரிந்து, அவரைக் கடத்திக்கொண்டு போய் க்வில் முன் நிறுத்துகிறார்கள். இதனால் நிகழும் காமெடி களேபரங்களே இந்த 42 நிமிட கிறிஸ்துமஸ் படத்தின் ஸ்பெஷல். ஜேம்ஸ் கன்னுக்கே உரிய நக்கல் எக்கச்சக்க இடங்களில் தெறிக்கிறது. கூடவே சின்னச் சின்ன பீல் குட் எமோஷனல் காட்சிகளும். குடும்பமாய் அனைவரும் வீக்கெண்டில் பாப்கார்ன் சகிதம் உட்கார்ந்து பார்த்து ரசிக்கலாம்.